சகரியா 11 : 1 (RCTA)
லீபானே, உன் வாயில்களைத் திற, நெருப்பு உன் கேதுரு மரங்களை எரிக்கட்டும்.
சகரியா 11 : 2 (RCTA)
தேவதாரு மரங்களே, புலம்பியழுங்கள்; ஏனெனில் கேதுரு மரங்கள் வீழ்ந்தன, சிறந்த மரங்கள் பாழாயின. பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே, புலம்பியழுங்கள்; ஏனெனில் அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.
சகரியா 11 : 3 (RCTA)
ஆயர்களின் புலம்பல் கேட்கிறது, ஏனெனில் அவர்கள் பெருமை பாழாகிவிட்டது; சிங்கங்களின் கர்ச்சனை கேட்கிறது, ஏனெனில் யோர்தான் காடு அழிக்கப்பட்டது.
சகரியா 11 : 4 (RCTA)
என் கடவுளாகிய ஆண்டவர் கூறிய வாக்கு இதுவே: "அடிக்கப்படப்போகும் ஆடுகளை மேய்;
சகரியா 11 : 5 (RCTA)
அவற்றை வாங்குகிறவர்கள் அவற்றைக் கொல்லுகிறார்கள்; ஆயினும் அவர்களுக்குத் தண்டனை கிடைப்பதில்லை; அவற்றை விற்கிறவர்களோ, 'ஆண்டவர்க்குப் புகழ் உண்டாவதாக! எங்களுக்குச் செல்வம் சேர்ந்தது' என்று சொல்லுகிறார்கள்; அவற்றின் சொந்த இடையர்களே அவற்றின் மீது இரக்கம் காட்டுகிறதில்லை.
சகரியா 11 : 6 (RCTA)
இனி, இந்த நாட்டில் வாழ்கிறவர்கள் மேல் நாம் இரக்கம் காட்டமாட்டோம், என்கிறார் ஆண்டவர். இதோ, ஒவ்வொருவனையும் அவன் அயலானுடைய கையிலும், அரசனுடைய கையிலும் சிக்கும்படி, மனிதர்களை நாம் கையளிக்கப்போகிறோம்; அவர்கள் நாட்டைப் பாழ்படுத்துவார்கள்; அவர்கள் கையிலிருந்து யாரையும் நாம் தப்புவிக்கமாட்டோம்."
சகரியா 11 : 7 (RCTA)
அவ்வாறே கொல்லப்படப்போகிற ஆடுகளை நான் ஆட்டு வணிகருக்காக மேய்க்கும் ஆயனானேன். நான் இரண்டு கோல்களை எடுத்து, 'பரிவு' என்று ஒன்றுக்கும், 'ஒன்றிப்பு' என்று மற்றதற்கும் பெயரிட்டேன்; ஆடுகளை மேய்த்து வந்தேன்.
சகரியா 11 : 8 (RCTA)
ஒரே மாதத்தில் நான் மூன்று இடையர்களை அகற்றினேன்; அவர்களை என்னால் பொறுக்க முடியவில்லை; அவர்களும் என்னை வெறுத்தார்கள்.
சகரியா 11 : 9 (RCTA)
ஆகையால், "உங்களை இனி நான் மேய்க்கப் போவதில்லை; சாகிறது சாகட்டும், அழிக்கப்படுவது அழிக்கப்படட்டும்; எஞ்சியிருப்பவை ஒன்றன் சதையை மற்றொன்று பிடுங்கித் தின்னட்டும்" என்று சொல்லி,
சகரியா 11 : 10 (RCTA)
'பரிவு' என்கிற என் கோலையெடுத்து, மக்களினங்கள் யாவற்றுடனும் நான் செய்திருந்த உடன்படிக்கை முறியும்படி கோலை ஒடித்துப் போட்டேன்.
சகரியா 11 : 11 (RCTA)
அன்றே உடன்படிக்கை முறிந்தது; என்னைக் கவனித்துக் கொண்டிருந்த ஆட்டு வணிகர், இது ஆண்டவரின் வாக்கு என்பதை உணர்ந்து கொண்டார்கள்.
சகரியா 11 : 12 (RCTA)
அப்போது நான் அவர்களைப் பார்த்து, "உங்களுக்குச் சரியென்றுபட்டால், எனக்குக் கூலி கொடுங்கள்; இல்லையேல், வேண்டாம்" என்று சொன்னேன். அப்போது அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிப் பணங்களை நிறுத்தனர்.
சகரியா 11 : 13 (RCTA)
ஆண்டவர் என்னைப் பார்த்து, "சிறந்த மதிப்பாக உன்னை மதிப்பிட்டு அவர்கள் கொடுத்த இப்பணத்தைக் கருவூலத்தில் எறிந்து விடு" என்றார். அவ்வாறே அந்த முப்பது வெள்ளிப் பணங்களை ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் போட்டு விட்டேன்.
சகரியா 11 : 14 (RCTA)
யூதாவுக்கும் இஸ்ராயேலுக்கும் இருந்த சகோதர ஒருமைப்பாடு முறியும்படி, 'ஒன்றிப்பு' என்னும் என் இரண்டாம் கோலையும் ஒடித்துப் போட்டேன்.
சகரியா 11 : 15 (RCTA)
பின்பு ஆண்டவர் எனக்குக் கூறிய வாக்கு இதுவே: "இன்னொரு முறை மதியற்ற இடையனுக்குரிய கருவிகளை எடுத்துக் கொள்.
சகரியா 11 : 16 (RCTA)
ஏனெனில் இதோ, அழிந்து போவதைக் காப்பாற்றாதவனும், காணாமற் போனதைக் தேடாதவனும், காயம் பட்டதைக் குணமாக்காதவனும், நலமுடனிருப்பதை உண்பிக்காதவனும், ஆனால் கொழுத்தவற்றின் இறைச்சியைத் தின்பவனும், அவற்றின் குளம்புகளைக் கூடத் தறிப்பவனாகிய ஓர் இடையனை இந்த நாட்டில் தோன்றச் செய்வோம்.
சகரியா 11 : 17 (RCTA)
மந்தையைக் கைவிடுகிற பயனற்ற இடையனுக்கு ஐயோ கேடு! அவன் கையையும் வலக்கண்ணையும் வாள் வெட்டுவதாக! அவனுடைய கை முற்றும் உலர்ந்து போகட்டும், அவனது வலக்கண் இருண்டு குருடாகட்டும்! "

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17