தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எண்ணாகமம்

எண்ணாகமம் அதிகாரம் 12

1 எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: 2 கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம் பேசினாரே, எங்களைகொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். 3 மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான். 4 சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: நீங்கள் மூன்று பேரும் ஆசரிப்புக்கூடாரத்துக்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள். 5 கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள். 6 அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். 7 என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். 8 நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன என்றார். 9 கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார். 10 மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான். 11 அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும். 12 தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாதிருப்பாளாக என்றான். 13 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான். 14 கர்த்தர் மோசேயை நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார். 15 அப்படியே மிரியாம் ஏழு நாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கபட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள். 16 பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
1 எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: .::. 2 கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம் பேசினாரே, எங்களைகொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். .::. 3 மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான். .::. 4 சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: நீங்கள் மூன்று பேரும் ஆசரிப்புக்கூடாரத்துக்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள். .::. 5 கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள். .::. 6 அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். .::. 7 என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். .::. 8 நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன என்றார். .::. 9 கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார். .::. 10 மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான். .::. 11 அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும். .::. 12 தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாதிருப்பாளாக என்றான். .::. 13 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான். .::. 14 கர்த்தர் மோசேயை நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார். .::. 15 அப்படியே மிரியாம் ஏழு நாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கபட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள். .::. 16 பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள். .::.
  • எண்ணாகமம் அதிகாரம் 1  
  • எண்ணாகமம் அதிகாரம் 2  
  • எண்ணாகமம் அதிகாரம் 3  
  • எண்ணாகமம் அதிகாரம் 4  
  • எண்ணாகமம் அதிகாரம் 5  
  • எண்ணாகமம் அதிகாரம் 6  
  • எண்ணாகமம் அதிகாரம் 7  
  • எண்ணாகமம் அதிகாரம் 8  
  • எண்ணாகமம் அதிகாரம் 9  
  • எண்ணாகமம் அதிகாரம் 10  
  • எண்ணாகமம் அதிகாரம் 11  
  • எண்ணாகமம் அதிகாரம் 12  
  • எண்ணாகமம் அதிகாரம் 13  
  • எண்ணாகமம் அதிகாரம் 14  
  • எண்ணாகமம் அதிகாரம் 15  
  • எண்ணாகமம் அதிகாரம் 16  
  • எண்ணாகமம் அதிகாரம் 17  
  • எண்ணாகமம் அதிகாரம் 18  
  • எண்ணாகமம் அதிகாரம் 19  
  • எண்ணாகமம் அதிகாரம் 20  
  • எண்ணாகமம் அதிகாரம் 21  
  • எண்ணாகமம் அதிகாரம் 22  
  • எண்ணாகமம் அதிகாரம் 23  
  • எண்ணாகமம் அதிகாரம் 24  
  • எண்ணாகமம் அதிகாரம் 25  
  • எண்ணாகமம் அதிகாரம் 26  
  • எண்ணாகமம் அதிகாரம் 27  
  • எண்ணாகமம் அதிகாரம் 28  
  • எண்ணாகமம் அதிகாரம் 29  
  • எண்ணாகமம் அதிகாரம் 30  
  • எண்ணாகமம் அதிகாரம் 31  
  • எண்ணாகமம் அதிகாரம் 32  
  • எண்ணாகமம் அதிகாரம் 33  
  • எண்ணாகமம் அதிகாரம் 34  
  • எண்ணாகமம் அதிகாரம் 35  
  • எண்ணாகமம் அதிகாரம் 36  
×

Alert

×

Tamil Letters Keypad References