சங்கீதம் 89 : 1 (RCTA)
ஆண்டவரது அருட்செயல்களை நினைத்து நான் என்றென்றும் பாடுவேன்: உமது சொல்லுறுதியை எல்லாத் தலைமுறைகளுக்கும் என் நாவால் எடுத்துரைப்பேன்.
சங்கீதம் 89 : 2 (RCTA)
என்றென்றும் உள்ளது எம் அருளன்பு' என்று நீர் கூறினீர்: உமது சொல்லுறுதிக்கு வானகமே அடிதளம்.
சங்கீதம் 89 : 3 (RCTA)
நான் தேர்ந்தெடுத்தவரோடு உடன்படிக்கை செய்து கொண்டேன், என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டுக் கூறியது.
சங்கீதம் 89 : 4 (RCTA)
உன் சந்ததியை என்றென்றும் நிலைநாட்டுவேன்; எல்லாத் தலைமுறைகளிலும் உன் அரியணை நிலைக்கச் செய்வேன்'.
சங்கீதம் 89 : 5 (RCTA)
ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் போற்றிப் புகழ்கின்றன: வானோர் கூட்டம் உமது சொல்லுறுதியைக் கொண்டாடும்.
சங்கீதம் 89 : 6 (RCTA)
வானத்தில் உள்ளவர் யார் ஆண்டவருக்கு நிகராகக் கூடும்? விண்ணவருள் யார் ஆண்டவருக்கு இணை?
சங்கீதம் 89 : 7 (RCTA)
புனிதர்களின் கூட்டத்தில் கடவுள் அச்சத்துக்குரியவர்: அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும் மேலாக அச்சத்துக்குரியவர்; மாண்பு மிக்கவர்.
சங்கீதம் 89 : 8 (RCTA)
ஆண்டவரே, சேனைகளின் இறைவா, உமக்கு நிகர் யார்? ஆண்டவரே, நீர் வல்லமையுள்ளவர்: உமது சொல்லுறுதி உம்மைச் சூழ்ந்துள்ளது.
சங்கீதம் 89 : 9 (RCTA)
கொந்தளிக்கும் கடலுக்கும் நீர் கட்டளையிடுகிறீர்: பொங்கி எழும் அலைகளை நீர் அடக்குகிறீர்.
சங்கீதம் 89 : 10 (RCTA)
ராகாப்பை நீர் பிளந்து நசுக்கி விட்டீர்: வன்மை மிக்க உம் கரத்தால் உம் எதிரிகளைச் சிதறடித்தீர்.
சங்கீதம் 89 : 11 (RCTA)
வானமும் உமதே, வையமும் உமதே: பூவுலகையும் அதிலுள்ள அனைத்தையும் அமைத்தவர் நீரே.
சங்கீதம் 89 : 12 (RCTA)
வடக்கையும் தெற்கையும் உருவாக்கியவர் நீரே: தாபோர் மலையும் எர்மோன் மலையும் உம் பெயரைக் கேட்டுக் களிகூர்கின்றன.
சங்கீதம் 89 : 13 (RCTA)
வல்லமை மிக்கது உமது புயம்: வலிமை கொண்டது உமது கரம், ஓங்கியுள்ளது உமது வலக்கரம்!
சங்கீதம் 89 : 14 (RCTA)
நீதியும் நியாயமுமே உம் அரியணைக்கு அடித்தளம்: அருளும் உண்மையும் உமக்கு முன்செல்லும்.
சங்கீதம் 89 : 15 (RCTA)
உமது விழா ஆர்ப்பரிப்பில் பங்குபெறுவோர் பேறு பெற்றோர்: ஆண்டவரே, அவர்கள் உம் முகத்தின் ஒளியில் நடக்கின்றனர்.
சங்கீதம் 89 : 16 (RCTA)
உமது பெயரை நினைத்து என்றும் அகமகிழ்கின்றனர்: உமது நீதியை நினைத்துப் பெருமிதப் படுகின்றனர்.
சங்கீதம் 89 : 17 (RCTA)
