சங்கீதம் 76 : 1 (RCTA)
யூதாவில் கடவுளை மக்கள் அறிவர், இஸ்ராயேலினிடையே அவரது பெயர் மாண்பு கொண்டது.
சங்கீதம் 76 : 2 (RCTA)
சாலேமில் உள்ளது அவரது கூடாரம். சீயோனில் உள்ளது அவரது உறைவிடம்.
சங்கீதம் 76 : 3 (RCTA)
அங்கே அவர் பளிச்சிடும் அம்புகளை முறித்தெறிந்தார். கேடயத்தையும் வாளையும் படைக்கலங்களையும் தகர்ந்தெறிந்தார்.
சங்கீதம் 76 : 4 (RCTA)
வல்லமையுள்ளவரே, மின்னொளியிடையே நீர் எழுந்தீர். என்றுமுள்ள மலைகளின் ஒளியை விட நீர் மாண்புற்றீர்.
சங்கீதம் 76 : 5 (RCTA)
வலிய நெஞ்சுடையவர்களும் கொள்ளையிடப்பட்டார்கள்; உறக்கத்தில் ஆழ்ந்தார்கள், வலிமையுள்ளவர்கள் அனைவருடைய கைகளும் செயலிழந்தன.
சங்கீதம் 76 : 6 (RCTA)
யாக்கோபின் இறைவனே, உமது அதட்டலைக் கேட்டு, தேர்களும் குதிரைகளும் மயங்கி விழந்தன.
சங்கீதம் 76 : 7 (RCTA)
பேரச்சத்துக்குரியவர் நீர்: உமது சினம் கொதித்தெழும் போது உம்மை எதிர்த்து நிற்பவன் யார்?
சங்கீதம் 76 : 8 (RCTA)
வானினின்று உமது நீதித் தீர்ப்புக் கேட்கச் செய்தீர்; மாநிலம் அதைக்கேட்டு அச்சமுற்றது, அடங்கிவிட்டது.
சங்கீதம் 76 : 9 (RCTA)
நீதித் தீர்ப்ளிக்கக் கடவுள் எழுந்த போது, மாநிலத்திலுள்ள எளியோரைக் காக்க அவர் எழுந்த போது, மாநிலம் அச்சமுற்று அடங்கி விட்டது.
சங்கீதம் 76 : 10 (RCTA)
சீறி எழுந்த ஏதோம் நாட்டினரும் உமது மகிமையை விளங்கச் செய்வர்: ஹேமாத்தில் எஞ்சி நிற்பவர் உமக்கு விழா எடுப்பர்.
சங்கீதம் 76 : 11 (RCTA)
உங்கள் இறைவனாகிய கடவுளுக்குப் பொருத்தனை செய்து நிறைவேற்றுங்கள். அவரைச் சூழ்ந்துள்ளவர் அனைவரும், அச்சத்துக்குரிய அவருக்குக் காணிக்கை கொண்டு வருவார்களாக.
சங்கீதம் 76 : 12 (RCTA)
தலைவர்களின் உயிரை எடுத்து விடுபவர் அவரே. மாநிலத்து அரசர்களுக்கு அச்சம் ஊட்டுபவர் அவரே.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12