TOV
4. கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால், இத்தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
ERVTA
4. மேலும், “கானான் நாட்டில் பஞ்சம் அதிகம். எங்கள் மிருகங்களுக்கு அங்கே புல் மிகுந்த வயல் எதுவுமே இல்லை. எனவே, இங்கே வாழ்வதற்காக வந்துள்ளோம். கோசேனில் வாழ அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.
IRVTA
4. கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாததால், இந்த தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்க தயவுசெய்யவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள்.
ECTA
4. கானான் நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருப்பதாலும், உம் பணியாளர்களாகிய எங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாது போனதாலும், சிறிதுகாலம் இந்நாட்டில் தங்கி இருக்க வந்திருக்கிறோம். உம் பணியாளர்களாகிய நாங்கள் கோசேன் பகுதியில் தற்போதைக்குக் குடியிருக்க இசைவு தருமாறு வேண்டுகிறோம்" என்றனர்.
RCTA
4. உம் நாட்டிலே குடியிருக்க வந்தோம். ஏனென்றால், கானான் நாட்டிலே மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டதால், அடியோர்களின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமல் போயிற்று. அடியோர்கள் யேசேன் நாட்டில் தங்கியிருக்கும்படி உத்தரவளிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம் என்றனர்.
OCVTA
4. மேலும் அவர்கள் பார்வோனிடம், “கானான் நாட்டில் பஞ்சம் கொடியதாய் இருப்பதால், உமது அடியாரின் மந்தைக்கு மேய்ச்சல் நிலம் இல்லை. ஆகையால், தயவுசெய்து உமது அடியாராகிய எங்களைக் கோசேனில் குடியிருக்க அனுமதியும்” என்றார்கள்.