உன்னதப்பாட்டு 6 : 1 (RCTA)
(5:17) பாடகர்க்குழு: பெண்களிலெல்லாம் பேரழகியே, உன் காதலர் உங்கே போய்விட்டார்? நாங்களும் உன்னோடு சேர்ந்து அவரைத் தேடுவோம், உன் காதலர் எப்பக்கம் திரும்பினார்? சொல்.
உன்னதப்பாட்டு 6 : 2 (RCTA)
(1) தலைமகள்: என் காதலர் தோட்டத்தில் தம்முடைய மந்தையை மேய்க்கவும் லீலிகளைக் கொய்யவும் நறுமணச் செடிகளின் பாத்திகளுக்குத் தம் தோட்டத்திற்குள் ஏகினார்.
உன்னதப்பாட்டு 6 : 3 (RCTA)
(2) என் காதலர் எனக்குரியர், நான் அவருக்குரியவள்; அவர் தம் மந்தையை லீலிகள் நடுவில் மேய்க்கிறார்.
உன்னதப்பாட்டு 6 : 4 (RCTA)
(3) ஐந்தாம் கவிதை: தலைமகன்: என் அன்பே, நீ திர்சாவைப்போல் அழகுள்ளவள், யெருசலேமைப் போல் வனப்பு மிக்கவள்; அணிவகுத்த படை போல் அச்சந் தருபவள்.
உன்னதப்பாட்டு 6 : 5 (RCTA)
(4) என்னிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக் கொள், உன் பார்வை என்னை மயக்குகிறது. உனது கருங் கூந்தல் கலாத் மலைச்சரிவில் செல்லும் வெள்ளாட்டு மந்தையை ஒத்துள்ளது.
உன்னதப்பாட்டு 6 : 6 (RCTA)
(5) மயிர் கத்திரித்தபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறும் ஆட்டு மந்தை போன்றவை உன் பற்கள்; அவ்வாடுகள் எல்லாம் இரட்டைக்குட்டி போட்டன, அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
உன்னதப்பாட்டு 6 : 7 (RCTA)
(6) உன் முகத்திரைக்குப் பின் இருக்கும் கன்னங்கள் வெடித்த மாதுளம் பழத்தையொக்கும்.
உன்னதப்பாட்டு 6 : 8 (RCTA)
(7) அரசியர்கள் அறுபது பேர், வைப்பாட்டிகள் எண்பது பேர்; கன்னிப் பெண்களுக்குக் கணக்கில்லை.
உன்னதப்பாட்டு 6 : 9 (RCTA)
(8) எண் வெண்புறா, என் நிறையழகி ஒருத்தியே. தாய்க்கு ஒரே மகள், பெற்றவளுக்குச் செல்லப் பிள்ளை. கன்னிப் பெண்கள் அவளைக் கண்டு பேறு பெற்றவள் என்று வாழ்த்தினர்; அரசியர்களும் வைப்பாட்டிகளுங் கூட அவளைப் பார்த்துப் புகழ்ந்தனர்.
உன்னதப்பாட்டு 6 : 10 (RCTA)
(9) விடிவேளை வானம் போல் எட்டிப்பார்க்கும் இவள் யார்? நிலாவைப் போல் அழகுள்ளவள், கதிரவனைப் போல் ஒளிமிக்கவள், அணிவகுத்த படை போல் அச்சம் தருகிறாளே!"
உன்னதப்பாட்டு 6 : 11 (RCTA)
(10) பள்ளத்தாக்கில் தளிர்த்தவற்றைப் பார்க்கவும், திராட்சைக் கொடிகள் பூத்தனவா என்று காணவும், மாதுள மரங்கள் பூ வைத்தனவா என்றறியவும், வாதுமை மரச் சோலைக்குள் சென்றேன்.
உன்னதப்பாட்டு 6 : 12 (RCTA)
(11) நான் உணருமுன்பே என் ஆவல் என் இனத்தாரின் தலைவனாய் என்னைத் தேர் மேல் ஏற்றிற்று.
உன்னதப்பாட்டு 6 : 13 (RCTA)
(12) பாடகர்க்குழு: திரும்பு, சூலமித்தியே, இப்படித் திரும்பு, உன் அழகை நாங்கள் பார்க்கும்படி திரும்பு, பெண்ணே, திரும்பு.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13