ஏனெனில், அவர்களது வல்லமைக்குச் சிறப்புத் தருபவர் நீர்: உம் தயவால் தான் எங்கள் வலிமை ஓங்கியுள்ளது.
சங்கீதம் 89 : 18 (RCTA)
நமக்குள்ள கேடயம் ஆண்டவருடையதே: நம் அரசரும் இஸ்ராயேலரின் பரிசுத்தருக்குச் சொந்தமானவரே.
சங்கீதம் 89 : 19 (RCTA)
ஆதியில், உம் புனிதர்களுக்குக் காட்சி தந்து நீர் சொன்னது: 'வல்லவனுக்கு மணிமுடி சூட்டினேன்; மக்களினின்று ஒருவனை நான் தேர்ந்தெடுத்து மகிமைப்படுத்தினேன்.
சங்கீதம் 89 : 20 (RCTA)
என் ஊழியன் தாவீதை நான் தேர்ந்தெடுத்தேன்: புனித தைலத்தால் அவரை அபிஷுகம் செய்தேன்.
சங்கீதம் 89 : 21 (RCTA)
அதனால் என் கைவன்மை என்றும் அவருக்குத் துணை நிற்கச் செய்வேன்: என் புயப்பலம் அவரை ஒடுக்க முடியாது.
சங்கீதம் 89 : 22 (RCTA)
எதிரி அவரை ஏமாற்ற மாட்டான்: தீயவன் அவரை ஒடுக்க முடியாது.
சங்கீதம் 89 : 23 (RCTA)
அவருக்கெதிரிலேயே அவருடைய எதிரிகளை நொறுக்கி விடுவேன்: அவருடைய பகைவர்களை வதைத்தொழிப்பேன்.
சங்கீதம் 89 : 24 (RCTA)
என் சொல்லுறுதியும் என் அருளும் அவரோடிருக்கும்: என் பெயரினால் அவரது வலிமை ஓங்கும்.
சங்கீதம் 89 : 25 (RCTA)
அவரது செங்கோல் ஓங்கச் செய்வேன்: ஆறுகளின் மேல் அவரது ஆட்சியைப் பரவச் செய்வேன்.
சங்கீதம் 89 : 26 (RCTA)
நீரே என் தந்தை, என் இறைவன், எனக்கு மீட்பளிக்கும் அரண் என்று என்னை நோக்கிக் கூறுவார்.
சங்கீதம் 89 : 27 (RCTA)
நானும் அவரை என் தலைப்பேறாக்குவேன்: மண்ணக அரசருள் மாண்பு மிக்கவராக்குவேன்.
சங்கீதம் 89 : 28 (RCTA)
என்றென்றும் என் அருளன்பை அவர் மேல் பொழிவேன்: அவரோடு நான் செய்த உடன்படிக்கை நிலைத்திருக்கும்.
சங்கீதம் 89 : 29 (RCTA)
அவரது சந்ததி என்றென்றும் வாழச் செய்வேன்: அவரது அரியணை வானங்கள் போல் நீடிக்கச் செய்வேன்.
சங்கீதம் 89 : 30 (RCTA)
அவருடைய மக்கள் என் சட்டத்தை மீறுவார்களாகில், என் கட்டளைகளைக் கடைப்பிடிக்காவிடில்,
சங்கீதம் 89 : 31 (RCTA)
என் நியமங்களைப் பின்பற்றாவிடில், என் கற்பனைகளின் படி ஒழுகாவிடில்.
சங்கீதம் 89 : 32 (RCTA)
அவர்கள் செய்த குற்றத்திற்காகச் சாட்டையால் அடிப்பேன்; அவர்கள் பாவங்களுக்காகக் கசையால் அடிப்பேன்: அடி கொடுத்து அவர்களைத் திருத்துவேன்.
சங்கீதம் 89 : 33 (RCTA)
ஆனால் எனது அருளைத் தாவீதிடமிருந்து நீக்கிவிட மாட்டேன்: என் வாக்குறுதியை நான் மீறவே மாட்டேன்.
சங்கீதம் 89 : 34 (RCTA)
நான் செய்த உடன்படிக்கையை மீற மாட்டேன்: நான் சொன்ன சொல்லை மாற்றமாட்டேன்.
சங்கீதம் 89 : 35 (RCTA)
என் புனிதத்தை வைத்து ஒரே முறையாய் நான் ஆணையிட்டுச் சொன்னேன்: தாவீதிடம் நான் பொய் சொல்லவே மாட்டேன்.
