சங்கீதம் 84 : 1 (RCTA)
வான்படைகளின் ஆண்டவரே, உமதில்லம் எத்துணை அருமையாயுள்ளது.
சங்கீதம் 84 : 2 (RCTA)
என் ஆன்மா ஆண்டவருடைய ஆலயமுற்றங்களை விரும்பித் தேடிச் சோர்ந்து போகின்றது. என் உள்ளமும் உடலும் உயிருள்ள இறைவனை நினைந்து களிகூர்கின்றன.
சங்கீதம் 84 : 3 (RCTA)
அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கிடைத்தது: சேனைகளின் ஆண்டவரே, என் அரசே, என் இறைவா, உம் பீடங்கள் உள்ள இடத்திலே கிடைத்தது.
சங்கீதம் 84 : 4 (RCTA)
ஆண்டவரே, உம் இல்லத்தில் வாழ்வோர் பேறு பெற்றோர்: எந்நாளும் உம்மைப் புகழ்வார்கள்.
சங்கீதம் 84 : 5 (RCTA)
திருயாத்திரை செய்வதிலே நினைவாயிருந்து, உம்மிடம் உதவி பெறுபவன் பெறு பெற்றவன்.
சங்கீதம் 84 : 6 (RCTA)
வறண்ட பள்ளத்தாக்கில் அவர்கள் செல்லும் போது, அதை அவர்கள் நிரூற்றாகச் செய்வார்கள்: முதல் மழை பெய்ததும் அது உம் ஆசீரால் நிரம்பும்.
சங்கீதம் 84 : 7 (RCTA)
வலிமை மேல் வலிமை கொண்டு யாத்திரை செய்து, தேவர்களுக்கெல்லாம் இறைவனைச் சீயோனில் தரிசிப்பர்.
சங்கீதம் 84 : 8 (RCTA)
வான் படைகளின் ஆண்டவரே, என் வேண்டுதலைக் கேட்டருளும்: யாக்கோபின் இறைவனே, என் குரல் உம் செவியில் விழுவதாக.
சங்கீதம் 84 : 9 (RCTA)
எங்கள் கேடயமாகும் இறைவா, எங்களைக் கண்ணோக்கும்: நீர் அபிஷுகம் செய்தவரின் மேல் உம் பார்வையைத் திருப்பும்.
சங்கீதம் 84 : 10 (RCTA)
உமது ஆலய முற்றங்களில் ஒரு நாள் இருப்பது, வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உண்மையிலேயே மேலானது.
சங்கீதம் 84 : 11 (RCTA)
பாவிகளின் கூடாரங்களில் தங்குவதை விட என் இறைவனது இல்லத்தின் வாயிலில் நிற்பதே மேலானது; ஆண்டவராகிய கடவுளே கதிரோனும் கேடயமுமாய் உள்ளார்: அருளும் மாட்சியும் தருபவர் ஆண்டவரே; மாசின்றி நடப்போர்க்கு எந்த நலனையும் மறுக்கமாட்டார்.
சங்கீதம் 84 : 12 (RCTA)
படைகளின் ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை வைத்தவன் பேறு பெற்றோன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12