சங்கீதம் 97 : 1 (RCTA)
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: பூவுலகு களிகூர்வதாக! தீவுகள் எல்லாம் அகமகிழட்டும்!
சங்கீதம் 97 : 2 (RCTA)
மேகமும் இருளும் அவரைச் சூழ்ந்துள்ளன: நீதியும் நேர்மையும் அவரது அரியணைக்கு அடிப்படை.
சங்கீதம் 97 : 3 (RCTA)
அவருக்குமுன் செல்வது நெருப்பு: சுற்றிலுமுள்ள எதிரிகளை அது எரித்து விடுகிறது.
சங்கீதம் 97 : 4 (RCTA)
அவர் விடுக்கும் மின்னல்கள் பூவுலகுக்கு ஒளி வீசும்: அதைக் கண்டு பூவுலகம் நடுங்குகிறது.
சங்கீதம் 97 : 5 (RCTA)
பூவுலகனைத்தையும் ஆளும் ஆண்டவர் முன்னே, மலைகள் மெழுகு போல் உருகுகின்றன.
சங்கீதம் 97 : 6 (RCTA)
வானங்கள் அவரது நீதியை எடுத்துரைக்கின்றன: உலக மக்களனைவரும் அவரது மகிமையைக் காண்கின்றனர்.
சங்கீதம் 97 : 7 (RCTA)
சிலைகளை வழிபடுவோர், அவற்றில் பெருமை கொள்வோர் யாவரும் அவற்றில் நாணம் அடைகின்றனர்; அவர் முன்னிலையில் தெய்வங்களெல்லாம் குப்புற விழுகின்றன.
சங்கீதம் 97 : 8 (RCTA)
இதைக்கேட்டு, சீயோன் மகிழ்கின்றது: ஆண்டவரே, உமது தீர்ப்புகளை முன்னிட்டே யூதாவின் நகரங்கள் களிகூர்கின்றன.
சங்கீதம் 97 : 9 (RCTA)
ஏனெனில் ஆண்டவரே, நீர் பூவுலகனைத்தையுமே ஆளும் உன்னதர்: தெய்வங்களனைத்திற்கும் மேலானவர்.
சங்கீதம் 97 : 10 (RCTA)
தீமையை வெறுப்பவர்கள் மீது ஆண்டவர் அன்பு கூருகின்றார்: தம் புனிதர்களின் ஆன்மாக்களைக் காக்கின்றார்; தீயவர்களின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார்.
சங்கீதம் 97 : 11 (RCTA)
நீதிமானுக்கு ஒளி எழுகின்றது: நேரிய உள்ளத்தவர்க்கு மகிழ்ச்சி பிறக்கின்றது.
சங்கீதம் 97 : 12 (RCTA)
நீதிமான்களே, ஆண்டவரை நினைந்து அகமகிழுங்கள்: அவரது திருப்பெயரைப் புகழ்ந்தேத்துங்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12