சங்கீதம் 91 : 1 (RCTA)
உன்னதரின் அடைக்கலத்தில் இருப்பவனே, எல்லாம் வல்லவரின் நிழலில் வாழ்பவனே,
சங்கீதம் 91 : 2 (RCTA)
நீ ஆண்டவரை நோக்கி, "நீரே என் புகலிடம், நீரே என் அரண்: என் இறைவா, நான் உம்மை நம்பியுள்ளேன்" என்று சொல்.
சங்கீதம் 91 : 3 (RCTA)
ஏனெனில், வேடர்களின் கண்ணிகளினின்றும், கொடிய கொள்ளை நோயினின்றும் உன்னை அவரே விடுவிப்பார்.
சங்கீதம் 91 : 4 (RCTA)
தம் சிறகுகளால் உன்னைக் காப்பார்; அவருடைய இறக்கைகளுக்கடியில் அடைக்கலம் புகுவாய்; அவருடைய வார்த்தை உனக்குக் கேடயமும் கவசமும்போல் இருக்கும்.
சங்கீதம் 91 : 5 (RCTA)
இரவின் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும் நீ அஞ்ச வேண்டியதில்லை.
சங்கீதம் 91 : 6 (RCTA)
இருளில் உலவும் கொள்ளை நோய், நண்பகலில் துன்புறுத்தும் ஆபத்து எதற்குமே நீ அஞ்ச வேண்டியதில்லை.
சங்கீதம் 91 : 7 (RCTA)
உன் அருகில் ஆயிரம் விழட்டும், உன் வலப்பக்கத்தில் பத்தாயிரம் விழட்டும்: உன்னை எதுவும் அணுகாது.
சங்கீதம் 91 : 8 (RCTA)
எனினும் உன் கண்ணாலேயே நீ காண்பாய்: பாவிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை நீயே பார்ப்பாய்.
சங்கீதம் 91 : 9 (RCTA)
உனக்கோ, ஆண்டவரே உன் புகலிடம்: உன்னதமானவரையே நீ உனக்குப் பாதுகாப்பு அரணாகக் கொண்டாய்.
சங்கீதம் 91 : 10 (RCTA)
தீமை உன்னை அணுகாது: துன்பம் உன் உறைவிடத்தை நெருங்காது.
சங்கீதம் 91 : 11 (RCTA)
ஏனெனில், நீ செல்லும் இடங்களில் எல்லாம், உன்னைக் காக்கும்படி தம் தூதருக்கு உன்னைக் குறித்துக் கட்டளையிட்டார்.
சங்கீதம் 91 : 12 (RCTA)
உன் கால் கல்லில் மோதாதபடி, அவர்கள் உன்னைக் கைகளில் தாங்கிக் கொள்வார்கள்.
சங்கீதம் 91 : 13 (RCTA)
நச்சுப் பாம்பின் மீதும், விரியன் பாம்பின் மீதும் நடந்து செல்வாய்: சிங்கத்தையும் பறவை நாகத்தையுமே மிதித்துப் போடுவாய்.
சங்கீதம் 91 : 14 (RCTA)
அவன் என்னையே சார்ந்திருப்பதால், அவனை விடுவிப்பேன்.
சங்கீதம் 91 : 15 (RCTA)
என் பெயரை அறிந்ததால், அவனைக் காப்பாற்றுவேன்; என்னை நோக்கிக் கூப்பிடுவான்; அவன் செபத்தைக் கேட்பேன்: துன்ப வேளையில் அவனோடு இருப்பேன்; அவனைத் தப்புவித்து பெருமைப்படுத்துவேன்.
சங்கீதம் 91 : 16 (RCTA)
நீடிய வாழ்வினால் அவனுக்கு மன நிறைவு தருவேன்: என் மீட்பினை அவனுக்குக் காட்டுவேன்.
❮
❯