சங்கீதம் 87 : 1 (TOV)
அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.
சங்கீதம் 87 : 2 (TOV)
கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
சங்கீதம் 87 : 3 (TOV)
தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா)
சங்கீதம் 87 : 4 (TOV)
என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
சங்கீதம் 87 : 5 (TOV)
சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
சங்கீதம் 87 : 6 (TOV)
கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா)
சங்கீதம் 87 : 7 (TOV)
எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்.

1 2 3 4 5 6 7

BG:

Opacity:

Color:


Size:


Font: