ரோமர் 4 : 1 (RCTA)
அப்படியானால், நம் இனத்தின் தந்தையாகிய ஆபிரகாமைப் பற்றி என்ன சொல்வோம்?
ரோமர் 4 : 2 (RCTA)
ஆபிரகாம், செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவராயிருந்தால், பெருமை பாராட்ட இடமுண்டு; ஆனால் கடவுளின் முன் பெருமை பாராட்ட இடமில்லை.
ரோமர் 4 : 3 (RCTA)
ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன? 'ஆபிரகாம் கடவுளை விசுவசித்தார்; அதனால் கடவுள் அவரைத் தமக்கு ஏற்புடையவரென மதித்தார்.'
ரோமர் 4 : 4 (RCTA)
வேலை செய்தவன் வாங்கும் கூலி நன்கொடை என்று மதிக்கப்படுவதில்லை, உரிமை என்றே மதிக்கப்படும்.
ரோமர் 4 : 5 (RCTA)
உரிமை பாராட்டுதற்குரிய செயல் புரியாத ஒருவன், பாவியைத் தமக்கு ஏற்புடையவன் ஆக்குபவர் மீது விசுவாசம் வைத்தால், அவ்விசுவாசத்தை முன்னிட்டு இறைவன் அவனை ஏற்புடையவன் என மதிக்கிறார்.
ரோமர் 4 : 6 (RCTA)
அவ்வாறே, செயல்கள் இன்றியே, தமக்கு ஏற்புடையவன் எனக் கடவுள் மதிக்கும் மனிதன் பேறுபெற்றவன் என்று தாவீது கூறுகிறார். அவர் சொல்லுவது:
ரோமர் 4 : 7 (RCTA)
'யாருடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டனவோ யாருடைய பாவங்கள் அகற்றப்பட்டனவோ அவர்கள் பேறு பெற்றோர்.
ரோமர் 4 : 8 (RCTA)
யாருடைய பாவத்தை ஆண்டவர் கணிப்பதில்லையோ அவன் பேறு பெற்றோன்'.
ரோமர் 4 : 9 (RCTA)
இனி, பேறு பெற்றவன் என்னும் அந்த ஆசிமொழி விருத்தசேதனம் உள்ளவனுக்கு மட்டுமா? இல்லாதவனுக்கும் கூடவா? 'ஆபிரகாமின் விசுவாசத்தை முன்னிட்டு இறைவன் அவரைத் தமக்கு ஏற்புடையவரென மதித்தார்' என்கிறோமே, அவர் எந்த நிலையில் இருக்கும்போது இறைவன் அவ்வாறு மதித்தார்?
ரோமர் 4 : 10 (RCTA)
விருத்தசேதனம் செய்து கொண்ட நிலையிலா? செய்துகொள்ளாத நிலையிலா?
ரோமர் 4 : 11 (RCTA)
விருத்தசேதனம் செய்துகொண்ட நிலையிலன்று; செய்து கொள்ளாத நிலையில் தான் விருத்தசேதனம் இல்லாத நிலையிலேயே அவர் விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவரானார்; அதற்கு முத்திரையாகவே விருத்தசேதனத்தை அடையாளமாகப் பெற்றார். இவ்வாறு விருத்தசேதனம் இல்லாதிருந்தும், இறைவனுக்கு ஏற்புடையவராக மதிக்கப்படும் முறையில் விசுவசிக்கிற யாவருக்கும் அவர் தந்தையானார்.
ரோமர் 4 : 12 (RCTA)
விருத்தசேதனம் இருந்தும், அதுவே, போதுமென்றிராமல் விசுவாசம் கொள்கிறவர்களுக்கும் தந்தையானார்; ஏனெனில், நம் தந்தையாம் ஆபிரகாம் விருத்தசேதனம் பெறுமுன்பே விசுவசித்தது போல அவர்களும் விசுவசித்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்றனர்.
