வெளிபடுத்தல் 8 : 1 (RCTA)
ஏழாவது முத்திரையை உடைத்தபோது, விண்ணகத்தில் அரை மணியளவு மௌனம் நிலவியது.
வெளிபடுத்தல் 8 : 2 (RCTA)
பின்பு கடவுள் முன் நிற்கும் ஏழு வானதூதர்களைக் கண்டேன். அவர்கள் கையில் ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
வெளிபடுத்தல் 8 : 3 (RCTA)
வேறொரு வானதூதர் பொன் தூபக்கால் ஒன்றை ஏந்திக்கொண்டு பீடத்தின்முன் வந்து நின்றார். அரியணை முன் நிற்கும் பொற்பீடத்தின்மேல், இறைமக்கள் அனைவருடைய செபக் காணிக்கைக்குத் தூபமிடுமாறு, அவருக்கு ஏராளமான சாம்பிராணி அளிக்கப்பட்டது.
வெளிபடுத்தல் 8 : 4 (RCTA)
அச்சாம்பிராணிப் புகை இறைமக்கள் செபங்களோடு சேர்ந்து வானதூதர் கையினின்று கடவுள் முன்பாக எழுந்தது.
வெளிபடுத்தல் 8 : 5 (RCTA)
பின்பு வானதூதர் தூபக்காலை எடுத்து, பீடத்திலிருந்த நெருப்பினால் அதை நிரப்பி, மண்ணுலகில் கொட்டினார். கொட்டவே, இடிமுழக்கமும் பேரிரைச்சலும் மின்னலும் நிலநடுக்கமும் உண்டாயின.
வெளிபடுத்தல் 8 : 6 (RCTA)
அப்போது ஏழு எக்காளங்களை ஏந்தியிருந்த ஏழு வானதூதர்களும் அவற்றை ஊதத் தயாராயினர்.
வெளிபடுத்தல் 8 : 7 (RCTA)
முதல் வானதூதர் ஊதினார். இரத்தம் கலந்த கல் மழையும் நெருப்பும் உண்டாகி, மண்மீது பெய்தது. மண்ணில் மூன்றிலொரு பாகம் எரிந்துபோயிற்று; மரங்களில் மூன்றிலொரு பாகம் தீய்ந்துபோயிற்று; பசும் புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.
வெளிபடுத்தல் 8 : 8 (RCTA)
இரண்டாவது வானதூதர் எக்காளம் ஊதினார். திப்பற்றி எரிந்த பெரிய மலைபோன்றதொன்று கடலில் ஏறியப்பட்டது. அப்போது கடலில் மூன்றிலொரு பாகம் இரத்த மயமாயிற்று.
வெளிபடுத்தல் 8 : 9 (RCTA)
கடலில் வாழும் உயிர்களுள் மூன்றிலொரு பாகம் மடிந்தது. கப்பல்களில் மூன்றிலொரு பாகம் அழிந்தது.
வெளிபடுத்தல் 8 : 10 (RCTA)
மூன்றாவது வானதூதர் எக்காளத்தை ஊதினார். பெரியதொரு விண்மீன் தீப்பந்தம் போல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே வானினின்று பாய்ந்து, ஆறுகளில் மூன்றிலொரு பாகத்திலும் நீரூற்றுகளிலும் விழுந்தது.
வெளிபடுத்தல் 8 : 11 (RCTA)
அந்த விண்மீனின் பெயர் 'எட்டி' என்பது. ஆகவே தண்ணீரில் மூன்றிலொரு பாகம் எட்டிபோல் கசப்பாயிற்று. கைப்புற்ற அந்நீரால் மனிதர் பலர் இறந்தனர்.
வெளிபடுத்தல் 8 : 12 (RCTA)
நான்காவது வானதூதர் எக்காளத்தை ஊதினார். கதிரோனில் மூன்றிலொரு பாகமும், நிலாவில் மூன்றிலொரு பாகமும், விண்மீன்களுள் மூன்றிலொரு பாகமும் தாக்குண்டன. அதனால் அவற்றில் மூன்றிலொரு பாகம் இருளடைந்தது. பகலொளி மூன்றிலொரு பாகம் குறைந்தது; இரவுக்கும் அப்படியே ஆயிற்று.
வெளிபடுத்தல் 8 : 13 (RCTA)
பின்பு நான் கண்ட காட்சியில், வானத்தில் உயரப் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகு உரத்த குரலில், "இன்னும் மூன்று வானதூதர்கள் எக்காளம் ஊதப்போகிறார்கள். அதனால், மண்ணுலகில் வாழ்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ கேடு" என்று கத்தியது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13