தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
புஸ்தகங்கள்

Notes

No Verse Added

History

No History Found

1. வலைத்தளம் பற்றி

இந்த வலைதளம் வணிகம் சாராத, புனித விவிலியம் வேதத்தை  சார்ந்த ஒரு பைபிள் வலைத்தளம் (An Online Bible Website). இந்த வலைத்தளத்தின் நோக்கம் பல்வேறு மொழியில் வேதாகம புத்தகங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், இந்த வேதவுரையின் எழுத்துக்கள் மூலம் தெய்வீக அல்லது ஆன்மீக உண்மையை மேலானா விதத்தில் புரிதலுக்காகவும் ஏற்ப்படுதப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக, இந்திய மொழியின்  விவிலிய உரைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வலைதளம் வெளியிட்டுள்ள முக்கியமான இந்திய மொழிகள்: தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, உருது, பெங்காலி மற்றும் ஒடிசா. ஆங்கில பைபிள் பதிப்புகள் அதிக கவனம் செலுத்தபடவில்லை. இந்த வலைத்தளம் தற்போது கிங் ஜேம்ஸ் (King James Version) ஆங்கிலப்பதிப்பும், யங்கின் (Young’s Literal Translation) ஆங்கிலப்பதிப்பும்  மட்டும் வெளியிட்டுள்ளது. இந்த வலைதளத்தின் முக்கிய குறிக்கோள் விவிலிய வேதத்தின் மூல மொழியை அதன் இந்திய மொழி அர்த்தங்களுடன்  இணைத்து வெளியிடுவதாகும், அதாவது எபிரேயம் மற்றும் கிரேக்கம் பைபிள் பதிப்புகளின் மூல அர்த்தத்துடன் இந்திய மொழி நூல்களைப் படிக்க ஏதுவாக இந்த வளைதளம் உருவாக்கப்பட்டு வருகிறது.

2. வலைதளம் மைய்யமாக கொண்ட வேதவாக்கியம்: மத்தேயு 5:18

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்

- இயேசு (மத்தேயு 5:17,18)

3. வேதாகமத்தை புரிந்துகொள்வது பற்றி

பைபிள் வேதாகமத்தின் ஏழுத்துக்கள் இப்போது உள்ள நமது நிகழ்காலச் சூழலுக்கும் நம்மோடு பேசக்கூடியது, ஆனால் வேதாகமம் எழுதப்பட்ட விவிலியச் சூழலில் இருந்து நமது சூழலுக்கு விவிலிய வேதத்தைப் பற்றிய நமது புரிந்துகொள்ளுதலில் சில சிக்கல்கள் உள்ளன. வேதத்தைப் புரிந்துகொள்ள நாம் பைபிளின் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும், இதன் மூலமே நமது புரிதலுக்கான தெளிவான படத்தையும் அர்த்தத்தையும்  நாம் கொண்டு வர முடியும். பைபிளில், பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்ற இரண்டு ஏற்பாடுகள் உள்ளன. பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் சுமார் 4000 வருட வரலாற்று உண்மைச்சம்பவங்களையும், சுமார் 3000 முதல் 2500 ஆண்டுகளுக்கு முன்பு சுருளில் பதிவு செய்யப்பட்டதாகவும் இருக்கிறது. புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் சுமார் 100 வருட வரலாற்று உண்மைச்சம்பவங்களையும், சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சுருளில் பதிவு செய்யப்பட்டனவாகவும் உள்ளது. பழைய ஏற்பாடு இஸ்ரேலைப் பற்றியும் புதிய ஏற்பாடு இயேசுவையும் அவருடைய சபையைப் பற்றியும் பேசுகிறது. பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் எபிரேய மொழியிலும், புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன. 40 ஆசிரியர்கள் வெவ்வேறு புத்தகங்களை, வெவ்வேறு காலக்கட்டங்களில், வெவ்வேறு நபர்களுக்காகவும் வெவ்வேறு சூழல்களுக்காகவும் எழுதப்பட்டுள்ளது. எனவே அந்தப் பின்னணியில், நாம் நிகழ்காலச் சூழலில் வேதாகமப் புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

3.1. வேதவுரையின் பொருள்

நாம் விவிலிய வேதவுரை விளக்கத்தைப் பற்றி பேசும்போது, உண்மையைப் புரிந்துகொள்ளும் வகையில் உரையின் மெய்யானப் பொருளை விளக்குவது பற்றி பேசுகிறோம். பேசப்படும் சூழலைப் பொறுத்து ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கலாம். எனவே, பைபிளின் வேதவுரை பொருள் சூழலைப் பொறுத்தவரை முக்கியமானது. வேதவுரை அனுப்புநருக்கும் அதின் பெறுநருக்கும் இடையிலான தொடர்பு தவறாக இருக்கும்போது, வேதவுரையின் அர்த்தமும் பெறுநரால் மாற்றியமைக்கப்படுகிறது. இங்கே அனுப்புநரின் பொருள் மற்றும் பெறுநரின் பொருள், அர்த்தத்தின் இரண்டு அம்சங்களும் சம்பவக்காட்சியில் அடங்கும். புத்தகத்தின் சூழல் மற்றும் ஆசிரியரின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், இதனால் வேதவுரையின் சரியான அர்த்தம் நமக்கு கிடைக்கும்.

