ரோமர் 6 : 1 (RCTA)
அப்படியானால் என்ன சொல்வோம்? அருள் பெருகும்படி பாவத்தில் நிலைத்திருப்போம் என்போமா? ஒருகாலும் இல்லை.
ரோமர் 6 : 2 (RCTA)
பாவத்திற்கு இறந்துவிட்ட நாம் எவ்வாறு இன்னும் அதிலேயே வாழ்ந்துகொண்டிருக்க முடியும்?
ரோமர் 6 : 3 (RCTA)
கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்திற்குள் ஞானஸ்நானம் பெற்றோம் என்பதை அறியீர்களா?
ரோமர் 6 : 4 (RCTA)
ஆகவே, இறந்தோரிடமிருந்து கிறிஸ்து பரம தந்தையின் மாட்சிமையால் எழுதப்பட்டதுபோல நாமும் புத்துயிர் பெற்றவர்களாய் வாழும்படி ஞானஸ்நானத்தின் வழியாய் அவரோடு இறந்து புடைக்கப்பட்டோம்.
ரோமர் 6 : 5 (RCTA)
ஏனெனில், அவருடைய மரணத்தின் சாயலைத் தாங்கி, அவரோடு பொருத்தி இணைக்கப்பட்டால், உயிர்த்தெழுதலின் சாயலையும் தாங்கி, அவரோடு இணைக்கப்படுவோம்.
ரோமர் 6 : 6 (RCTA)
நாம் இனிப் பாவத்துக்கு அடிமையாய் இராதபடி பாவத்துக்கு உட்பட்ட உடல் அழிந்து போகுமாறு நம்முடைய பழைய இயல்பு அவரோடு சிலுவையில் அறையுண்டது என்பது நமக்குத் தெரியும்.
ரோமர் 6 : 7 (RCTA)
செத்தவன் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டான் அன்றோ?
ரோமர் 6 : 8 (RCTA)
கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நம் விசுவாசம்;
ரோமர் 6 : 9 (RCTA)
இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார். இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்லர் என்று நாம் அறிந்திருக்கிறோம்.
ரோமர் 6 : 10 (RCTA)
அவர் சாவுக்குள்ளானார்; அந்தச் சாவு பாவத்தின் ஆளுகைக்கு உட்பட்ட வாழ்க்கையை ஒரே முறையில் எக்காலத்திற்கும் ஒழித்துவிட்ட சாவு அவர் வாழ்கிறார்; அந்த வாழ்வு கடவுளுக்காக வாழும் வாழ்வு
ரோமர் 6 : 11 (RCTA)
அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொருத்தமட்டில் செத்தவர்கள்; கிறிஸ்து இயேசுவுக்குள் கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என எண்ணிக்கொள்ளுங்கள்.
ரோமர் 6 : 12 (RCTA)
ஆகவே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம், சாவுக்குரிய உங்கள் உடலில் ஆட்சி செலுத்தாதிருப்பதாக.
ரோமர் 6 : 13 (RCTA)
நீங்களோ உங்கள் உறுப்புக்களைத் தீமைசெய்யும் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்படைக்காதீர்கள்; மாறாக, இறந்தோர்களிடமிருந்து உயிர்த்து வாழ்கிறவர்களாய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகள் இருக்கட்டும்.
ரோமர் 6 : 14 (RCTA)
பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்துதல் ஆகாது; நீங்கள் சட்டத்தின் அதிகாரத்தில் இல்லை; இறையருளின் அதிகாரத்திலே இருக்கிறீர்கள்.
ரோமர் 6 : 15 (RCTA)
ஆகவே, என்ன சொல்வோம்? சட்டத்தின் அதிகாரத்தில் இல்லாமல், இறையருளின் அதிகாரத்தில் இருப்பதால் நாம் பாவம் செய்யலாம் என்போமா? ஒருகாலும் இல்லை.
ரோமர் 6 : 16 (RCTA)
எவனுக்குக் கீழ்ப்படிந்து அடிமைகளாக உங்களைக் கையளிக்கிறீர்களோ, அவனுக்கு நீங்கள் அடிமை என்பது உங்களுக்குத் தெரியாதா ? சாவுக்கு உட்படுத்தும் பாவத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்கள் பாவத்துக்கு அடிமைகள். இறைவனுக்கு ஏற்புடையவராக்கும் கீழ்ப்படிதலுக்கு உட்பட்டால், நீங்கள் அதற்கு அடிமைகள்.
ரோமர் 6 : 17 (RCTA)
ஆனால், முன்னே பாவத்தின் அடிமைகளாய் இருந்த நீங்கள் உங்களிடம் கையளிக்கப்பட்ட படிப்பினையின் ஒழுங்குக்கு முழு மனத்துடன் கீழ்ப்படிந்தீர்கள்; இதற்காகக் கடவுளுக்கு நன்றி.
ரோமர் 6 : 18 (RCTA)
பாவத்தினின்று நீங்கள் விடுதலை பெற்று, இறைவனுக்கு ஏற்புடைய நிலைக்கு உங்களை அடிமைகள் ஆக்கிக் கொண்டீர்கள்.
ரோமர் 6 : 19 (RCTA)
நீங்கள் வலுவற்ற மனிதத் தன்மையுள்ளவர்கள் என்பதை மனத்திற்கொண்டு, மனிதர் பேசும் முறையில் பேசுகிறேன்; அக்கிரமத்தில் ஆழ்த்தும் அசுத்தத்திற்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை முன்பு நீங்கள் அடிமைகள் ஆக்கியிருந்தீர்கள்; அதுபோல இப்பொழுது பரிசுத்தத்தில் மலரும் ஏற்புடைய வாழ்வுக்கு உங்கள் உறுப்புகளை உட்படுத்திக்கொள்ளுங்கள்.
ரோமர் 6 : 20 (RCTA)
நீங்கள் பாவத்தின் அடிமைகளாய் இருந்தபோது இறைவனுக்கு ஏற்புடைய நிலைக்கு அடிமைகள் ஆகாதிருந்தீர்கள்.
ரோமர் 6 : 21 (RCTA)
இப்பொழுது உங்களை நாணச் செய்யும் செயல்களையே நீங்கள் அப்போது செய்துவந்தீர்கள்; அவற்றால் நீங்கள் கண்ட பலன் யாது? அவற்றின் முடிவு சாவே
ரோமர் 6 : 22 (RCTA)
ஆனால், 'இப்பொழுது பாவத்தினின்று விடுதலைபெற்றுக் கடவுளின் அடிமைகள் ஆனீர்கள்; இதனால் உங்களுக்குக் கிடைத்துள்ள பலன் நீங்கள் பரிசுத்தர்கள் ஆவதே; அதன் முடிவு முடிவில்லா வாழ்வு.
ரோமர் 6 : 23 (RCTA)
ஏனெனில், பாவம் கொடுக்கும் கூலி சாவு, கடவுள் அளிக்கும் அருட்கொடையோ நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் முடிவில்லா வாழ்வு

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

BG:

Opacity:

Color:


Size:


Font: