ரோமர் 16 : 1 (RCTA)
நாம் சகோதரியாகிய பெபேயாளை அன்போடு ஏற்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்; இப்பெண்மணி கெங்கிரோயாவில் இருக்கும் சபைக்குத் திருப்பணி புரிகிறவர்.
ரோமர் 16 : 2 (RCTA)
இறை மக்களுக்கு ஏற்றவாறு ஆண்டவரின் பெயரால் அவரை வரவேற்று, அவருக்கு உங்கள் உதவி எதில் தேவைப்படுகிறதோ அதில் பலருக்குத் துணை செய்திருக்கிறார்; எனக்கும் உதவி செய்திருக்கிறார்.
ரோமர் 16 : 3 (RCTA)
கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடனுழைப்பாளிகளான பிரிஸ்காளுக்கும் ஆக்கிலாவுக்கும் என் வாழ்த்து.
ரோமர் 16 : 4 (RCTA)
இவர்கள் என் உயிரைக் காக்கத் தங்கள் தலையைக் கொடுக்கவும் முன் வந்தனர்; அவர்களுக்கு நான் நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்; நான் மட்டுமன்று, புறவினத்தார் நடுவில் உள்ள சபைகள் அனைத்தும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன.
ரோமர் 16 : 5 (RCTA)
அவர்கள் வீட்டிலிருக்கும் சபைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.
ரோமர் 16 : 6 (RCTA)
என் அன்புக்குரிய எப்பைனத்துக்கும் வாழ்த்துக் கூறுங்கள். இவரே ஆசியாவிலிருந்து கிடைத்த முதற்கனி. உங்களுக்காக மிக உழைத்த மரியாளுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்.
ரோமர் 16 : 7 (RCTA)
என் உறவினரும் உடன் கைதிகளுமான அந்திரோனீக்கு, யூனியா ஆகியோருக்கும் என் வாழ்த்துகள்; அப்போஸ்தலர்களுள் இவர்கள் பேர்பெற்றவர்கள்; இவர்கள் எனக்கு முன் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.
ரோமர் 16 : 8 (RCTA)
ஆண்டவருக்குள் என் அன்பார்ந்த அம்பிலியாத்துக்கு என் வாழ்த்துகள்.
ரோமர் 16 : 9 (RCTA)
கிறிஸ்துவுக்குள் என் உடனுழைப்பாளியான உர்பானுக்கும், என் அன்புள்ள ஸ்தாக்கிக்கும் வாழ்த்து சொல்லுங்கள்.
ரோமர் 16 : 10 (RCTA)
அப்பெல்லேயுக்கும் என் வாழ்த்து; அவர் ஓர் உண்மையான கிறிஸ்தவர். அரிஸ்தோபூலு குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவியுங்கள்.
ரோமர் 16 : 11 (RCTA)
என் உறவினரான எரோதியோனுக்கு வாழ்த்து சொல்லுங்கள். நர்க்கீசு குடும்பத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு என் வாழ்த்து, ஆண்டவருக்குள் உழைக்கும் திரிபோனாளுக்கும், திரிபோசாளுக்கும் என் வாழ்த்து.
ரோமர் 16 : 12 (RCTA)
அன்புள்ள பெர்சியாளுக்கும் என் வாழ்த்துகள். அவர்கூட ஆண்டவருக்குள் மிக உழைத்தார்.
ரோமர் 16 : 13 (RCTA)
ஆண்டவருக்குள் தேர்ந்துகொள்ளப்பட்ட ரூபுக்கும், அவர் தாயாருக்கும் வாழ்த்து கூறுங்கள். அவருடைய அன்னை எனக்கும் அன்னை போன்றவர்.
ரோமர் 16 : 14 (RCTA)
அசிங்கிரீத்து, பிலெகோன்,. எர்மே, பத்திரொபா, எர்மா ஆகியோருக்கும் அவர்களோடு இருக்கும் சகோதரர்களுக்கும் வாழ்த்து தெரிவியுங்கள்.
ரோமர் 16 : 15 (RCTA)
பிலோலோகு, யூலியாள், ஒலிம்பா, நேரேயா, அவருடைய சகோதரி, இவர்களுக்கும் இவர்களோடு இருக்கும் இறைமக்கள் எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள். பரிசுத்த முத்தங் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்.
ரோமர் 16 : 16 (RCTA)
கிறிஸ்துவின் எல்லாச் சபைகளும் உங்களுக்கு வாழ்த்து கூறுகின்றன.
ரோமர் 16 : 17 (RCTA)
சகோதரர்களே, நான் உங்களை வேண்டுவது: நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறி, பிளவுகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர் மேல் கண்ணாயிருங்கள்.
ரோமர் 16 : 18 (RCTA)
அவர்களை விட்டு விலகுங்கள். ஏனெனில் இத்தகையோர் நம் ஆண்டவராகிய கிறிஸ்துவுக்கு அடிமைகள் அல்லர், தங்களுடைய வயிற்றுக்கே அடிமைகள். இவர்கள் தங்கள் இனிய சொற்களாலும், நயமான மொழிகளாலும் கபடமற்றவர்களின் உள்ளங்களை வஞ்சிக்கிறார்கள்.
ரோமர் 16 : 19 (RCTA)
உங்கள் கீழ்ப்படிதல் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. அது எனக்கு மகிழ்ச்சியே. நீங்கள் நன்மை செய்வதில் ஞானிகளாகவும், தீமை செய்வதில் பேதைகளாகவும் இருக்கவேண்டுமென விழைகிறேன்.
ரோமர் 16 : 20 (RCTA)
சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் சாத்தானை உங்கள் காலடிகளின் கீழ் விரைவில் நசுக்கிப் போடுவார். நம் ஆண்டவராகிய இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக!
ரோமர் 16 : 21 (RCTA)
என் உடனுழைப்பாளியான தீமோத்தேயுவும், என் உறவினர்களான லூகியு. யாசோன்., சொசிபத்தரு ஆகியோரும் உங்களுக்கு வாழ்த்து கூறுகின்றனர்.
ரோமர் 16 : 22 (RCTA)
இந்தக் கடிதத்தை எழுதிக்கொடுத்த தெர்த்தியுவாகிய நான் ஆண்டவருக்குள் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறேன்.
ரோமர் 16 : 23 (RCTA)
நான் தங்கவும் சபையினர் கூடவும் தம் வீட்டில் இடமளிக்கும் காயு உங்களுக்கு வாழ்த்து சொல்கிறார்.
ரோமர் 16 : 24 (RCTA)
நகரத்தின் பொருளாளரான எரஸ்தும், சகோதரனாகிய குவர்த்துவும். உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.
ரோமர் 16 : 25 (RCTA)
ஊழி ஊழிக் காலமாக மறைவாயிருந்து இப்பொழுது வெளியாக்கப்பட்டு முடிவில்லாக் கடவுளின் திட்டத்திற்கொப்ப,
ரோமர் 16 : 26 (RCTA)
புறவினத்தார் அனைவரும் கீழ்ப்படிந்து விசுவசிக்குமாறு இறைவாக்குகளின் மூலமாய் அறிவிக்கப்பட்ட மறைபொருளை வெளிப்படுத்தும் என் நற்செய்தியின்படியும்,
ரோமர் 16 : 27 (RCTA)
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தூதுரையின்படியும், உங்களை உறுதிப்படுத்த வல்லவரும் ஞானமே உருவும் ஆன கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மகிமை உண்டாவதாக! ஆமென்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

BG:

Opacity:

Color:


Size:


Font: