வெளிபடுத்தல் 9 : 1 (RCTA)
பின்பு ஐந்தாம் வானதூதர் எக்காளத்தை ஊதினார். அப்போது வானத்திலிருந்து மண்ணில் விழுந்த ஒரு விண்மீனைக் கண்டேன். பாதாளக் குழியின் திறவுகோல் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் பாதாளக் குழியைத் திறந்தார்.
வெளிபடுத்தல் 9 : 2 (RCTA)
குழியிலிருந்து பெருஞ் சூளையைப்போல் புகை எழுப்ப, கதிரவனும் வான்வெளியும் அப்புகையால் இருளடைந்தன.
வெளிபடுத்தல் 9 : 3 (RCTA)
புகையினின்று வெட்டுக்கிளிகள் கிளம்பி மண்ணின்மீது படையெடுத்து வந்தன. தரையிலூரும் தேள்களுக்குள்ள கொடுமை அவற்றிற்கு அளிக்கப்பட்டது.
வெளிபடுத்தல் 9 : 4 (RCTA)
மண்மீதுள்ள புல்லுக்கோ, பசும்பூண்டுக்கோ, மரங்களுக்கோ தீங்கிழைக்காமல், கடவுளின் முத்திரை நெற்றியில் இல்லாதவர்களை மட்டும் தாக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
வெளிபடுத்தல் 9 : 5 (RCTA)
ஆனால் அவர்களைக் கொல்லக் கூடாது; ஐந்து மாத அளவு வேதனைக்குள்ளாக்க வேண்டும் என்பது அவற்றிற்குக் கொடுத்த கட்டளை. அந்த வேதனையோ தேள் கொட்டும்போது ஏற்படும் வேதனைபோல் இருந்தது.
வெளிபடுத்தல் 9 : 6 (RCTA)
அந்நாட்களில் மனிதர் சாவைத் தேடுவர்; ஆனால் சாவதற்கு வழி இராது. அவர்கள் செத்துவிட விரும்புவர்; ஆனால் சாவும் கிட்டவராது.
வெளிபடுத்தல் 9 : 7 (RCTA)
அந்த வெட்டுக்கிளிகள் போருக்குத் தயாரான குதிரைகளைப்போல் காணப்பட்டன. அவற்றின் தலைகளில் பொன் முடிகள் இருந்ததுபோல் தென்பட்டது. அவற்றின் முகங்கள் மனிதரின் முகங்களை ஒத்திருந்தன.
வெளிபடுத்தல் 9 : 8 (RCTA)
அவற்றின் பிடரிமயிர் பெண்களின் கூந்தலையும், அவற்றின் பற்கள் சிங்கங்களின் பற்களையும் ஒத்திருந்தன.
வெளிபடுத்தல் 9 : 9 (RCTA)
மார்பில் இருப்புக் கவசங்கள் அணிந்திருந்ததுபோல் தோன்றிற்று. அவற்றின் சிறகுகளின் இரைச்சல் போர் முனைக்கு விரையும் பெரியதொரு தேர்ப்படையின் இரைச்சல் போன்றிருந்தது.
வெளிபடுத்தல் 9 : 10 (RCTA)
தேள்களைப் போல் அவை வால்களும் கொடுக்குகளும் கொண்டிருந்தன. ஐந்து மாத அளவு மனிதருக்குத் தீங்கு செய்யும் வல்லமை அவற்றின் வாலிலிருந்தது.
வெளிபடுத்தல் 9 : 11 (RCTA)
பாதாளக் குழியின் தூதனே அவற்றின் அரசன். அவன் பெயர் எபிரேய மொழியில் 'அப்த்தோன்', கிரேக்க மொழியில் 'அப்பொல்லியோன்.'
வெளிபடுத்தல் 9 : 12 (RCTA)
இவ்வாறு முதலாவது பெருந்துன்பம் கடந்துவிட்டது. இதோ, இன்னும் இரண்டு பெருந்துன்பங்கள் வரப்போகின்றன.
வெளிபடுத்தல் 9 : 13 (RCTA)
பின்னர் ஆறாம் வானதூதர் எக்காளத்தை ஊதினார். கடவுள் முன் உள்ள பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலிருந்து குரலொலி ஒன்று கேட்டேன்.
வெளிபடுத்தல் 9 : 14 (RCTA)
அக்குரல், எக்காளம் வைத்திருந்த ஆறாம் வான தூதரிடம், 'யூப்ரட்டீஸ் என்னும் பேராற்றினருகே கட்டுண்டிருந்த தூதர் நால்வரையும் அவிழ்த்துவிடு" என்றது.
வெளிபடுத்தல் 9 : 15 (RCTA)
அவர்கள் அவிழ்த்து விடப்பட்டார்கள். மனிதருள் மூன்றிலொரு பாகத்தை அழித்துவிடும்படி, இவ்வாண்டு, இம்மாதம், இந்நாள், இந்நேரம் வருமளவும் அவர்கள் குறித்து வைக்கப்பட்டிருந்தனர்.
வெளிபடுத்தல் 9 : 16 (RCTA)
குதிரைப் படையின் தொகையைச் சொல்லக் கேட்டேன்;
வெளிபடுத்தல் 9 : 17 (RCTA)
அது இருபது கோடி. குதிரைகளையும் குதிரைமேல் ஏறியிருந்தவர்களையும் நான் காட்சியில் கண்டது இவ்வாறு: அவர்கள் நெருப்பு, நீல, கந்தக நிற மார்புக் கவசங்களை அணிந்திருந்தனர். குதிரைகளின் தலைகள் சிங்கங்களின் தலைகள் போன்றிருந்தன. நெருப்பும் புகையும் கந்தகமும் அவற்றின் வாயினின்று வெளிவந்தன.
வெளிபடுத்தல் 9 : 18 (RCTA)
அவற்றின் வாயிலிருந்து வெளிவரும் நெருப்பு, புகை, கந்தகம் ஆகிய மூன்று வாதைகளால் மனிதருள் மூன்றிலொரு பாகம் கொல்லப்பட்டது.
வெளிபடுத்தல் 9 : 19 (RCTA)
ஏனெனில், குதிரைகளின் கொடுமை அவற்றின் வாய்களிலும், வால்களிலும் உள்ளது. அவற்றின் வால்கள் பாம்புகள் போலிருந்தன.
வெளிபடுத்தல் 9 : 20 (RCTA)
அவற்றிற்குள்ள தலைகளைக் கொண்டு அவை தீங்கு செய்யும். அந்த வாதைகளால் கொல்லப்படாமல் எஞ்சியவர்கள், தங்கள் செயல்களை விட்டுவிட்டு மனந்திரும்பவில்லை. பொன், வெள்ளி, செம்பு, கல், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்டு, பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாத சிலைகளையும், பேய்களையும் வணங்குவதை விட்டுவிடவில்லை.
வெளிபடுத்தல் 9 : 21 (RCTA)
தாங்கள் செய்துவந்த கொலைகள், சூனியங்கள், விபசாரம், களவுகள் இவற்றை விட்டு மனந்திரும்பவில்லை.
❮
❯