ரோமர் 1 : 1 (RCTA)
இறைமக்களாகும் படி அழைக்கப்பட்டு, கடவுளின் அன்பைப் பெற்றிருக்கிற உரோமைக் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும்,
ரோமர் 1 : 2 (RCTA)
கிறிஸ்து இயேசுவின் ஊழியனும், அப்போஸ்தலனாக அழைக்கப் பெற்றவனுமாகிய சின்னப்பன் யான் எழுதுவது:
ரோமர் 1 : 3 (RCTA)
நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக.
ரோமர் 1 : 4 (RCTA)
அப்போஸ்தலனாக அழைக்கப்பட்ட நான், கடவுளின் நற்செய்தியை அறிவிக்கக் குறிக்கப்பட்டிருக்கிறேன்.
ரோமர் 1 : 5 (RCTA)
இந்நற்செய்தியை இறைவன் தம் வாக்குரைப்போர் வழியாய், பரிசுத்த நூல்களில் ஏற்கனவே வாக்களித்திருந்தார்.
ரோமர் 1 : 6 (RCTA)
இந்நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதன் என்ற முறையில் தாவீதின் வழிவந்தவர். பரிசுத்த ஆவியைப் பெற்ற நிலையில் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்ததனால், கடவுளின் வல்லமை விளங்கும் இறைமகனாக ஏற்படுத்தப்பட்டார். இவரே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
ரோமர் 1 : 7 (RCTA)
புறவினத்தார் அனைவரும் கீழ்ப்படிந்து விசுவசிக்குமாறு, அப்போஸ்தலப் பணிபுரியும் திரு அருளை இவருடைய பெயரின் மகிமைக்காக இவர் வழியாகவே பெற்றுக்கொண்டோம். அந்தப் புறவினத்தாரைச் சார்ந்த நீங்களும் இறைவனின் அழைப்புப்பெற்று, இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்கிறீர்கள்.
ரோமர் 1 : 8 (RCTA)
முதலில் உங்கள் அனைவருக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில், நீங்கள் விசுவாசத்தை ஏற்றுக்கொண்ட செய்தி உலக முழுவதிலும் பரவியிருக்கிறது.
ரோமர் 1 : 9 (RCTA)
இடைவிடாது நான் உங்களை என் செபங்களில் எப்போதும் குறிப்பிட்டு வேண்டுகிறேன்.
ரோமர் 1 : 10 (RCTA)
கடவுளின் திருவுளத்தால், உங்களிடம் வர இறுதியாய் இப்பொழுதாவது எனக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென மன்றாடுகிறேன். அவருடைய மகனைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் பணியால் நான் ஆன்மீக முறையில் வழிபடும் கடவுளே, அவ்வாறு மன்றாடுகிறேன் என்பதற்குச் சாட்சி.
ரோமர் 1 : 11 (RCTA)
நான் உங்களைக் காண ஏங்குகிறேன். அங்கே வந்து உங்களை உறுதிப்படுத்துவதற்கு ஆவிக்குரிய கொடை ஏதேனும் உங்களுக்கு வழங்கலாமென விழைகிறேன்.
ரோமர் 1 : 12 (RCTA)
அதாவது, நான் உங்களிடையே தங்கி, உங்கள் விசுவாசத்தால் நானும், என் விசுவாசத்தால் நீங்களும் ஒருமிக்க ஊக்கமடைய வேண்டுமென்று விழைகிறேன்.
ரோமர் 1 : 13 (RCTA)
மற்றப் புறவினத்தாரிடையில் நான் அடைந்த பலனை உங்களிடையிலும் அடைய விரும்பி உங்களிடம் வர நான் அடிக்கடி திட்டமிட்டதுண்டு. ஆயினும் இன்றுவரை இயலாமற்போயிற்று; சகோதரர்களே, இதை நீங்கள் அறியவேண்டுமென விரும்புகிறேன்.
ரோமர் 1 : 14 (RCTA)
கிரேக்கருக்கும் கிரேக்கல்லாதாருக்கும், அறிவுள்ளவர்களுக்கும் அறிவில்லாதவர்களுக்கும் நான் கடமைப்பட்டவன்.
ரோமர் 1 : 15 (RCTA)
ஆதலால்தான் உரோமையில் இருக்கிற உங்களுக்கும் நற்செய்தி அறிவிக்க என் உள்ளம் ஆவல் கொண்டுள்ளது.
ரோமர் 1 : 16 (RCTA)
நற்செய்தியைப் பற்றி நான் நாணமடைய மாட்டேன்; ஏனெனில், அது மீட்பளிப்பதற்குக் கடவுளின் வல்லமையாய் உள்ளது. முதலில் யூதனுக்கும், அடுத்து கிரேக்கனுக்கும் விசுவாசிக்கும் ஒவ்வொருவனுக்குமே அது அங்ஙனம் உள்ளது.
ரோமர் 1 : 17 (RCTA)
ஏனெனில், 'விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவனாக்கப் பட்டவனே வாழ்வு பெறுவான்'. என எழுதியுள்ளதன்றோ? இவ்வாறு ஏற்புடையவர்களாக்கும் இறையருட் செயல் முறை அந்த நற்செய்தியிலேயே வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை அது விசுவாசத்தினாலேயே ஆகும்.
