ரோமர் 14 : 1 (RCTA)
விசுவாசத்தில் எவனாவது வலுவற்றவனாய் இருந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவன் எழுப்பும் கேள்விகளைப்பற்றி வாதாடாதீர்கள்.
ரோமர் 14 : 2 (RCTA)
விசுவாசத்தில் உறுதியாய் உள்ள ஒருவன் எவ்வகை உணவையும் உண்ணலாம் எனக் கருதுகிறான். விசுவாசத்தில் வலுவில்லா வேறொருவனோ மரக்கறி உணவை மட்டும் உண்கிறான்.
ரோமர் 14 : 3 (RCTA)
புலால் உண்பவன், உண்ணாதவனை இழிவாக எண்ணலாகாது; புலால் உண்ணாதவன் உண்பவனைக் குறித்துத் தீர்ப்பிடலாகாது. ஏனெனில் கடவுள் அவனையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
ரோமர் 14 : 4 (RCTA)
வேறொருவருடைய வேலையாளைக் குறித்துத் தீர்ப்பிட நீ யார்? அவன் நிலையாய் நின்றாலும் தவறி விழுந்தாலும், அதைப்பற்றித் தீர்ப்பிடுவது அவனுடைய தலைவரே. ஆனால் அவன் நிலையாகத் தான் இருப்பான். ஏனெனில் ஆண்டவர் அவனை நிலைநிறுத்த வல்லவர்.
ரோமர் 14 : 5 (RCTA)
ஒருநாள் மற்றொரு நாளைவிடச் சிறந்ததென ஒருவன் கருதுகிறான்; ஒருவன் எல்லா நாளையும் ஒரு படியாகவே எண்ணுகிறான். ஒவ்வொருவனும் தன் மனத்தில் செய்துகொண்ட உறுதியான முடிவின்படி நடக்கட்டும்.
ரோமர் 14 : 6 (RCTA)
மேற்சொன்னவாறு நாளைக் கணிப்பவன் ஆண்டவருக்காகவே அப்படிச் செய்கிறான். புலால் உண்பவனும் ஆண்டவருக்காக உண்கிறான்; கடவுளுக்கு நன்றி கூறுகிறான் அன்றோ? புலால் உண்ணாதவனும் ஆண்டவருக்காகவே உண்ணாதிருக்கிறான்; அவனும் கடவுளுக்கு நன்றி கூறுகிறான்.
ரோமர் 14 : 7 (RCTA)
ஏனெனில், நம்முள் எவனும் தனக்கென்று வாழ்வதில்லை. தனக்கென்று சாவதில்லை.
ரோமர் 14 : 8 (RCTA)
வாழ்ந்தாலும் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம், செத்தாலும் ஆண்டவருக்கென்றே சாகிறோம். ஆகவே வாழ்ந்தாலும் செத்தாலும் நாம் ஆண்டவர்க்கே உரியவர்களாய் இருக்கிறோம்.
ரோமர் 14 : 9 (RCTA)
ஏனெனில் கிறிஸ்து இறந்ததும் உயிர்த்ததும் இறந்தோர் மீதும் வாழ்வோர் மீதும் ஆட்சி செலுத்தவே.
ரோமர் 14 : 10 (RCTA)
அப்படியிருக்க, நீ ஏன் உன் சகோதரனைக் குறித்துத் தீர்ப்பிடுகிறாய்? நீ உன் சகோதரனை ஏன் இழிவாகக் கருதுகிறாய்? நாம் அனைவரும் கடவுளின் நீதியிருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா?
ரோமர் 14 : 11 (RCTA)
ஏனெனில், ''ஆண்டவர் சொல்வது: என் உயிர்மேல் ஆணை, என் முன் எல்லாரும் மண்டியிடுவர், எல்லா நாவுமே கடவுளைப் புகழ்ந்தேத்தும்' என்று எழுதியுள்ளது.
ரோமர் 14 : 12 (RCTA)
ஆகவே., நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பான்.
ரோமர் 14 : 13 (RCTA)
ஆகையால், இனி ஒருவரைக் குறித்து ஒருவர் தீர்ப்பிடுவதை விட்டுவிடுவோமாக. மாறாக, சகோதரனுக்கு இடைஞ்சலாகவோ. இடறலாகவோ இருக்கமாட்டோம் எனத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.
ரோமர் 14 : 14 (RCTA)
தன்னிலேயே எப்பொருளும் மாசுபட்டதன்று; ஆண்டவர் இயேசுவுக்குள் வாழும் எனக்கு இதைப்பற்றி ஐயமே இல்லை. ஆனால் ஒரு பொருள் மாசுபட்டது என ஒருவன் கருதினால், அது அவனுக்கு மாசுபட்டதாகும்.
ரோமர் 14 : 15 (RCTA)
நீ உண்ணும் உணவு உன் சகோதரன் மனத்தைப் புண்படுத்தினால், நீ அன்பு நெறியில் நடப்பவன் அல்ல. அற்ப உணவை முன்னிட்டு அவனை அழிவுறச் செய்யாதே; அவனுக்காகக் கிறிஸ்து உயிர்துறக்க வில்லையா?
ரோமர் 14 : 16 (RCTA)
ஆகவே, உங்களுக்கு நன்மையாய் இருப்பது பிறருடைய பழிச் சொல்லுக்கு இடந்தராதிருப்பதாக!
ரோமர் 14 : 17 (RCTA)
ஏனெனில் கடவுளின் அரசு உணவிலும் பானத்திலும் அடங்கியில்லை; கடவுளின் அரசு என்பது நீதியும், அமைதியும், பரிசுத்த ஆவியில் துய்க்கும் மகிழ்ச்சியுமே.
ரோமர் 14 : 18 (RCTA)
இத்தகைய உள்ளத்தோடு கிறிஸ்துவுக்கு ஊழியஞ் செய்கிறவனே, கடவுளுக்கு உகந்தவன். மக்கள் மதிப்புக்கு உரியவன்.
ரோமர் 14 : 19 (RCTA)
ஆகையால், அமைதிக்கு வழியாய் இருப்பதை நாடுவோமாக; ஒருவர் ஒருவர்க்கு ஞானவளர்ச்சி தருவதைக் கடைப்பிடிப்போமாக.
ரோமர் 14 : 20 (RCTA)
உணவின் பொருட்டுக் கடவுளின் வேலையைத் தகர்க்கத் துணியாதே; யாவும் தூயவைதான்; ஆனால் இடைஞ்சலுக்கு இடந்தருமானால், உண்பவனுக்கு யாவும் தீயவையே.
ரோமர் 14 : 21 (RCTA)
உன் சகோதரனுக்கு யாவும் தீயவையே. உன் சகோதரனுக்கு இடைஞ்சலாயிருக்குமாயின், புலால் உண்பதையோ, மது குடிப்பதையோ அது போன்ற வேறெதையும் செய்வதையோ செய்யாமல் விடுவது நல்லது.
ரோமர் 14 : 22 (RCTA)
விசுவாசத்தால் வரும் உறுதியான மனநிலை உனக்கிருந்தால், அதை உன்னோடு வைத்துக் கொள்; அது கடவுளுக்கு மட்டும் தெரிந்திருக்கட்டும்., செய்வது நல்லதென முடிவு செய்த பின், அதைச் செய்யும் போது மனச்சாட்சியின் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவன் பேறு பெற்றவன்.
ரோமர் 14 : 23 (RCTA)
நல்லதோ கெட்டதோ என்ற தயக்கத்தோடு ஒருவன் உண்பானாகில் அவன் தண்டனைத் தீர்ப்புப் பெற்றுவிட்டான். ஏனெனில், அச்செயல் விசுவாசத்தால் வரும் உறுதியான மனநிலையோடு செய்யப்படாததெல்லாம் பாவமே.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23