சங்கீதம் 80 : 1 (RCTA)
இஸ்ராயேலரின் மேய்ப்பவரே, செவிசாய்த்தருளும்: யோசேப்பை ஆட்டு மந்தையைப் போல் வழி நடத்துபவரே, என் குரல் கேளும். கெருபீம்களின் மேல் வீற்றிருப்பவரே.
சங்கீதம் 80 : 2 (RCTA)
எப்பிராயீம், பெஞ்சமீன், மனாசே அவர்கள் முன் உம் மாண்பு விளங்கச் செய்யும்; உமது வல்லமையைத் தூண்டி எழுந்தருளும்: எம்மை மீட்க எழுந்து வாரும்.
சங்கீதம் 80 : 3 (RCTA)
இறைவா, நீர் எங்களுக்கு வாழ்வளித்தருளும்: எங்களுக்கு மீட்புக் கிடைக்க உமது இன் முகம் காட்டியருளும்.
சங்கீதம் 80 : 4 (RCTA)
படைகளின் இறைவனே, உம் மக்கள் மன்றாடுகையில், செவிகொடாமல் எதுவரை சினம் கொண்டிருப்பீர்?
சங்கீதம் 80 : 5 (RCTA)
கண்ணீரையே அவர்களுக்கு உணவாக ஊட்டினீர்: பெருகியோடிய கண்ணீரையே அவர்கள் பருகச் செய்தீர்.
சங்கீதம் 80 : 6 (RCTA)
எங்கள் அயலார்க்கு நாங்கள் சச்சரவின் காரணமாயிருக்கச் செய்தீர்: எங்கள் எதிரிகளின் நகைப்புக்கு இலக்கானோம்.
சங்கீதம் 80 : 7 (RCTA)
படைகளின் இறைவனே நீர் எங்களுக்கு மீண்டும் வாழ்வளித்தருளும் எங்களுக்கு மீட்புக் கிடைக்க உமது இன்முகம் காட்டியருளும்.
சங்கீதம் 80 : 8 (RCTA)
எகிப்தினின்று திராட்சைக் கொடி ஒன்றை எடுத்து வந்தீர்: புறவினத்தாரை விரட்டியடித்து அவர்கள் நாட்டில் அதை நட்டு வைத்தீர்.
சங்கீதம் 80 : 9 (RCTA)
அதற்கேற்ற நிலத்தைப் பண்படுத்தினீர்: அது வேர் விட்டு நாடு முழுவதும்¢ பரவியது.
சங்கீதம் 80 : 10 (RCTA)
அதன் நிழல் மலைகள் மீது விழலாயிற்று: அதன் கிளைகள் வளர்ந்தோங்கிய கேதுரு மரங்களையும் மூடின.
சங்கீதம் 80 : 11 (RCTA)
கடல் வரைக்கும் அதன் கொடிகள் படர்ந்தன: அதன் தளிர்கள் ஆறு வரையில் வளர்ந்தோங்கின.
சங்கீதம் 80 : 12 (RCTA)
பின்னர் ஏன் அதன் மதில் சுவரைத் தகர்த்து விட்டீர்? அவ் வழியாய்ச் செல்வோர் அனைவரும் அதில் பழம் பறிக்க ஏன் விட்டுவிட்டீர்?
சங்கீதம் 80 : 13 (RCTA)
காட்டுப் பன்றிகள் அதை அழிக்க ஏன் விட்டு விட்டீர்? காட்டு விலங்குகளை ஏன் அங்கேயே மேய விட்டு விட்டீர்?
சங்கீதம் 80 : 14 (RCTA)
சேனைகளின் இறைவனே, மீளவும் எழுந்து வாரும்; வனினின்று கண்ணோக்கிப் பாரும்: இத் திராட்சைக் கொடியை வந்து பாரும்.
சங்கீதம் 80 : 15 (RCTA)
உமது வலக்கரத்தால் நீர் நட்டதைப் பாதுகாத்தருளும்: நீர் வலிமைப்படுத்த விரும்பிய இவ்விளஞ் செடியைக் காத்தருளும்.
சங்கீதம் 80 : 16 (RCTA)
அதை அவர்கள் நெருப்பால் எரித்து விட்டனர்; அதைத் தகர்த்து விட்டனர்: உம் முகத்தின் அச்சத் தோற்றத்தால் அவர்கள் அழிவார்களாக.
சங்கீதம் 80 : 17 (RCTA)
உம் வலக்கரத்தால் தேர்ந்தெடுத்த ஆளை உம் கைவன்மை காப்பதாக: உமக்கென உறுதிப்படுத்திய மனிதனை அது காப்பதாக.
சங்கீதம் 80 : 18 (RCTA)
இனி நாங்கள் உம்மை விட்டு அகலோம்: உயிரோடு எங்களை நீர் காத்தருள்வீர்; உமது பெயரை நாங்கள் போற்றுவோம்.
சங்கீதம் 80 : 19 (RCTA)
ஆண்டவரே, சேனைகளின் இறைவனே, எங்களுக்கு மீண்டும் வாழ்வளித்தருளும். எங்களுக்கு மீட்புக் கிடைக்க, எங்களுக்கு இன்முகம் காட்டியருளும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19