ரோமர் 3 : 1 (RCTA)
'அப்படியானால், மற்றவர்களைவிட யூதனுக்குக் கிடைத்த நன்மை என்ன'? விருத்தசேதனத்தால் பயன் என்ன? எவ்வகையிலும் பெரிதே.
ரோமர் 3 : 2 (RCTA)
முதலாவது கடவுளின் திருமொழி அவர்களிடம் தான் ஒப்படைக்கப்பட்டது.
ரோமர் 3 : 3 (RCTA)
சரி, ஆனால், சிலர் அத்திருமொழியில் பற்றுறுதி கொள்ளவில்லையே; அவ்வுறுதியின்மையால் கடவுளுடைய சொல்லுறுதி வெறுமையாகிவிடுமோ?
ரோமர் 3 : 4 (RCTA)
ஒருக்காலுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர், கடவுளோ, உண்மை உள்ளவர் என்பது வெளியாகவேண்டும். ஏனெனில், 'உமது சொல்லில் நீர் குற்றமற்றவராய் விளங்குவீர், நீர் தீர்ப்பிடப்படும்போது வெற்றி பெறுவீர்'. என எழுதியுள்ளதன்றோ?
ரோமர் 3 : 5 (RCTA)
நம்முடைய அநீதி கடவுளுடைய நேர்மையை விளங்கச் செய்யுமாயின், நாம் என்ன சொல்வோம்? கடவுள் சினந்தொழுந்து தண்டித்தால், அவர் அநீதர் என்போமோ ? - இதை நான் மனிதர் பேசும் முறையில் சொல்லுகிறேன் - ஒருகாலுமில்லை.
ரோமர் 3 : 6 (RCTA)
கடவுள் அநீதர் என்போமாயீன் எப்படி அவர் உலகத்திற்குத் தீர்ப்பிடக்கூடும்?
ரோமர் 3 : 7 (RCTA)
என்னுடைய பொய்ம்மை கடவுளின் உண்மையைத் துலங்கச் செய்து, அவரது மகிமையை அதிகரிக்கிறதென்றால் ஏன் நான் இன்னும் பாவி எனத் தண்டனைத் தீர்ப்புப் பெறவேண்டும்?
ரோமர் 3 : 8 (RCTA)
அப்படியானால், 'நன்மை விளையுமாறு தீமையைச் செய்வோம்' என்று சொல்லாலாமே. நான் அவ்வாறு கூறுவதாகச் சிலர் என்மீது வீண் பழி சுமத்துகின்றனர். இவர்கள் தண்டனைத் தீர்ப்புப் பெறுவது நீதியே.
ரோமர் 3 : 9 (RCTA)
அப்படியானால் மற்றவர்களைவிட யூதர்கள் தாம் மேலானவர்களா? இல்லவே இல்லை. ஏனெனில் யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்தின் பிடியிலுள்ளதாக ஏற்கெனவே எண்பித்தாயிற்று.
ரோமர் 3 : 10 (RCTA)
அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: 'இறைவனுக்கு ஏற்புடையவனே இல்லை, ஒருவன் கூட இல்லை:
ரோமர் 3 : 11 (RCTA)
உணர்வுள்ளவன் ஒருவனுமில்லை, கடவுளைத் தேடுபவன் எவனுமில்லை.
ரோமர் 3 : 12 (RCTA)
எல்லாரும் நெறி பிறழ்ந்தனர். ஒருங்கே கெட்டுப்போயினர்; நன்மை செய்பவன் எவனுமில்லை, ஒருவன் கூட இல்லை.
ரோமர் 3 : 13 (RCTA)
அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி, அவர்களது நாக்கு வஞ்சனையே பேசிற்று. அவர்கள் உதட்டில் பாம்பின் நஞ்சுள்ளது.
ரோமர் 3 : 14 (RCTA)
வாயில் சாபமும் கசப்பும் நிரம்பியுள்ளது,
ரோமர் 3 : 15 (RCTA)
இரத்தம் சிந்துவதென்றால் அவர்கள் கால்கள் விரைகின்றன;
ரோமர் 3 : 16 (RCTA)
அவர்கள் கால்கள் படும் இடத்தில் அழிவும் துயருமே உண்டு,
ரோமர் 3 : 17 (RCTA)
அமைதியின் நெறியோ அவர்களுக்குத் தெரியவில்லை,
ரோமர் 3 : 18 (RCTA)
அவர்கள் மனத்தில் கடவுள் அச்சம் என்பதில்லை '.
ரோமர் 3 : 19 (RCTA)