சங்கீதம் 89 : 36 (RCTA)
அவரது சந்ததி என்றென்றும் நிலைத்திருக்கும்: அவரது அரியணை கதிரவனை போல் என் முன் என்றும் விளங்கும்.
சங்கீதம் 89 : 37 (RCTA)
வானத்தில் ஒளிரும் நிலவைப் போல், அவரது அரியணை நிலைத்திருக்கும்.'
சங்கீதம் 89 : 38 (RCTA)
நீரோ அபிஷுகமானவரைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டீர்: அவர் மீது மிகுந்த சினம் கொண்டீர்.
சங்கீதம் 89 : 39 (RCTA)
உம் ஊழியனுடன் செய்து கொண்ட உடன்படிக்கையைப் புறக்கணித்தீர்; அவரது மணிமுடியைத் தரையில் தூக்கி எறிந்தீர்.
சங்கீதம் 89 : 40 (RCTA)
அவருடைய நகர மதில்களைத் தகர்த்தெறிந்தீர்: கோட்டைக் கொத்தளங்கள் அழிவுற விட்டு விட்டீர்.
சங்கீதம் 89 : 41 (RCTA)
வழியில் போவோர் வருவோர் அவரைக் கொள்ளையடித்தனர்: அயலாரின் நகைப்புக்கு அவர் இலக்கானார்.
சங்கீதம் 89 : 42 (RCTA)
எதிரிகளின் வலக்கை ஓங்கச் செய்தீர்: அவரைப் பகைத்தவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியால் துள்ளச் செய்தீர்.
சங்கீதம் 89 : 43 (RCTA)
அவரது வாளின் முனையை முறித்து விட்டீர்: போரின் போது நீர் ஆதரவு காட்டவில்லை.
சங்கீதம் 89 : 44 (RCTA)
அவரது மாட்சி மறையச் செய்தீர்: அவரது அரியணையைக் கீழே தள்ளிவிட்டீர்.
சங்கீதம் 89 : 45 (RCTA)
அவரது இளமை விரைவில் முடிவடையச் செய்தீர்: அவமானத்தில் அவரை ஆழ்த்தினீர்.
சங்கீதம் 89 : 46 (RCTA)
எது வரைக்கும் ஆண்டவரே: எந்நாளுமே மறைந்திருப்பீரோ? எதுவரை உமது சினம் நெருப்¢புப் போல் மூண்டெழும்?
சங்கீதம் 89 : 47 (RCTA)
எவ்வளவு குறுகியது என் வாழ்வு என்பதை நினைவுகூரும்: நீர் படைத்த மனிதர்கள் எவ்வளவு நிலையற்றவர்கள் என்று நினைவுகூரும்.
சங்கீதம் 89 : 48 (RCTA)
சாவுக்குட்படாமல் வாழ்பவன் யார்? கீழுலகின் பிடியினின்று தன் உயிரை விடுவிப்பவன் யார்?
சங்கீதம் 89 : 49 (RCTA)
ஆண்டவரே, ஆதிகாலத்தில் நீர் காட்டிய தயவெல்லாம் இப்போதெங்கே? உம் சொல்லுறுதியால் தாவீதுக்கு ஆணையிட்டுச் சொன்ன தயவெல்லாம் எங்கே?
சங்கீதம் 89 : 50 (RCTA)
ஆண்டவரே, உம் ஊழியர் படும் நிந்தனைகளையெல்லாம் நினைவுகூரும்: புறவினத்தார் காட்டும் பகையும் எதிர்ப்பும் என் நெஞ்சிலே தாங்குகிறேனே!
சங்கீதம் 89 : 51 (RCTA)
ஆண்டவரே, உம் எதிரிகள் நீர் அபிஷுகம் பண்ணினவரைப் பழிக்கிறார்கள்: அவர் போகுமிடமெல்லாம் அவரைத் தூற்றுகிறார்கள்.
சங்கீதம் 89 : 52 (RCTA)
என்றென்றும் ஆண்டவர் போற்றி: ஆமென், ஆமென்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52

BG:

Opacity:

Color:


Size:


Font: