ரோமர் 10 : 1 (RCTA)
சகோதரர்களே, அவர்கள் மீட்படைய வேண்டுமென்றே, என் உள்ளம் தவிக்கிறது. அதற்காகவே நான் கடவுளிடம் மன்றாடுகிறேன்.
ரோமர் 10 : 2 (RCTA)
கடவுள்மேல் அவர்களுக்கு அன்பார்வம் உண்டு என்பதற்கு நான் சாட்சி சொல்லமுடியும்; ஆனால் அந்த ஆர்வம் உண்மையான அறிவுக்கு ஏற்றதாயில்லை.
ரோமர் 10 : 3 (RCTA)
கடவுளின் திரு அருட் செயல்முறையை அவர்கள் அறிந்து கொள்ளாமல், அருள் பெறுவதற்குத் தங்கள் முறையையே நிலைநாட்டத் தேடினார்கள்; ஆகவே கடவுளுடைய அருட் செயல்முறைக்குத் தங்களை உட்படுத்தவில்லை.
ரோமர் 10 : 4 (RCTA)
ஏனெனில், கிறிஸ்துவே திருச்சட்டத்தின் முடிவும் நிறைவும்; ஆகவே விசுவசிக்கும் எவனும் இனி இறைவனுக்கு ஏற்புடையவனாவான்.
ரோமர் 10 : 5 (RCTA)
திருச்சட்டத்தால் ஒருவன் இறைவனுக்கு ஏற்புடையவன் ஆதல் பற்றி மோயீசன் எழுதும்போது, "திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவனே அவருக்கு ஏற்புடையவனாக வாழ்வான்" என்றார்.
ரோமர் 10 : 6 (RCTA)
ஆனால் விசுவாசத்தால் இறைவனுக்கு ஏற்புடையவனாதல் பற்றி மறைநூலில் உள்ள சான்று பின்வருமாறு: ' வானகத்திற்கு ஏறுபவன் யார் என்று நீ மனத்தில் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை.' - அதாவது, கிறிஸ்துவைக் கீழே கொண்டுவருவதற்கு என்க - அல்லது
ரோமர் 10 : 7 (RCTA)
கீழ் உலகுக்கு இறங்குபவன் யார் என்று நீ நினைக்கவேண்டியதில்லை' - அதாவது கிறிஸ்துவை இறந்தோரிடமிருந்து கொண்டு வருவதற்கு என்க- மாறாக, சொல்லியிருப்பது என்ன?
ரோமர் 10 : 8 (RCTA)
'உன்னருகிலேயே உள்ளது வார்த்தை உன் வாயில் உள்ளது உன் உள்ளத்திலேயே உள்ளது'.
ரோமர் 10 : 9 (RCTA)
அந்த வார்த்தை நாங்கள் அறிவிக்கிற விசுவாச அறிக்கையே. ஏனெனில், 'இயேசு ஆண்டவர்' என உன் வாயினால் அறிக்கையிட்டு, கடவுள் அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார் என உன் உள்ளத்தில் விசுவசித்தால், நீ மீட்புப் பெறுவாய்.
ரோமர் 10 : 10 (RCTA)
ஆம், உள்ளத்தால் விசுவாசிப்பவன் இறைவனுக்கு ஏற்புடையவனாவான்; வாயினால் அறிக்கையிடுகிறவன், மீட்புப் பெறுவான்.
ரோமர் 10 : 11 (RCTA)
ஏனெனில், 'அவர்மேல் விசுவாசம் வைக்கிற எவனும் ஏமாற்றம் அடையான் ' என்பது மறைநூல் வாக்கு.
ரோமர் 10 : 12 (RCTA)
யூதன் என்றோ, கிரேக்கன் என்றோ, வேறுபாடில்லை; அனைவர்க்கும் ஆண்டவர் ஒருவரே அவரை நோக்கி மன்றாடுவோர் யாவர்க்கும் வள்ளன்மையுடையவர்.
ரோமர் 10 : 13 (RCTA)
' ஆண்டவருடைய பெயரைச் சொல்லி மன்றாடுபவன் எவனாயினும் அவன் மீட்புப்பெறுவான் ' என்று எழுதியுள்ளதன்றோ?
ரோமர் 10 : 14 (RCTA)
ஆனால் தாங்கள் விசுவசியாத ஒருவரை நோக்கி எவ்வாறு மன்றாடுவர்? தாங்கள் கேள்வியுறாத ஒருவரை எவ்வாறு விசுவசிப்பர்? அறிவிப்பவன் இல்லையெனில், எவ்வாறு கேள்வியுறுவர்?
ரோமர் 10 : 15 (RCTA)
அனுப்பப்படாமல் எவ்வாறு அறிவிப்பர்? இதைப்பற்றியே ' நற்செய்தி அறிவிப்பவர்களின் மலரடிகள் எத்துணை அழகானவை!' என எழுதியுள்ளது.
ரோமர் 10 : 16 (RCTA)
ஆயினும் எல்லாருமே நற்செய்திக்குக் கீழ்ப்படியவில்லை. ஏனெனில், இசையாஸ், " ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததைக் கேட்டு எவன் விசுவசித்தான்?" என்று முறையிடுகிறார்.
ரோமர் 10 : 17 (RCTA)
அப்படியானால், அறிவிப்பதைக் கேட்பதால் தான் விசுவாசம் உண்டாகிறது என்பது தெளிவு; நாங்கள் அறிவிப்பதற்கோ கிறிஸ்துவின் வார்த்தையே ஊற்று.
ரோமர் 10 : 18 (RCTA)
ஆனால் ஒருவேளை அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்லமுடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், ' அவர்கள் குரலொலி மண்ணுலகெங்கும் பரவிற்று, அவர்கள் வார்த்தை உலகின் எல்லைகள் வரை எட்டிற்று.
ரோமர் 10 : 19 (RCTA)
ஆனால், இஸ்ராயேல் கண்டுபிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. முதற்கண், ' இனம் அல்லாத இனத்தின் மேல் நீங்கள் பொறாமைப்படச் செய்வேன், அறிவில்லாத மக்களைப் பார்த்து நீங்கள் எரிச்சல் கொள்ளச் செய்வேன் ' என்று மோயீசன் சொல்லுகிறார்.
ரோமர் 10 : 20 (RCTA)
அடுத்து, 'தேடாதவர்கள் என்னைக் கண்டடைந்தார்கள். என் விருப்பத்தை அறிய என்னை நாடாதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன் ' என்று இசையால் கூறத் துணிகிறார்.
ரோமர் 10 : 21 (RCTA)
ஆனால் இஸ்ராயேலரிடம், எனக்குக் கீழ்ப்படியாமல் எதிர்த்து நிற்க மக்கள் பால் நான் நாள் முழுவதும் என் கைகளை நீட்டி அழைத்தேன் என்று சொல்லுகிறார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21