உன்னதப்பாட்டு 7 : 1 (RCTA)
தலைமகன்: இரண்டு சேனைகளுக்கிடையில் ஆடும் நாட்டியத்தைப் போல் சூலமித்தியை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? அரசிளம் கன்னிப் பென்னே! மிதியடியணிந்த உன் மெல்லடிகள் எவ்வளவு அழகுள்ளவை! வளைந்த உன் இடை கைதேர்ந்த பொற்கொல்லனால் செய்யப்பட்ட கழுத்தணிக்கு ஒப்பானது.
உன்னதப்பாட்டு 7 : 2 (RCTA)
உன் கொப்பூழ் கலப்பு இரசம் குறையாதிருக்கும் கடைந்தெடுத்த கலசம் போன்றது; உன் வயிறு லீலிகள் சூழ்ந்திருக்கும் கோதுமை மணியின் குவியலை ஒக்கும்.
உன்னதப்பாட்டு 7 : 3 (RCTA)
உன் கொங்கைகள் இரண்டும் இரண்டு இளமான்கள், வெளிமான் ஈன்ற இரட்டைக் கன்றுகள்.
உன்னதப்பாட்டு 7 : 4 (RCTA)
உன் கழுத்து யானைத் தந்தத்தாலான கோபுரம், பாத்- ராபிம் வாயிலின் அருகே எசெபோனிலிருக்கும் குளங்களையொக்கும் உன் கண்கள். உன் மூக்கு தமஸ்கு நகரை நோக்கியிருக்கும் லீபானின் கோபுரத்துக்கு நிகரானது.
உன்னதப்பாட்டு 7 : 5 (RCTA)
உன் தலை கர்மேல் மலை போல் நிமிர்ந்துள்ளது, உன் கூந்தல் செம்பட்டாடையொக்கும், அந்தப் புரிகுழலில் அரசன் ஒருவன் சிறைப்பட்டான்.
உன்னதப்பாட்டு 7 : 6 (RCTA)
உள்ளத்திற்கு இன்பந் தரும் அன்பே, நீ எத்துணை அழகும் இனிமையும் வாய்ந்தவள்!
உன்னதப்பாட்டு 7 : 7 (RCTA)
உனது வளர்த்தி ஓங்கிய பனையாம், உன் முலைகள் இரண்டும் அதன் குலைகளாம்.
உன்னதப்பாட்டு 7 : 8 (RCTA)
பனை மரமேறி நான் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; உன் முலைகள் திராட்சைக் குலைகள் போன்றவை, உன் மூச்சு கிக்சிலிப் பழங்கள் போல் இனிய மணமுள்ளது,
உன்னதப்பாட்டு 7 : 9 (RCTA)
உன் பேச்சு சுவை மிகுந்த திராட்சை ரசம். தலைமகள்: அந்த இரசம் என் காதலர் குடிப்பதற்குத் தகுதியானது; உதடுகளுக்கும் பற்களுக்கும் நடுவில் நின்று சுவை தருகிறது.
உன்னதப்பாட்டு 7 : 10 (RCTA)
நான் என் காதலர்க்குரியவள், அவர் ஆர்வமெல்லாம் என் மேலே.
உன்னதப்பாட்டு 7 : 11 (RCTA)
என் காதலரே, வாரும், வயல்களுக்குப் போவோம்; சிற்றூர்களில் இராத் தங்குவோம்.
உன்னதப்பாட்டு 7 : 12 (RCTA)
வைகறையில் துயிலெழுந்து நாம் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்; திராட்சைக் கொடிகள் பூத்தனவா என்றும், திராட்சைப் பூக்கள் மலர்ந்தனவா என்றும், மாதுளஞ் செடிகள் பூ விட்டனவா என்றும் பார்ப்போம்; அங்கே உம் மேல் என் காதலைப் பொழிவேன்.
உன்னதப்பாட்டு 7 : 13 (RCTA)
காதற் பழங்களின் மணம் கமழுகின்றது, புதியனவும் பழையனவுமான சிறந்த கணிகள் நம் வீட்டு வாயிலண்டையில் இருக்கின்றன; என் காதலரே, உமக்கென்றே அவற்றைச் சேர்த்து வைத்தேன்.
❮
❯