சங்கீதம் 124 : 1 (TOV)
தாவீது பாடின ஆரோகண சங்கீதம் மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,
சங்கீதம் 124 : 2 (TOV)
கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,
சங்கீதம் 124 : 3 (TOV)
அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.
சங்கீதம் 124 : 4 (TOV)
அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
சங்கீதம் 124 : 5 (TOV)
கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
சங்கீதம் 124 : 6 (TOV)
நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
சங்கீதம் 124 : 7 (TOV)
வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
சங்கீதம் 124 : 8 (TOV)
நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.
❮
❯