எஸ்றா 2 : 1 (TOV)
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
எஸ்றா 2 : 2 (TOV)
செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:
எஸ்றா 2 : 3 (TOV)
பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
எஸ்றா 2 : 4 (TOV)
செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
எஸ்றா 2 : 5 (TOV)
ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
எஸ்றா 2 : 6 (TOV)
யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
எஸ்றா 2 : 7 (TOV)
ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
எஸ்றா 2 : 8 (TOV)
சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
எஸ்றா 2 : 9 (TOV)
சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
எஸ்றா 2 : 10 (TOV)
பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
எஸ்றா 2 : 11 (TOV)
பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
எஸ்றா 2 : 12 (TOV)
அஸ்காதின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர்.
எஸ்றா 2 : 13 (TOV)
அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
எஸ்றா 2 : 14 (TOV)
பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
எஸ்றா 2 : 15 (TOV)
ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்குபேர்.
எஸ்றா 2 : 16 (TOV)
எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.
எஸ்றா 2 : 17 (TOV)
பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
எஸ்றா 2 : 18 (TOV)
யோராகின் புத்திரர் நூற்றுப் பன்னிரண்டுபேர்.
எஸ்றா 2 : 19 (TOV)
ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
எஸ்றா 2 : 20 (TOV)
கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.
எஸ்றா 2 : 21 (TOV)
பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர்.
எஸ்றா 2 : 22 (TOV)
நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
எஸ்றா 2 : 23 (TOV)
ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
எஸ்றா 2 : 24 (TOV)
அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.
எஸ்றா 2 : 25 (TOV)
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
எஸ்றா 2 : 26 (TOV)
ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர்.
எஸ்றா 2 : 27 (TOV)
மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
எஸ்றா 2 : 28 (TOV)
பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
எஸ்றா 2 : 29 (TOV)
நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.
எஸ்றா 2 : 30 (TOV)
மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர்.
எஸ்றா 2 : 31 (TOV)
மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
எஸ்றா 2 : 32 (TOV)
ஆரீமின் புத்திரர் முந்நூற்றுஇருபதுபேர்.
எஸ்றா 2 : 33 (TOV)
லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
எஸ்றா 2 : 34 (TOV)
எரிகோவின் புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.
எஸ்றா 2 : 35 (TOV)
சேனாகின் புத்திரர் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
எஸ்றா 2 : 36 (TOV)
ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
எஸ்றா 2 : 37 (TOV)
இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
எஸ்றா 2 : 38 (TOV)
பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
எஸ்றா 2 : 39 (TOV)
ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.
எஸ்றா 2 : 40 (TOV)
லேவியரானவர்கள்: ஒதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்து நான்குபேர்.
எஸ்றா 2 : 41 (TOV)
பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
எஸ்றா 2 : 42 (TOV)
வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.
எஸ்றா 2 : 43 (TOV)
நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,
எஸ்றா 2 : 44 (TOV)
கேரோசின் புத்திரர், சீயாகாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,
எஸ்றா 2 : 45 (TOV)
லெபானாகின் புத்திரர், அகாபாவின் புத்திரர், அக்கூபின் புத்திரர்,
எஸ்றா 2 : 46 (TOV)
ஆகாபின் புத்திரர், சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர்,
எஸ்றா 2 : 47 (TOV)
கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர்,
எஸ்றா 2 : 48 (TOV)
ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர்,
எஸ்றா 2 : 49 (TOV)
ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர், பேசாயின் புத்திரர்,
எஸ்றா 2 : 50 (TOV)
அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர்,
எஸ்றா 2 : 51 (TOV)
பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,
எஸ்றா 2 : 52 (TOV)
பஸ்லூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,
எஸ்றா 2 : 53 (TOV)
பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர் தாமாவின் புத்திரர்,
எஸ்றா 2 : 54 (TOV)
நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே.
எஸ்றா 2 : 55 (TOV)
சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,
எஸ்றா 2 : 56 (TOV)
யாலாகின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,
எஸ்றா 2 : 57 (TOV)
செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின் புத்திரருமே.
எஸ்றா 2 : 58 (TOV)
நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
எஸ்றா 2 : 59 (TOV)
தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
எஸ்றா 2 : 60 (TOV)
தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
எஸ்றா 2 : 61 (TOV)
ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்சநாமம் தரிக்கப்பட்ட பர்சிலாயின் புத்திரரே.
எஸ்றா 2 : 62 (TOV)
இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
எஸ்றா 2 : 63 (TOV)
ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத் தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
எஸ்றா 2 : 64 (TOV)
சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
எஸ்றா 2 : 65 (TOV)
அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
எஸ்றா 2 : 66 (TOV)
அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து,
எஸ்றா 2 : 67 (TOV)
அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
எஸ்றா 2 : 68 (TOV)
வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
எஸ்றா 2 : 69 (TOV)
அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
எஸ்றா 2 : 70 (TOV)
ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல்காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70

BG:

Opacity:

Color:


Size:


Font: