சங்கீதம் 52 : 1 (TOV)
தாவீது அபிமேலேக்கின் வீட்டுக்கு வந்தானென்று ஏதோமியனாகிய தோவேக்கு வந்து சவுலுக்கு அறிவித்தபின்பு தாவீதினால் பாடப்பட்டு இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீஸ் என்னும் சங்கீதம் பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.
சங்கீதம் 52 : 2 (TOV)
நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
சங்கீதம் 52 : 3 (TOV)
நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யாதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா)
சங்கீதம் 52 : 4 (TOV)
கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்;
சங்கீதம் 52 : 5 (TOV)
தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா)
சங்கீதம் 52 : 6 (TOV)
நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து:
சங்கீதம் 52 : 7 (TOV)
இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.
சங்கீதம் 52 : 8 (TOV)
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
சங்கீதம் 52 : 9 (TOV)
நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.
❮
❯