சங்கீதம் 96 : 1 (RCTA)
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.
சங்கீதம் 96 : 2 (RCTA)
ஆண்டவரைப் பாடுங்கள், அவர் பெயரை வாழ்த்துங்கள்: அவர் தரும் மீட்பை நாடோறும் அறிவியுங்கள்.
சங்கீதம் 96 : 3 (RCTA)
புற இனத்தாரிடையே அவரது மாட்சிமையை எடுத்துச் சொல்லுங்கள்: மக்கள் அனைவரிடையிலும் அவர்தம் வியத்தகு செயல்களைக் கூறுங்கள்.
சங்கீதம் 96 : 4 (RCTA)
ஏனெனில், மாண்பு மிக்கவர் ஆண்டவர், மிகு புகழ்ச்சிக்குரியவர்: தெய்வங்கள் அனைத்தையும் விட அச்சத்துக்குரியவர்.
சங்கீதம் 96 : 5 (RCTA)
ஏனெனில், புற இனத்தார் தெய்வங்களெல்லாம் வெறுமையே: ஆண்டவரோ வானங்களைப் படைத்தவர்.
சங்கீதம் 96 : 6 (RCTA)
மகத்துவமும் மேன்மையும் அவர்முன் செல்லும்: வல்லமையும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன.
சங்கீதம் 96 : 7 (RCTA)
மக்கள் இளத்தோரே, ஆண்டவருக்குச் செலுத்துங்கள்: மகிமையும் வல்லமையும் ஆண்டவருக்குச் செலுத்துங்கள்.
சங்கீதம் 96 : 8 (RCTA)
அவரது பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்: பலிப்பொருளை ஏந்தி அவர்தம் ஆலய முற்றங்களில் செல்லுங்கள்.
சங்கீதம் 96 : 9 (RCTA)
திருவுடை அணிந்து ஆண்டவரை வணங்குங்கள்: மாநிலமே நீ அவர் முன் நடுங்குவாயாக.
சங்கீதம் 96 : 10 (RCTA)
மாநிலத்தோரே, நீங்கள் புறவினத்தாரிடையே அறிவியுங்கள்: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகை அவர் நிலை நிறுத்தியுள்ளார். அது அசைவுறாது: மக்களை அவர் நேர்மையுடன் ஆள்கின்றார்.
சங்கீதம் 96 : 11 (RCTA)
வானங்கள் மகிழட்டும், பூவுலகம் களிகூரட்டும்: கடலும் அதில் வாழ்வனவும் ஆரவாரம் செய்யட்டும்.
சங்கீதம் 96 : 12 (RCTA)
வயல் வெளியும் அதில் உள்ள அனைத்தும் ஆர்ப்பரிக்கட்டும்: காட்டில் உள்ள மரங்கள் அனைத்தும் அப்போது ஆண்டவர் முன் மகிழ்ச்சியுறும்.
சங்கீதம் 96 : 13 (RCTA)
ஏனெனில், அவர் வருகின்றார்: பூவுலகை ஆட்சி செய்ய வருகின்றார், பூவுலகை அவர் நீதியுடன் ஆட்சி செய்வார்: மக்களை அவர் தம் சொல்லுறுதியால் ஆள்வார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13