சங்கீதம் 88 : 1 (RCTA)
என் ஆண்டவரே, என் இறைவா, பகலில் உம்மை நோக்கி அழைக்கிறேன்: இரவிலும் உம் திருமுன் அழுது புலம்புகிறேன்.
சங்கீதம் 88 : 2 (RCTA)
என் செபம் உம்மிடம் வரக்கடவது: என் குரலுக்குச் செவி சாய்த்தருளும்.
சங்கீதம் 88 : 3 (RCTA)
ஏனென்றால், என் ஆன்மா தீமைகளால் நிறைந்துவிட்டது: என் வாழ்க்கை கீழுலகை நெருங்குகிறது.
சங்கீதம் 88 : 4 (RCTA)
கீழுலகில் இறங்குகிறவர்களில் நானும் ஒருவனாவேன்: வலுவற்ற மனிதனைப் போலானேன்.
சங்கீதம் 88 : 5 (RCTA)
இறந்தவர்களுள் ஒருவனாய்க் கிடக்கிறேன். கொலையுண்டு கல்லறையில் வைக்கப்பட்டவர்கள் போல் ஆனேன். அவர்களை நீர் நினைப்பதில்லை: உம் அரவணைப்பினின்று அவர்கள் விலகப்பட்டனர்.
சங்கீதம் 88 : 6 (RCTA)
படுகுழியில் என்னை விட்டுவிட்டீர்: இருளினிடையிலும் பாதாளத்திலும் என்னை வைத்தீர்.
சங்கீதம் 88 : 7 (RCTA)
உமது சினம் என்மேல் வந்து விழுகின்றது. உமது சினம் என்னும் கடலின் வெள்ளத்தால் என்னை நீர் மூழ்கடிக்கின்றீர்.
சங்கீதம் 88 : 8 (RCTA)
எனக்கு அறிமுகமானவர்கள் என்னை விட்டு அகலச் செய்தீர்: அவர்களுக்கு என்மீது வெறுப்பு உண்டாகச் செய்தீர். நான் அடைபட்டுக் கிடக்கிறேன்: வெளியேற முடியாமலிருக்கிறேன்.
சங்கீதம் 88 : 9 (RCTA)
என் கண்கள் துன்பத்தினால் கலங்கிப் பஞ்சடைந்து போயின: ஆண்டவரே, நாள் முழுவதும் உம்மை நோக்கி என் கைகளை நீட்டினேன்.
சங்கீதம் 88 : 10 (RCTA)
இறந்தோருக்காகவா நீர் அரியன செய்கிறீர்? இறந்தோர் எழுந்து உம்மைப் போற்றுவரோ?
சங்கீதம் 88 : 11 (RCTA)
கல்லறையில் உமது நன்மைத்தனத்தை எடுத்துரைப்பவர்கள் யார்? கீழ் உலகில் உமது பிரமாணிக்கத்தைப் போற்றுபவர்கள் யார்?
சங்கீதம் 88 : 12 (RCTA)
இருட்டுலகில் உம் வியத்தகு செயல்கள் வெளிப்படுமா? மறதி நிலவும் அவ்வுலகில் உமது அருள் வெளியாகுமா?
சங்கீதம் 88 : 13 (RCTA)
ஆண்டவரே, நானோவெனில் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்: காலையில் என் வேண்டுதல் உம்மை நோக்கி எழும்புகிறது.
சங்கீதம் 88 : 14 (RCTA)
ஆண்டவரே, ஏன் என் ஆன்மாவைப் புறக்கணிக்கிறீர்? என்னிடமிருந்து ஏன் உமது திருமுகத்தை மறைத்துக் கொள்கிறீர்?
சங்கீதம் 88 : 15 (RCTA)
நான் துயர்மிக்கவனாயிருக்கிறேன், என் இளமை முதல் இறந்து கொண்டே இருக்கிறேன்; உம் தண்டைனைகளைத் தாங்கித் தளர்ச்சியடைந்துள்ளேன்.
சங்கீதம் 88 : 16 (RCTA)
என் மேல் உம் கடுஞ்சினம் வந்து விழுந்தது. உம்முடைய பயங்கரத் தண்டனைகள் என்னை ஒழித்தே விட்டன.
சங்கீதம் 88 : 17 (RCTA)
அவைகள் நாள் முழுவதும் வெள்ளம் போல் என்னைச் சூழ்ந்து கொண்டு, என்னை ஒரே சமயத்தில் வளைத்துக் கொண்டன.
சங்கீதம் 88 : 18 (RCTA)
என் நண்பனையும் தோழனையும் என்னிடமிருந்து அகற்றி விட்டீர்: இருளே என் நண்பனாய் உள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18