திருமலை மீது தாம் அமைத்த இல்லத்தின் மேல் ஆண்டவர் பற்றுக் கெண்டிருக்கிறார்.
சங்கீதம் 87 : 2 (RCTA)
யாக்கோபின் கூடாரங்களை விட சீயோனின் வாயில்கள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்.
சங்கீதம் 87 : 3 (RCTA)
இறைவனின் திருநகரே, உன்னைக் குறித்து மாண்புமிக்க செய்திகள் கூறப்படுகின்றன.
சங்கீதம் 87 : 4 (RCTA)
என்னை வழிபடுபவர்களோடு ராகாபையும் பாபிலோனையும் சேர்த்துக் கொள்வேன்: இதோ பிலிஸ்தேயா, தீர், எத்தியோப்பிய மக்களைக் குறித்து, 'இவர்களும் அங்கே பிறந்தனர்' என்பர்.
சங்கீதம் 87 : 5 (RCTA)
சீயோனைக் குறித்து, 'இன்னானின்னான் அதிலே பிறந்தான்: உன்னதமானவர் தாமே அதை உறுதிப்படுத்தினார்' என்று சொல்லப்படும்.
சங்கீதம் 87 : 6 (RCTA)
மக்களினங்களைப் பதிவு செய்யும் போது, 'இன்னார் இங்கே பிறந்தனர்' என்று எழுதுவார்.
சங்கீதம் 87 : 7 (RCTA)
என் ஊற்றுகளெல்லாம் உன்னிடத்திலே உள்ளன' என்று நடனமாடி அனைவரும் பாடுவர்.