ரோமர் 1 : 18 (RCTA)
இறைப்பற்று இல்லாத மனிதர்களின் ஒழுக்கக்கேட்டின் மீதெல்லாம் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது; ஏனெனில், இவர்கள் தங்கள் ஒழுக்கக் கேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றனர்.
ரோமர் 1 : 19 (RCTA)
கடவுளைப்பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாய் விளங்கிற்று. அதைக் கடவுளே அவர்களுக்குக் காட்டித் தெளிவுறுத்தினார்.
ரோமர் 1 : 20 (RCTA)
ஏனெனில், கட்புலனாகாத அவருடைய பண்புகளும், அவருடைய முடிவில்லா வல்லமையும், கடவுள் தன்மையும் உலகம் உண்டானது. முதல் அவருடைய படைப்புக்களிலேயே அறிவுக்குப் புலனாகின்றன. ஆகவே அவர்கள் சாக்குச் சொல்வதற்கு வழியில்லை.
ரோமர் 1 : 21 (RCTA)
ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும், கடவுளுக்கு உரிய மகிமையை அவருக்கு அளிக்கவுமில்லை; நன்றி செலுத்தவுமில்லை. மாறாக, தங்கள் வீணான சிந்தனைகளில் அறிவிழந்தனர்.
ரோமர் 1 : 22 (RCTA)
அவர்களுடைய உணர்வில்லா உள்ளம் இருண்டு போயிற்று. தங்களை ஞானிகள் எனப் பிதற்றும் அவர்கள் வெறும் மடையர் ஆயினர்.
ரோமர் 1 : 23 (RCTA)
அழிவில்லாக் கடவுளின் மாட்சிமையை விடுத்து, அதற்குப் பதிலாக அழிந்து போகும் மனிதர், பறவைகள், விலங்குகள், ஊர்வன, ஆகியவற்றின் சாயலான உருவங்களை ஏற்று வழிபட்டனர்.
ரோமர் 1 : 24 (RCTA)
ஆகவே, அவர்களுடைய உள்ளத்து இச்சைகளின்படி அவர்களைக் கடவுள் அசுத்தத்திற்குக் கையளித்து அவர்கள் ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்த விட்டு விட்டார்.
ரோமர் 1 : 25 (RCTA)
ஏனெனில், அவர்கள் கடவுளின் உண்மையைப் பொய்யாக மாற்றினர்; படைப்புப் பொருட்களுக்கு வழிபாடும் ஊழியமும் செய்தனர். படைத்தவரை மறந்தனர்; அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.
ரோமர் 1 : 26 (RCTA)
ஆதலால், கடவுள் அவர்களை வெட்கக் கேடான இச்சைகளுக்குக் கையளித்துவிட்டார்,. பெண்கள் இயல்பான மறையைவிட்டு, இயல்புக்கு மாறாக நடந்து கொண்டனர்.
ரோமர் 1 : 27 (RCTA)
அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேரும் இயல்பான முறையை விட்டு, ஒருவர் மீது ஒருவர் வேட்கை கொண்டு, காமத்தீயால் பற்றி எரிந்தனர்; ஆண்கள் ஆண்களுடன் இழிவான செயல்களைச் செய்து தங்கள் ஒழுக்கக் கேட்டுக்கு ஏற்ற கூலியைத் தங்களிலேயே பெறுபவர் ஆயினர்.
ரோமர் 1 : 28 (RCTA)
கடவுளை அறிந்து ஏற்பதன் தகைமையை அவர்கள் மறுத்தால் தகாதவற்றைச் செய்யும்படி அவர்களைக் கடவுள் அவர்களின் சீர்கெட்ட சிந்தைக்குக் கையளித்து விட்டார்.
ரோமர் 1 : 29 (RCTA)
அவர்களோ, எல்லாவகையான அநியாயம், கெடுமதி, பேராசை, தீய மனம், நிறைந்தவர்கள் ஆயினர்; அவர்கள் பொறாமை, கொலை, சண்டை, கபடம், வஞ்சகம் மிக்கவர்கள்;
ரோமர் 1 : 30 (RCTA)
புறங்கூறுபவர்கள்; அவதூறு பேசுபவர்கள், கடவுளை வெறுப்பவர்கள், மூர்க்கர்கள், இறுமாப்புடையவர்கள், வீண் பெருமை பாராட்டுபவர்கள், தீமை சூழ்வதில் திறமை வாய்ந்தவர்கள், பெற்றோருக்கு அடங்காதவர்கள், வாக்குத்தவறுபவர்கள்.
ரோமர் 1 : 31 (RCTA)
அவர்களுக்கு அறிவு இல்லை, அன்புணர்ச்சி இல்லை. இரக்கம் இல்லை;
ரோமர் 1 : 32 (RCTA)
இப்படியெல்லாம் நடப்பவர்கள் சாவுக்குரியவர்கள் என்னும் கடவுளுடைய நியமத்தை அறிந்திருந்தும் இவ்வாறு நடக்கின்றனர்; தாங்கள் நடப்பது மட்டுமன்று, அப்படி நடப்பவர்களுக்குப் பாராட்டும் அளிக்கின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32