உன்னதப்பாட்டு 1 : 1 (RCTA)
உன்னதப்பாட்டு 1 : 2 (RCTA)
(1) தலைமகள்: தம் வாயின் முத்தங்களால் அவர் என்னை முத்தமிடுவாராக! ஏனெனில் உம்முடைய காதல் திராட்சை இரசத்திலும் இனிமை மிக்கது
உன்னதப்பாட்டு 1 : 3 (RCTA)
(2) உம்முடைய பரிமளத்தின் மணம் இனிமையானது; உமது பெயர் ஊற்றப்பெற்ற தைலம்; ஆதலால் கன்னிப் பெண்கள் உம் மேல் அன்புகூர்கின்றனர்.
உன்னதப்பாட்டு 1 : 4 (RCTA)
(3) என்னை உம் பின்னால் கவர்ந்திழும், ஓடிடுவோம்; அரசர் என்னைத் தம் அறைகளுக்குள் கூட்டிச் சென்றார்; உம்மில் நாங்கள் களிகூர்ந்து அக்களிப்போம்; திராட்சை இரசத்தினும் மேலாய் உம் காதலைப் பாடிடுவோம்; உம்மேல் பலர் அன்பு கொள்வது சரியே.
உன்னதப்பாட்டு 1 : 5 (RCTA)
(4) முதற் கவிதை: தலைமகள்: யெருசலேமின் மங்கையரே, கேதாரின் கூடாரங்களைப் போலவும், சாலமோனின் எழினிகளைப் போலவும் நான் கறுப்பாயினும் கட்டழகியே.
உன்னதப்பாட்டு 1 : 6 (RCTA)
(5) நான் கறுப்பாயிருக்கிறே னென்பதைக் கவனிக்காதீர்கள்; வெயிலால் தான் என் முகம் கன்றிப் போனது; என் தாயின் புதல்வர்கள் என் மேல் சினங் கொண்டு திராட்சைத் தோட்டத்திற்கு என்னைக் காவல் வைத்தனர்; ஆனால் என் சொந்தத் தோட்டத்தை நான் காக்கவில்லை!
உன்னதப்பாட்டு 1 : 7 (RCTA)
(6) என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரே, உமது மந்தையை நீர் எங்கே மேய்க்கிறீர்? நண்பகலில் எங்கே அடையப் போடுகிறீர்? உம்முடைய தோழர்களின் மந்தைகளைப் பின்தொடர்ந்து நான் அலைந்து திரியாதபடி எனக்குத் தெரியப்படுத்தும்.
உன்னதப்பாட்டு 1 : 8 (RCTA)
(7) பாடகர்க்குழு: பெண்களுள் பேரழகியே, உனக்குத் தெரியாதாயின், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்து போய் இடையர்களின் கூடாரங்களுக்கு அருகிலே உன் ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடுக!
உன்னதப்பாட்டு 1 : 9 (RCTA)
(8) தலைமகன்: என் அன்பே, பாரவோன் தேர்களில் பூட்டிய புரவிக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
உன்னதப்பாட்டு 1 : 10 (RCTA)
(9) உன்னுடைய கன்னங்கள் அணிகலன்களாலும், உன் கழுத்து ஆரங்களாலும் அழகு கொழிக்கின்றன.
உன்னதப்பாட்டு 1 : 11 (RCTA)
(10) வெள்ளி பதிக்கப்பட்ட பொன்னணிகளை நாங்கள் உனக்குச் செய்திடுவோம்.
உன்னதப்பாட்டு 1 : 12 (RCTA)
(11) அரசர் தம் மஞ்சத்தில் அமர்ந்திருக்கையில், என் பரிமளத் தைலம் நறுமணம் பரப்புகிறது;
உன்னதப்பாட்டு 1 : 13 (RCTA)
(12) என் காதலர் எனக்கு என் கொங்கைகளுக்கிடையில் தங்கும் வெள்ளைப்போள முடிப்பாவார்;
உன்னதப்பாட்டு 1 : 14 (RCTA)
(13) என் காதலர் எனக்கு எங்காதி திராட்சைத் தோட்டங்களில் மலர்ந்த மருதோன்றி மலர்க்கொத் தாவார்.
உன்னதப்பாட்டு 1 : 15 (RCTA)
(14) என்னே உன் அழகு! என் அன்பே! என்னே உன் அழகு! உன்னுடைய கண்களோ வெண் புறாக்கள்.
உன்னதப்பாட்டு 1 : 16 (RCTA)
(15) என் காதலரே, நீர் எத்துணை அழகுள்ளவர்! எத்துணை இனிமை வாய்ந்தவர்! நமது படுக்கை மலர்ப் படுக்கை.
உன்னதப்பாட்டு 1 : 17 (RCTA)
(16) நமது வீட்டின் விட்டங்கள் கேதுரு மரங்களே, நம்முடைய மச்சுகள் தேவதாரு மரங்களாம்.
❮
❯