ரோமர் 4 : 13 (RCTA)
உலகமே அவருக்கு உரிமையாகும் என்ற வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவர் வழி வந்தவர்களுக்கோ திருச்சட்டத்தின் வழியாய்க் கிடைக்கவில்லை; விசுவாசத்தினால் அவர் இறைவனுக்கு ஏற்புடையவரானதால்தான், அவ்வாக்குறுதி கிடைத்தது,
ரோமர் 4 : 14 (RCTA)
ஏனெனில், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குத்தான் அந்த அந்த உரிமை எனின், விசுவாசம் பொருளற்றுப்போயிற்று; வாக்குறுதியும் வெறுமையாகி விட்டது.
ரோமர் 4 : 15 (RCTA)
ஏனெனில், திருச் சட்டம் இறைவனின் சினத்திற்கு வழியாகிறது; எங்கே சட்டம் இல்லையோ அங்கே மீறுதல் இல்லை.
ரோமர் 4 : 16 (RCTA)
ஆகவே, யாவும் அருளின்,, செயலாய் விளங்கும்படி, விசுவாசம் அனைத்திற்கும் அடிப்படையாயிற்று; இவ்வாறு ஆபிரகாமின் வழி வந்தவர்கள் எல்லாருக்கும் வாக்குறுதி செல்லக் கூடியதாயிற்று. ஆபிரகாமின் வழி வந்தவர்கள் எனக்குறிக்கப்படுகிறவர்கள் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்கள் மட்டும் அல்லர். அவரைப்போல் விசுவாசம் கொண்டவர்களும் ஆவர்.
ரோமர் 4 : 17 (RCTA)
ஏனெனில், பல இனத்தார்க்குத் தந்தையாக உன்னை எற்படுத்தினேன்' என்று எழுதியுள்ளவாறு ஆபிரகாம் நம்மனைவர்க்கும் தந்தையானார், ஆம், இறந்தவர்களை வாழ்வளிக்கிறவரும், இல்லாததைத் தம் சொல்லால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மேல் விசுவாசம் வைத்து, அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். அந்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்டார்.
ரோமர் 4 : 18 (RCTA)
'உன் வழி வருவோர் இத்துணை மிகுதியாய் இருப்பர்' எனச் சொல்லப்பட்டது. அது நிறைவேறும் என்ற நம்பிக்கைக்கு இடம் இல்லாதததுபோல் தோன்றினும், அவர் நம்பிக்கை கொண்டார்; விசுவசித்தார்; ஆகவே அந்த வாக்குறுதிக்கேற்பப் பல இனத்தார்க்குத் தந்தையானார்.
ரோமர் 4 : 19 (RCTA)
தமக்கு ஏறத்தாழ நூறு வயது ஆனதால் தம் உடல் ஆற்றலற்றுப் போனதையும், சாராளுடைய சூலகத்தின் ஆற்றலின்மையையும் எண்ணிப் பார்த்தபோதும். அவர் விசுவாசத்தில் உறுதி தளரவில்லை. அவிசுவாசம் கொள்ளவில்லை;
ரோமர் 4 : 20 (RCTA)
கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவுமில்லை; விசுவாசத்தில் அவர் மேலும் வலிமை பெற்றார், கடவுளை மகிமைப்படுத்தினார்.
ரோமர் 4 : 21 (RCTA)
ஏனெனில், தாம் வாக்களித்ததை இறைவன் செய்ய வல்லவர் என்பதை உறுதியாய் அறிந்திருந்தார்.
ரோமர் 4 : 22 (RCTA)
ஆகவே, 'இறைவனுக்கு ஏற்புடையவரென மதிக்கப்பட்டார் '.
ரோமர் 4 : 23 (RCTA)
ஏற்புடையவரென மதிக்கப்பட்டார் என்பது அவரை மட்டும் குறிக்கவில்லை;. நம்மையும் குறிக்கின்றது;
ரோமர் 4 : 24 (RCTA)
நம் ஆண்டவராகிய இயேசுவை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தவர் மீது விசுவாசம் வைத்திருக்கும் நாமும் அவ்வாறு ஏற்புடையவரென மதிக்கப்படுவோம்.
ரோமர் 4 : 25 (RCTA)
இவர் நம் குற்றங்களுக்காகக் கையளிக்கப்பட்டார். நாம் இறைவனுக்கு ஏற்புடையவராகும்படி உயிர்ப்பிக்கப்பெற்றார்.
❮
❯