தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
வெளிபடுத்தல்

வெளிபடுத்தல் அதிகாரம் 8

ஏழாவது முத்திரை 1 ஆட்டுக்குட்டி ஏழாவது முத்திரையை உடைத்தபொழுது விண்ணகத்தில் ஏறத்தாழ அரைமணி நேரம் அமைதி நிலவியது. 4.ஏழு எக்காளங்கள் 2 பின் கடவுள்முன் நின்று கொண்டிருந்த ஏழு வானதூதர்களைக் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன. 3 மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார். அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது. * விப 30:1,3; ஆமோ 9: 1. 4 அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது. 5 பிறகு அந்த வானதூதர் தூபக் கிண்ணத்தை எடுத்து, பலிபீடத்தில் இருந்த நெருப்பினால் அதை நிரப்பி, மண்ணுலகின்மீது வீசியெறிந்தார். உடனே இடிமுழக்கமும் பேரிரைச்சலும் மின்னலும் நிலநடுக்கமும் உண்டாயின. * விப 19:16; லேவி 16:12; எசே 10:2; திவெ 11:19; 16: 18. முதல் நான்கு எக்காளங்கள் 6 அப்பொழுது ஏழு எக்காளங்களைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும் அவற்றை முழக்க ஆயத்தமானார்கள். 7 முதல் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே இரத்தத்தோடு கலந்த கல்மழையும் நெருப்பும் நிலத்தின்மீது வந்து விழுந்தன. நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி எரிந்து போனது; மரங்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தீக்கிரையானது; பசும்புல் எல்லாமே சுட்டெரிக்கப்பட்டது. * விப 9:23-25; எசே 38: 32. 8 இரண்டாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே தீப்பற்றியெரிந்த பெரிய மலைபோன்ற ஒன்று கடலுக்குள் எறியப்பட்டது. இதனால் கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாக மாறியது. 9 கடல்வாழ் உயிரினங்களுள் மூன்றில் ஒரு பகுதி மடிந்தது; கப்பல்களுள் மூன்றில் ஒரு பகுதி அழிந்தது. 10 மூன்றாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே தீவட்டிபோன்று எரிந்துகொண்டிருந்த பெரிய விண்மீன் ஒன்று வானிலிருந்து பாய்ந்து வந்து ஆறுகளுள் மூன்றில் ஒருபகுதியிலும் நீரூற்றுகளிலும் விழுந்தது. * எசா 14: 12. 11 அந்த விண்மீனுக்கு ‘எட்டி’ என்பது பெயர். ஆகவே தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதி எட்டிபோலக் கசப்பானது. இவ்வாறு அந்தக் கசப்பான நீரைக் குடித்த மனிதர் பலர் இறந்தனர். * எரே 9: 15. 12 நான்காம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே கதிரவனின் மூன்றில் ஒரு பகுதியும் நிலாவின் மூன்றில் ஒரு பகுதியும் விண்மீன்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தாக்குண்டன. இதனால் அவற்றுள் மூன்றில் ஒரு பகுதி இருளடைந்தது; பகலின் மூன்றில் ஒரு பகுதி ஒளி குன்றியது. இரவுக்கும் அவ்வாறே ஆயிற்று. * எசா 13:10; எசே 12:7; யோவே 2:10,31; 3:15.. 13 இதன்பின் நான் ஒரு காட்சி கண்டேன். நடுவானில் பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று உரத்த குரலில், “மற்ற மூன்று வானதூதர்களும் எக்காளங்களை இதோ முழக்கவிருக்கிறார்கள். அந்தோ! உலகில் வாழ்வோர்க்கு கேடு வரும்! ஐயகோ!” என்று கத்தக் கேட்டேன்.
ஏழாவது முத்திரை 1 ஆட்டுக்குட்டி ஏழாவது முத்திரையை உடைத்தபொழுது விண்ணகத்தில் ஏறத்தாழ அரைமணி நேரம் அமைதி நிலவியது. .::. 4.ஏழு எக்காளங்கள் 2 பின் கடவுள்முன் நின்று கொண்டிருந்த ஏழு வானதூதர்களைக் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன. .::. 3 மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார். அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது. * விப 30:1,3; ஆமோ 9: 1. .::. 4 அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது. .::. 5 பிறகு அந்த வானதூதர் தூபக் கிண்ணத்தை எடுத்து, பலிபீடத்தில் இருந்த நெருப்பினால் அதை நிரப்பி, மண்ணுலகின்மீது வீசியெறிந்தார். உடனே இடிமுழக்கமும் பேரிரைச்சலும் மின்னலும் நிலநடுக்கமும் உண்டாயின. * விப 19:16; லேவி 16:12; எசே 10:2; திவெ 11:19; 16: 18. .::. முதல் நான்கு எக்காளங்கள் 6 அப்பொழுது ஏழு எக்காளங்களைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும் அவற்றை முழக்க ஆயத்தமானார்கள். .::. 7 முதல் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே இரத்தத்தோடு கலந்த கல்மழையும் நெருப்பும் நிலத்தின்மீது வந்து விழுந்தன. நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி எரிந்து போனது; மரங்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தீக்கிரையானது; பசும்புல் எல்லாமே சுட்டெரிக்கப்பட்டது. * விப 9:23-25; எசே 38: 32. .::. 8 இரண்டாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே தீப்பற்றியெரிந்த பெரிய மலைபோன்ற ஒன்று கடலுக்குள் எறியப்பட்டது. இதனால் கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாக மாறியது. .::. 9 கடல்வாழ் உயிரினங்களுள் மூன்றில் ஒரு பகுதி மடிந்தது; கப்பல்களுள் மூன்றில் ஒரு பகுதி அழிந்தது. .::. 10 மூன்றாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே தீவட்டிபோன்று எரிந்துகொண்டிருந்த பெரிய விண்மீன் ஒன்று வானிலிருந்து பாய்ந்து வந்து ஆறுகளுள் மூன்றில் ஒருபகுதியிலும் நீரூற்றுகளிலும் விழுந்தது. * எசா 14: 12. .::. 11 அந்த விண்மீனுக்கு ‘எட்டி’ என்பது பெயர். ஆகவே தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதி எட்டிபோலக் கசப்பானது. இவ்வாறு அந்தக் கசப்பான நீரைக் குடித்த மனிதர் பலர் இறந்தனர். * எரே 9: 15. .::. 12 நான்காம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே கதிரவனின் மூன்றில் ஒரு பகுதியும் நிலாவின் மூன்றில் ஒரு பகுதியும் விண்மீன்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தாக்குண்டன. இதனால் அவற்றுள் மூன்றில் ஒரு பகுதி இருளடைந்தது; பகலின் மூன்றில் ஒரு பகுதி ஒளி குன்றியது. இரவுக்கும் அவ்வாறே ஆயிற்று. * எசா 13:10; எசே 12:7; யோவே 2:10,31; 3:15.. .::. 13 இதன்பின் நான் ஒரு காட்சி கண்டேன். நடுவானில் பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று உரத்த குரலில், “மற்ற மூன்று வானதூதர்களும் எக்காளங்களை இதோ முழக்கவிருக்கிறார்கள். அந்தோ! உலகில் வாழ்வோர்க்கு கேடு வரும்! ஐயகோ!” என்று கத்தக் கேட்டேன்.
  • வெளிபடுத்தல் அதிகாரம் 1  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 2  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 3  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 4  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 5  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 6  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 7  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 8  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 9  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 10  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 11  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 12  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 13  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 14  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 15  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 16  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 17  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 18  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 19  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 20  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 21  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 22  
×

Alert

×

Tamil Letters Keypad References