3.2. புரிந்துகொள்ள தடையாகவுள்ள இடைவெளி

எழுதினவருக்கும் நமக்கு இடையே உள்ள கால இடைவேளியை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகவுள்ளது. வேதாகம வார்த்தைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை. இந்த காலகட்டத்திற்கு இடையே சமூகம், மொழி மற்றும் அரசியலில் என பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆதி கால முதல் இருகின்ற தேவனால் மட்டுமே அக்கால வார்த்தையை புரிந்து கொள்ள முடியும். நாம் வெகு காலத்திற்கு பின் நடுவில் பிறந்திருக்கிறோம். நாம் ஆதியிலிருந்தும் இல்லை, எழுதப்பட்ட காலத்திலிருந்தும் இல்லை. எனவே வேதத்தைப் புரிந்துகொள்ள நாம் இடைவெளியைக் குறைக்க முயற்சி செய்யவேண்டும். மொழி, கலாச்சார, வரலாற்று மற்றும் புவியியல் இடைவெளிகள் உள்ளன. பைபிள் புத்தகங்களின் கலாச்சார மற்றும் வரலாற்று பின்னணி ஆய்வுகள் மூலம் ஒரு பாலமாக நாம் கட்டி இணைக்கலாம்.

குறிப்பு: இந்த வலைதளம் குறிப்பாக மொழி இடைவெளியை இணைக்க உருவாக்கப்பட்டுள்ளது.

3.3. வேதவுரையின் தீர்க்கதரிசன பொருளடக்கம்

வேதத்தில் குறிப்பிட்ட காலத்தைக் குறித்த தீர்க்கதரிசனம் உள்ளது. தேவன் எல்லாவற்றையும் அவருடைய வார்த்தையால் உண்டாக்கினார். இந்த உலகத்தில் தேவன் எதை செய்யவேண்டும் என்றாலும், முதலாவது அதை முன்கூட்டியே தனது தேவ தாசகர்களுக்கு அதை வெளிப்படுத்தி சொல்லி பின்தான் அதை நிறைவேற்றுவார். பழைய ஏற்பாட்டில், வரவிருக்கும் உலகளாவிய வெள்ளப்பெருக்கை பற்றி தேவன் நோவாவிடம் பேசினார் (ஆதியாகமம் 6:13), தேவன் ஆபிரகாமுடன் எதிர்காலத்தில் உன் வித்துக்குள் சகல தேச ஜனங்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று  ஆசீர்வதிக்கப்பட்ட ஆபிரகாமின் வித்தாகிய இயேசு கிறிஸ்துவை பற்றி பேசினார் (ஆதியாகமம் 22: 17-18). அதேபோல் புதிய ஏற்பாட்டில், தேவாலயத்தின் கடைசி இறுதி காலத்தைப் பற்றி தேவன் யோவான் அப்போஸ்தலரிடம் பேசினார் (வெளிப்படுத்தல். 13). தேவன் பிந்தி எதையும் யோசிப்பவர் அல்ல. உலகம் எப்படி உருவாக்கப்பட்டு, எப்படி இருக்கிறது, எதை நோக்கி செல்கிறது, எப்படி  முடிவடைய போகிறது என்பது பற்றி தேவனுக்கு முன்கூட்டியே தெரியும். ஆகையினால்தான் அவர் இந்த உலகத்தின் முடிவு மற்றும் புதிய வானம் மற்றும் புதிய பூமியைப் பற்றி முடிவைக் குறித்து தீர்க்கமாக தீர்க்கதரிசம் சொல்லியிருக்கிறார். தேவனின் சர்வாதிக்க வல்லமையே இங்குதான் நாம் உணரமுடியும். அவருடைய சர்வாதிக்கத்துவம் தீர்க்கதரிசன வார்த்தையின் நிறைவேறுதலின் மூலம் தீர்க்கமாக வெளிப்படுகிறது. எனவே தான் தீர்க்கதரிசன வர்மும் சபையின் முக்கியமான வரமாக இருக்கிறது. தேவன் வரலாற்றைக் கட்டுப்படுத்துவதால் தான் தேவன் எதிர்காலத்தை குறித்து தீர்க்கமாக சொல்ல முடிகிறது. வேதத்தில் உள்ள இந்த தீர்க்கதரிசன உறுப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் ஒரு தெளிவான வேத விளக்கத்தை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

