1 நாளாகமம் 24 : 1 (TOV)
ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
1 நாளாகமம் 24 : 2 (TOV)
நாதாபும், அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
1 நாளாகமம் 24 : 3 (TOV)
தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் புத்திரரையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் புத்திரரையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்துக்கு முறைப்படி அவர்களை வகுத்தான்.
1 நாளாகமம் 24 : 4 (TOV)
அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.
1 நாளாகமம் 24 : 5 (TOV)
எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.
1 நாளாகமம் 24 : 6 (TOV)
லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 24 : 7 (TOV)
முதலாவாது சீட்டு யோயாரீபின் பேர்வழிக்கும் இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும்,
1 நாளாகமம் 24 : 8 (TOV)
மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,
1 நாளாகமம் 24 : 9 (TOV)
ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும், ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும்,
1 நாளாகமம் 24 : 10 (TOV)
ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,
1 நாளாகமம் 24 : 11 (TOV)
ஒன்பதாவது யெசுவாவின் பேர்வழிக்கும், பத்தாவது செக்கனியாவின் பேர்வழிக்கும்,
1 நாளாகமம் 24 : 12 (TOV)
பதினோராவது எலியாசீபின் பேர்வழிக்கும், பன்னிரண்டாவது யாக்கீமின் பேர்வழிக்கும்,
1 நாளாகமம் 24 : 13 (TOV)
பதின்மூன்றாவது உப்பாவின் பேர்வழிக்கும், பதினான்காவது எசெபெயாபின் பேர்வழிக்கும்,
1 நாளாகமம் 24 : 14 (TOV)
பதினைந்தாவது பில்காவின் பேர்வழிக்கும், பதினாறாவது இம்மேரின் பேர்வழிக்கும்,
1 நாளாகமம் 24 : 15 (TOV)
பதினேழாவது ஏசீரின் பேர்வழிக்கும், பதினெட்டாவது அப்சேசின் பேர்வழிக்கும்,
1 நாளாகமம் 24 : 16 (TOV)
பத்தொன்பதாவது பெத்தகியாவின் பேர்வழிக்கும், இருபதாவது எகெசெக்கியேலின் பேர்வழிக்கும்,
1 நாளாகமம் 24 : 17 (TOV)
இருபத்தோராவது யாகினின் பேர்வழிக்கும், இருபத்திரண்டாவது காமுவேலின் பேர்வழிக்கும்,
1 நாளாகமம் 24 : 18 (TOV)
இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவது மாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 24 : 19 (TOV)
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்கள் தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின் பிரகாரம், தங்கள் முறைவரிசைகளில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் அவர்களுடைய ஊழியத்திற்காகப் பண்ணப்பட்ட வகுப்புகள் இவைகளே.
1 நாளாகமம் 24 : 20 (TOV)
லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
1 நாளாகமம் 24 : 21 (TOV)
ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும்,
1 நாளாகமம் 24 : 22 (TOV)
இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும்,
1 நாளாகமம் 24 : 23 (TOV)
எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அம்ரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,
1 நாளாகமம் 24 : 24 (TOV)
ஊசியேலின் குமாரரில் மீகாவும், மீகாவின் குமாரரில் சாமீரும்,
1 நாளாகமம் 24 : 25 (TOV)
மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் குமாரரில் சகரியாவும்,
1 நாளாகமம் 24 : 26 (TOV)
மெராரியின் குமாரராகிய மகேலி, மூசி என்பவர்களும், யாசியாவின் குமாரனாகிய பேனோவும்,
1 நாளாகமம் 24 : 27 (TOV)
மெராரியின் குமாரனாகிய யாசியாவின் குமாரரான பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
1 நாளாகமம் 24 : 28 (TOV)
மகேலியின் குமாரரில் புத்திரனில்லாத எலெயாசாரும்,
1 நாளாகமம் 24 : 29 (TOV)
கீசின் புத்திரரில் யெராமியேலும்,
1 நாளாகமம் 24 : 30 (TOV)
மூசியின் குமாரரான மகேலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.
1 நாளாகமம் 24 : 31 (TOV)
இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச் சீட்டுப் போட்டுக்கொண்டார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

BG:

Opacity:

Color:


Size:


Font: