வெளிபடுத்தல் 22 : 1 (RCTA)
பின்னர் வாழ்வுநீர் ஓடும் ஆற்றை வானதூதர் காண்பித்தார். அது பளிங்குபோல் மின்னிற்று. அது கடவுளும் செம்மறியான வரும் வீற்றிருக்கும் அரியணையினின்று நகர வீதியின் நடுவிலே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு பக்கங்களிலும் வாழ்வின் மரமிருந்தது.
வெளிபடுத்தல் 22 : 2 (RCTA)
மாதத்திற்கு ஒரு முறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனிகள் தரும். அதன் இலைகள் மக்கள் இனங்களைக் குணப்படுத்தக் கூடியவை.
வெளிபடுத்தல் 22 : 3 (RCTA)
சாபத்துக்குள்ளானதெதுவும் அங்கு இல்லை. கடவுளும் செம்மறியானவரும் வீற்றிருக்கும் அரியணை அங்கே இருக்கும். அவருடைய ஊழியர்கள் அவரைத் தொழுவார்கள்.
வெளிபடுத்தல் 22 : 4 (RCTA)
அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்கள் நெற்றியில் எழுதியிருக்கும்.
வெளிபடுத்தல் 22 : 5 (RCTA)
அங்கு இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஆண்டவராகிய கடவுளே அவர்கள் மீது ஒளி வீசுவார். அவர்களோ என்றென்றும் அரசாள்வார்கள்.
வெளிபடுத்தல் 22 : 6 (RCTA)
அதன்பின் அவர் எனக்குச் சொன்னது: "இவ்வார்த்தைகள் நம்பத்தக்கவை, உண்மையானவை. இறைவாக்கினருக்கு ஆவியைத் தரும் கடவுளாகிய ஆண்டவர் விரைவில் நிகழ வேண்டியவற்றைத் தம் ஊழியர்களுக்கு வெளிப்படுத்தத் தம் தூதரை அனுப்பினார்.
வெளிபடுத்தல் 22 : 7 (RCTA)
இதோ, நான் விரைவாகவே வருகிறேன்." இந்நூலிலுள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்பவர் பேறு பெற்றவர்.
வெளிபடுத்தல் 22 : 8 (RCTA)
அருளப்பனாகிய நானே இவற்றைக் கண்டேன், இவற்றைக் கேட்டேன். இவற்றைக் கண்டு கேட்டு முடித்தபின் எனக்கு இவற்றைக் காட்டிய வானதூதரைத் தொழுவதற்கு அவர்முன் அடிபணிந்தேன்.
வெளிபடுத்தல் 22 : 9 (RCTA)
அவரோ, "வேண்டாம், வேண்டாம்; இறைவாக்கினரான உன் சகோதரர்களுக்கும், இந்நூலிலுள்ள வார்த்தைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் உனக்கும் நான் உடன் ஊழியனே. கடவுளையே தொழுதல் வேண்டும்" என்றார்.
வெளிபடுத்தல் 22 : 10 (RCTA)
பின்பு அவர் என்னிடம் சொன்னதாவது: "இந்நூலிலுள்ள இறைவாக்குகளை மறைந்து வைக்காதே. இதோ, குறித்த காலம் அண்மையிலேயே உள்ளது.
வெளிபடுத்தல் 22 : 11 (RCTA)
இதற்கிடையில், அநீதி செய்பவன் செய்துகொண்டே போகட்டும்; சேற்றில் உழல்பவன் உழன்றுகொண்டே இருக்கட்டும்; நல்லவனோ நன்மை செய்து கொண்டே இருக்கட்டும்; பரிசுத்தமுள்ளவனோ பரிசுத்தத்திலேயே நிலைத்திருக்கட்டும்.
வெளிபடுத்தல் 22 : 12 (RCTA)
இதோ, விரைவாகவே வருகிறேன். அவனவன் செயலுக்கேற்ப அவனவனுக்கு அளிக்கும் கைம்மாறு என் கையிலிருக்கிறது.
வெளிபடுத்தல் 22 : 13 (RCTA)
அகரமும் னகரமும்-முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே.
வெளிபடுத்தல் 22 : 14 (RCTA)
தங்கள் ஆடைகளைத் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். வாழ்வின் மரத்தின் மீது அவர்களுக்கு உரிமையிருக்கும். வாயில்கள் வழியாக அந்நகரத்தில் நுழையவும் முடியும்.
வெளிபடுத்தல் 22 : 15 (RCTA)
கேடுகெட்ட நாய்கள், சூனியம் வைப்பவர்கள், காமுகர், கொலைகாரர், சிலை வழிபாட்டினர், பொய்யை விரும்பி அதன்படி நடப்போர் அனைவரும் வெளியே நிற்பர்."
வெளிபடுத்தல் 22 : 16 (RCTA)
இயேசுவாகிய நான் சபைகளைப் பற்றிய இச்சாட்சியங்களை உங்களுக்கு அறிவிக்க என்தூதரை அனுப்பினேன். தாவீதின் வேரும் வழித்தோன்றலும் நானே. ஒளிமிகு விடிவெள்ளியும் நானே.
வெளிபடுத்தல் 22 : 17 (RCTA)
ஆவியானவரும் மணமகளும் "வாரும் என்கின்றனர். இதைக் கேட்பவனும் "வாரும்" என்று சொல்லட்டும். தாகமாயிருப்பவன் வரட்டும். விருப்பமுள்ளவன் வாழ்வின் நீரை இலவசமாக ஏற்றுக்கொள்ளட்டும்.
வெளிபடுத்தல் 22 : 18 (RCTA)
இந்நூலிலுள்ள இறை வாக்குகளைக் கேட்டுகிற ஒவ்வொருவனையும் நான் எச்சரிக்கிறேன்: இவ்வாக்குகளில் ஒருவன் எதையாவது சேர்த்தால், இந்நூலில் விளக்கியுள்ள வாதைகளை எல்லாம் கடவுள் அவனுக்கு அவன் தலையில் சேர்த்துவிடுவார்.
வெளிபடுத்தல் 22 : 19 (RCTA)
இந்நூலுள்ள இறைவாக்குகளில் எதையாவது ஒருவன் எடுத்துவிட்டால், இந்நூலில் குறிப்பிட்டுள்ள வாழ்வின் மரத்திலும் பரிசுத்த நகரிலும் அவனுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.
வெளிபடுத்தல் 22 : 20 (RCTA)
இவற்றிற்குச் சான்று பகர்கிறவர், "ஆம், விரைவாகவே வருகிறேன்" என்கிறார். ஆமேன். ஆண்டவராகிய இயேசுவே வாரும்.
வெளிபடுத்தல் 22 : 21 (RCTA)
ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21