திருச்சட்டம் சொல்வதெல்லாம், அதற்கு உட்பட்டவர்களுக்கே பொருந்தும் என்று நமக்குத் தெரியும். சாக்குச் சொல்லாமல் அனைவருடைய வாயையும் அடைக்கவும், உலகம் முழுவதையும் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக்கவுமே திருச்சட்டம் இருக்கிறது.
ரோமர் 3 : 20 (RCTA)
ஏனெனில், திருச்சட்டம் விதித்திருப்பதைச் செய்வதால் மட்டும், எம்மனிதனும் இறைவன் முன்னிலையில் ஏற்புடையவன் ஆவதில்லை. ஏனெனில் சட்டத்தின் வழியாக உண்டாவது பாவத்தை உணர்த்தும் அறிவே.
ரோமர் 3 : 21 (RCTA)
இப்பொழுதோ கடவுளின் திருவருட் செயல்முறை திருச்சட்டத்தின் சார்பின்றியே வெளியாக்கப்பட்டுள்ளது; அச்செயல்முறையையே திருச்சட்டமும் இறைவாக்கினரும் முன்னறிவித்தனர்.
ரோமர் 3 : 22 (RCTA)
இத்திருவருட் செயல்முறை இயேசு கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தின் வழியாய்ச் செயலாற்றுவதாகும்., விசுவசிக்கும் அனைவருக்காகவுமே இது செயலாற்றுகிறது. இதில் இன வேறுபாடே இல்லை. ஏனெனில், எல்லாருமே பாவம் செய்தனர்.
ரோமர் 3 : 23 (RCTA)
எல்லாருமே கடவுளது மாட்சிமையின் சாயலின்றி உள்ளனர்.
ரோமர் 3 : 24 (RCTA)
ஆனால் இறைவன் அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகிறார்கள்; கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய விடுதலைச் செயலின் வாயிலாய் அங்ஙனம் ஆக்கப்படுகிறார்கள்.
ரோமர் 3 : 25 (RCTA)
விசுவாசத்தின் வழியாய்ச் செயல்படும் பரிகாரச்சாதனமாக அவரைக் கடவுள் இரத்தப் பலியாக்கினார். கடந்த காலத்தில் தம்முடைய திருவருட் செயல்முறையைக் காட்ட விரும்பிய கடவுள் பொறுமையாய் இருந்து, மனிதர் செய்த பாவங்களைத் தண்டிக்காமல் விட்டார்.
ரோமர் 3 : 26 (RCTA)
இக்காலத்திலோ, அத்திருவருட் செயல்முறையைக் காட்ட விரும்பி, அவர் அருள் மிக்கவராகவும், இயேசுவில் விசுவாசம் கொள்பவன் தமக்கு ஏற்புடையவன் ஆகும்படி அருள் அளிப்பவராகவும் விளங்குகிறார்.,
ரோமர் 3 : 27 (RCTA)
அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா ? இல்லை; விசுவாசத்தின் அடிப்படையில் என்க.
ரோமர் 3 : 28 (RCTA)
ஏனெனில், திருச்சட்டம் விதித்திருக்கும் செயல்களின்றியே மனிதன் விசுவாசத்தினாலே இறைவனுக்கு ஏற்புடையவனாக்கப்படுகின்றான் என்பது என் கருத்து.
ரோமர் 3 : 29 (RCTA)
கடவுள் யூதர்களுக்கு மட்டுமே கடவுளா? புறவினத்தாருக்கும் கடவுள் அல்லரா? ஆம், புறவினத்தாருக்கும் அவர் கடவுளே,
ரோமர் 3 : 30 (RCTA)
ஏனெனில், விருத்தசேதனம் பெற்றவர்களை விசுவாசித்தினாலும், விருத்த சேதனம் பெறாதவர்களை விசுவாசத்தின் வழியாகவும், தமக்கு ஏற்புடையவர்களாக்கும் கடவுள் ஒருவரே.
ரோமர் 3 : 31 (RCTA)
அப்படியானால், விசுவாசத்தின் வழியாய்த் திருச்சட்டத்தை வெறுமை ஆக்குகிறோமோ? ஒருகாலும் இல்லை. அதற்கு மாறாக, திருச்சட்டத்தை நிலைநாட்டுகிறோம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

BG:

Opacity:

Color:


Size:


Font: