வெளிபடுத்தல் 6 : 1 (RCTA)
பின்னர், செம்மறியானவர் ஏழு முத்திரைகளுள் முதல் முத்திரையை உடைக்கக் கண்டேன். அப்போது நான்கு உயிர்களுள் ஒன்று, 'வா' என இடிமுழக்கம்போன்ற குரலில் சொன்னதைக் கேட்டேன்.
வெளிபடுத்தல் 6 : 2 (RCTA)
என் கண்முன் ஒரு வெள்ளைக் குதிரை தோன்றிற்று. அதன்மேல் ஏறியிருந்தவனுடைய கையில் வில் ஒன்று இருந்தது. அவனுக்கு வெற்றிவாகை சூட்டப்பட்டது. வெற்றி வீரனான அவன் வெற்றிமேல் வெற்றி கொள்ளச் சென்றான்.
வெளிபடுத்தல் 6 : 3 (RCTA)
செம்மறியானவர் இரண்டாவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் இரண்டாவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன்.
வெளிபடுத்தல் 6 : 4 (RCTA)
அப்போது செந்நிறமான மற்றொரு குதிரை வெளிவந்தது. அதன்மேல் ஏறியிருந்தவனுக்கு, உலகில் அமைதியைக் குலைக்கவும், மனிதர் ஒருவரை ஒருவர் கொல்லும்படி செய்யவும் அலுவல் அளிக்கப்பட்டது. பெரியதொரு வாளும் அவனிடம் கொடுக்கப்பட்டது.
வெளிபடுத்தல் 6 : 5 (RCTA)
அவர் மூன்றாவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் மூன்றாவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன். என் கண்முன் கருநிறக் குதிரை ஒன்று தோன்றிற்று. அதன்மீது ஏறியிருந்தவனுடைய கையில் துலாக்கோல் ஒன்று இருந்தது.
வெளிபடுத்தல் 6 : 6 (RCTA)
"ஒருநாள் கூலிக்குக் கோதுமை அரைப்படி, வாற்கோதுமை ஒன்றரைப்படி என்றாகட்டும். ஆனால் எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் சேதப்படுத்த வேண்டாம்" என்ற குரல் நான்கு உயிர்களின் நடுவினின்று எழக்கேட்டேன்.
வெளிபடுத்தல் 6 : 7 (RCTA)
நான்காவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் நான்காவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன். வெளிறிய குதிரை ஒன்று என் கண்முன் தோன்றிற்று.
வெளிபடுத்தல் 6 : 8 (RCTA)
அதன்மீது ஏறியிருந்தவன் பெயர் சாவு. பாதாளம் அவனைப் பின் தொடர்ந்தது. வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மண்மீதுள்ள விலங்குகளாலும் மண்ணுலகில் கால் பாகத்தை வதைத்தொழிக்க அவர்களுக்கு வல்லமை அளிக்கப்பட்டது.
வெளிபடுத்தல் 6 : 9 (RCTA)
ஐந்தாவது முத்திரையை உடைத்தபோது, கடவுளுடைய வார்த்தையை அறிவித்துத் தாங்கள் கொடுத்த சாட்சியத்திற்காகக் கொலையுண்டவர்களின் ஆன்மாக்களைப் பீடத்தின் கீழே கண்டேன்.
வெளிபடுத்தல் 6 : 10 (RCTA)
அவர்கள் உரத்த குரலில் பரிசுத்தரும் உண்மையுமான ஆண்டவரே, எவ்வளவு காலம் நீதி வழங்காமல் இருப்பீர்? எங்கள் இரத்தத்தைச் சிந்திய மண்ணுலகத்தாரை எவ்வளவு காலம் பழிவாங்காமல் இருப்பீர்?" என்று கத்தினர்.
வெளிபடுத்தல் 6 : 11 (RCTA)
பின்பு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்ணாடை அளிக்கப்பட்டது. "இன்னும் சிறிது நேரம் பொறுத்திருங்கள். உங்களைப்போலவே கொல்லப்பட வேண்டிய உங்கள் உடன் ஊழியரான சகோதரர்களின் தொகை நிறைவு பெற வேண்டும்" என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
வெளிபடுத்தல் 6 : 12 (RCTA)
ஆறாவது முத்திரையை உடைத்தபோது, நான் கண்ட காட்சியில் பெரியதொரு நிலநடுக்கம் உண்டாயிற்று. கதிரவன் கறுப்புச் சாக்குத் துணிபோல் கறுத்தது. நிலவு இரத்தமயமாயிற்று.
வெளிபடுத்தல் 6 : 13 (RCTA)
பெருங் காற்றால் அசைக்கப்படும் அத்திமரத்திலிருந்து காய்கள் உதிர்வதுபோல விண்மீன்கள் மண்மீது விழுந்தன.
வெளிபடுத்தல் 6 : 14 (RCTA)
சுருட்டப்படும் சுருள்போல வானம் மறைந்துவிட்டது. மலைகள் தீவுகள் எல்லாம் நிலை பெயர்ந்துபோயின.
வெளிபடுத்தல் 6 : 15 (RCTA)
மண்ணுலகின் அரசர்கள், பெருங்குடி மக்கள், படைத் தலைவர்கள் செல்வர்கள், வலியோர் அனைவரும், அடிமைகள், குடிமக்கள் யாவருமே குகைகளிலும் மலைப் பாறைகளின் இடுக்குகளிலும் ஒளிந்து கொண்டனர்.
வெளிபடுத்தல் 6 : 16 (RCTA)
அந்த மலைகளையும் பாறைகளையும் நோக்கி அவர்கள், "எங்கள்மேல் விழுந்து, அரியணையின்மேல் வீற்றிருப்பவரின் முகத்தினின்றும், செம்மறியின் சினத்தினின்றும் எங்களை மறைந்துக் கொள்ளுங்கள்.
வெளிபடுத்தல் 6 : 17 (RCTA)
ஏனெனில், அவர்களது சினம் வெளிப்படும் பெருநாள் வந்துவிட்டது, அதை எதிர்த்து நிற்பவன் யார் ?" என்று சொன்னார்கள்.
❮
❯