3.4. வேதவுரையின் பொருளும் வெளிப்படுத்தப்பட வேண்டிய காலமும்

தேவதூதன் தானியேலிடம் கடைசி நாட்களில் நடக்கவிருக்கும் காரியத்தை குறித்த தரிசனத்தை காண்பித்தார். ஆனால் அனைத்து பாபிலோன் ஞானிகளிலும் சிறந்த தானியேல் அதை புரிந்து கொள்ள முடியவில்லை, எனவே அவர் அர்த்தத்தை அறிய தேவனிடத்தில் விண்ணப்பித்து வேண்விகேட்டார். தானியேலது வேண்டுகோளுக்கு தேவன் அளித்த பதில் "இது உனக்காக அல்ல, இது இறுதி காலத்தில் வரவிருக்கும் மக்கள் அறிந்துகொள்ளும்படி மறைத்து வைக்கப்பட்டுள்ளது" (தானியேல் 12: 8-9). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது தற்போதைக்கு யாருக்கும் வெளிப்படுத்தப்படாது, வரவிருக்கும் எதிர்கால சகாப்தத்தில் வெளிப்படுத்தப்படும். வேதத்தில், மேசியாவின் சகாப்தம், கிறிஸ்து இயேசுவின் சபையினுடைய சகாப்தம் மற்றும் அந்தி கிறிஸ்துவின் சகாப்தம் என குறிப்பாக மூன்று சகாப்தங்களாக பிரிக்கலாம். மூன்று சகாப்தங்களுக்கான வேத தீர்க்கதரிசனம் வேதத்தில் மறத்து வைக்கப்பட்டு பின் அந்தந்த காலத்தில் வெளிப்படுத்தப்பட்டது. இனி வரும் அந்திகிறிஸ்துவின் சகாப்தமும் இக்காலத்தில் வெளிப்படவுள்ளது. பழைய ஏற்பாட்டு மக்களுக்காக, வரவிருக்கும் மேசியாவாகிய இயேசுவைக் குறித்தது சொல்லப்பப்பட்டு அந்த எல்லா தீர்க்கதரிசனமும் இயேசு என்னும் ஒரு நபரிடத்தில் நிறைவேறின போது மேசியாவின் அல்லது கிறிஸ்துவின் இரகசியம் வெளிப்பட்டது. புறஜாதிகள் இரட்சிக்கப்படுவார்கள் என்ற தீர்க்கதரிசம் சொல்லப்பட்டு அந்த இரகசியம் சுவிஷேசத்தின் மூலம் வெளிப்பட்டது. கிறிஸ்துவுக்கு விரோதமான அக்கிரமத்தின் இரகசியம் இனி வரப்போகும்  கேட்டின் மகனாகிய அந்தி கிறிஸ்துவின் மூலம் வெளிப்படவுள்ளது. எனவே எழுதப்பட்ட எழுத்தின் பொருள் அக்காலத்தை சார்ந்ததாய் இராமல், இனி வரும் ஒரு குறிபிட்ட சகாப்தத்தை சார்த்தும் இருப்பதை ஒரு போதும் மறக்கக்கூடாது.

குறிப்பு: இந்த வலைதளத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று இந்த கடைசி கால தீர்க்கதரிசனங்களை பற்றிய விளக்கமும் அடங்கும்.

4. ஆசிரியர் மற்றும் வலைதள ஆக்கியோன் பற்றி

இந்த முழுமையான இணையதளம் மோசஸ் சி இரத்தின குமார் என்பவரால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் வடிவமைப்பு, பராமரிப்பு மற்றும் மொழி நிர்வாகத்தின் சில உதவிகள் தேவைப்படும் போதெல்லாம் மற்ற சக விசுவாசிகளிடமிருந்து சில ஆதரவுகளை பெற்று இதனை பண்படுத்திவருகிறார். அவர் தனது மதச்சார்பற்ற B.E பட்டப்படிப்பை முடித்தபின், மேலும் இறையியல் சார்ந்த P.G.Dip மற்றும் MTh பட்டங்களை இறையியல் படிப்பின் மேல் உள்ள தனது சொந்த ஆர்வத்தில் பயின்று முடித்தார். பின்னர் அவருக்கு IT -இல் முன்னபவம்  இருந்தது, எனவே அவர் HTML5, CSS3, SVG, jQuery மற்றும் JavaScript போன்ற சமீபத்திய இணைய தொழில்நுட்பங்களுடன் பொதுவான இந்திய மொழி பைபிள் வலைத்தளத்தை வெளியிட முடிவு செய்து இந்த வலைதளத்தை தாமேஉருவாக்கி விளியிட்டார். டைனமிக் செயல்முறைக்கு அவர் PHP 7 மற்றும் mySQL 10 ஐப் பயன்படுத்தியுள்ளார். 

×

Alert

×

tamil Letters Keypad References