தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எசேக்கியேல்

எசேக்கியேல் அதிகாரம் 2

1 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார். 2 இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன். 3 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள். 4 அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு. 5 கலகவீட்டாராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும். 6 மனுபுத்திரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்பண்ணினாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார். 7 கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு. 8 மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார். 9 அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச்சுருள் இருந்தது. 10 அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.
1. அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார். 2. இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன். 3. அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள். 4. அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு. 5. கலகவீட்டாராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும். 6. மனுபுத்திரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்பண்ணினாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார். 7. கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு. 8. மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார். 9. அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச்சுருள் இருந்தது. 10. அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.
  • எசேக்கியேல் அதிகாரம் 1  
  • எசேக்கியேல் அதிகாரம் 2  
  • எசேக்கியேல் அதிகாரம் 3  
  • எசேக்கியேல் அதிகாரம் 4  
  • எசேக்கியேல் அதிகாரம் 5  
  • எசேக்கியேல் அதிகாரம் 6  
  • எசேக்கியேல் அதிகாரம் 7  
  • எசேக்கியேல் அதிகாரம் 8  
  • எசேக்கியேல் அதிகாரம் 9  
  • எசேக்கியேல் அதிகாரம் 10  
  • எசேக்கியேல் அதிகாரம் 11  
  • எசேக்கியேல் அதிகாரம் 12  
  • எசேக்கியேல் அதிகாரம் 13  
  • எசேக்கியேல் அதிகாரம் 14  
  • எசேக்கியேல் அதிகாரம் 15  
  • எசேக்கியேல் அதிகாரம் 16  
  • எசேக்கியேல் அதிகாரம் 17  
  • எசேக்கியேல் அதிகாரம் 18  
  • எசேக்கியேல் அதிகாரம் 19  
  • எசேக்கியேல் அதிகாரம் 20  
  • எசேக்கியேல் அதிகாரம் 21  
  • எசேக்கியேல் அதிகாரம் 22  
  • எசேக்கியேல் அதிகாரம் 23  
  • எசேக்கியேல் அதிகாரம் 24  
  • எசேக்கியேல் அதிகாரம் 25  
  • எசேக்கியேல் அதிகாரம் 26  
  • எசேக்கியேல் அதிகாரம் 27  
  • எசேக்கியேல் அதிகாரம் 28  
  • எசேக்கியேல் அதிகாரம் 29  
  • எசேக்கியேல் அதிகாரம் 30  
  • எசேக்கியேல் அதிகாரம் 31  
  • எசேக்கியேல் அதிகாரம் 32  
  • எசேக்கியேல் அதிகாரம் 33  
  • எசேக்கியேல் அதிகாரம் 34  
  • எசேக்கியேல் அதிகாரம் 35  
  • எசேக்கியேல் அதிகாரம் 36  
  • எசேக்கியேல் அதிகாரம் 37  
  • எசேக்கியேல் அதிகாரம் 38  
  • எசேக்கியேல் அதிகாரம் 39  
  • எசேக்கியேல் அதிகாரம் 40  
  • எசேக்கியேல் அதிகாரம் 41  
  • எசேக்கியேல் அதிகாரம் 42  
  • எசேக்கியேல் அதிகாரம் 43  
  • எசேக்கியேல் அதிகாரம் 44  
  • எசேக்கியேல் அதிகாரம் 45  
  • எசேக்கியேல் அதிகாரம் 46  
  • எசேக்கியேல் அதிகாரம் 47  
  • எசேக்கியேல் அதிகாரம் 48  
×

Alert

×

Tamil Letters Keypad References