சங்கீதம் 94 : 1 (RCTA)
ஆண்டவரே, நீர் பழிவாங்கும் இறைவன்: பழி வாங்கும் இறைவனே, உம் மாட்சி விளங்கச் செய்யும்.
சங்கீதம் 94 : 2 (RCTA)
உலகின் நீதிபதியே எழுந்தருளும்: செருக்குற்றோர்களுக்கு உரிய தண்டனையை விதித்திடுவீர்.
சங்கீதம் 94 : 3 (RCTA)
ஆண்டவரே, தீயோர் எதுவரையில் பெருமிதம் கொள்வர்? கொடியவர் எதுவரையில் செருக்கித் திரிவர்?
சங்கீதம் 94 : 4 (RCTA)
எதுவரையில் அவர்கள் ஆணவத்துடன் பேசி வாயாடுவர்? அக்கிரமம் செய்வோர் எதுவரையில் பெருமையடித்துக் கொள்வர் ?
சங்கீதம் 94 : 5 (RCTA)
ஆண்டவரே, உம் மக்களை அவர்கள் நசுக்குகின்றனர். உம் உரிமைப் பொருளான அவர்களை ஒடுக்குகின்றனர்.
சங்கீதம் 94 : 6 (RCTA)
விதவையையும் வழிப்போக்கனையும் கொல்லுகின்றனர்: திக்கற்றவர்களைச் சாகடிக்கின்றனர்.
சங்கீதம் 94 : 7 (RCTA)
ஆண்டவர் இதைப் பார்ப்பதில்லை: யாக்கோபின் இறைவன் இதைக் கவனிப்பதில்லை" என்று சொல்லிக் கொள்கின்றனர்.
சங்கீதம் 94 : 8 (RCTA)
மக்களிடையே அறிவிலிகளாயிப்பவர்களே, இதை உணர்ந்துகொள்ளுங்கள்: அறிவீனர்களே, உங்களுக்கு என்று ஞானம் பிறக்கும்?
சங்கீதம் 94 : 9 (RCTA)
செவியைக் கொடுத்தவர் கேளாமலிருப்பாரோ? கண்ணை உருவாக்கினவர் பாராமலிருப்பாரோ?
சங்கீதம் 94 : 10 (RCTA)
எல்லா நாட்டினருக்கும் அறிவூட்டுபவர் தண்டியாமலிருப்பாரோ? மக்களுக்கு அறிவு தருபவர் வாளாவிருப்பாரோ?
சங்கீதம் 94 : 11 (RCTA)
மனிதரின் எண்ணங்களை ஆண்டவர் அறிவார்: அவை வீண் எண்ணங்கள் என்று அவருக்குத் தெரியும்.
சங்கீதம் 94 : 12 (RCTA)
ஆண்டவரே, உம்மால் அறிவு புகட்டப்பெறுபவன் பேறு பெற்றவன்: உமது சட்டத்தைக் கொண்டு நீர் யாருக்குக் கற்பிக்கின்றீரோ அவன் பேறுபெற்றவன்.
சங்கீதம் 94 : 13 (RCTA)
அப்போது அவன் துன்ப நாளிலும் உம்மிடமிருந்து இளைப்பாற்றி அடைவான். தீயவனுக்கோ இறுதியாய்க் குழி வெட்டப்படும்.
சங்கீதம் 94 : 14 (RCTA)
ஆண்டவர் தம் மக்களைப் புறக்கணிப்பதில்லை: தம் உரிமைப் பொருளானவர்களைக் கைவிடுவதில்லை.
சங்கீதம் 94 : 15 (RCTA)
நீதிமான்கள் நீதித் தீர்ப்பையே பெறுவர்: நேரிய மனத்தோர் யாவரும் அதையே பின்பற்றுவர்.
சங்கீதம் 94 : 16 (RCTA)
எனக்குத் தீமை செய்வோரை எதிர்ப்பது யார்? என் சார்பாய் எழுந்து பேசுவது யார்? தீமை செய்வோரை எதிர்த்து என் சார்பாகப் பேசுவது யார்?
சங்கீதம் 94 : 17 (RCTA)
ஆண்டவர் எனக்குத் துணை செய்திராவிடில், விரைவாகவே என் ஆன்மா கீழுலகம் சென்றிருக்கும்.
சங்கீதம் 94 : 18 (RCTA)
இதோ, என் நடை தள்ளாடுகிறது" என்று நான் நினைக்கையில், ஆண்டவரே, உம் அருள் என்னைத் தாங்குகிறது.
சங்கீதம் 94 : 19 (RCTA)
என் இதயத்தில் கவலைகள் மிகும் வேளையில், உமது ஆறுதல் என் ஆன்மாவை இன்பத்தில் ஆழ்த்துகிறது.
சங்கீதம் 94 : 20 (RCTA)
அநீதத் தீர்ப்பளிப்பவர்கள் உம்மோடு தொடர்பு கொள்வரோ? சட்டம் என்ற பெயரால் தொல்லை கொடுப்பவரோடு உமக்கு ஏது தொடர்பு?
சங்கீதம் 94 : 21 (RCTA)
நீதிமான்களின் உயிருக்கு அவர்கள் உலை வைக்கின்றனர்: மாசற்றவனின் இரத்தத்தைச் சிந்துகின்றனர்.
சங்கீதம் 94 : 22 (RCTA)
ஆனால் ஆண்டவர் எனக்கு அசையாத அரண்: என் இறைவன் எனக்கு அடைக்கலப் பாறை.
சங்கீதம் 94 : 23 (RCTA)
அவர்கள் செய்த தீமை அவர்கள் மேலேயே விழச் செய்வார்; அவர்களுடைய வஞ்சகத்தின் பொருட்டு அவர்களையே அழித்து விடுவார்: ஆண்டவராகிய நம் இறைவன் அவர்களை ஒழித்து விடுவார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23