சங்கீதம் 75 : 1 (RCTA)
உம்மைப் புகழ்கிறோம் ஆண்டவரே, உம்மைப் போற்றிப் புகழ்கிறோம், உமது பெயரைப் போற்றுகிறோம். உமது வியத்தகு செயல்களை எடுத்துரைக்கிறோம்.
சங்கீதம் 75 : 2 (RCTA)
நான் குறித்த நாளிலே நீதியின்படி நியாயம் வழங்குவேன்.
சங்கீதம் 75 : 3 (RCTA)
மாநிலம் தன் குடிகள் அனைவரோடும் அசைவுறலாம். ஆனால் நான் அதன் தூண்களை உறுதிப்படுத்தி உள்ளேன்.
சங்கீதம் 75 : 4 (RCTA)
இறுமாப்புடையவர்களை நோக்கி, ' செருக்குக் கொள்ள வேண்டாம்' என்கிறேன். நெறிகெட்டவர்களை நோக்கி, 'உங்கள் பலத்தைக் காட்டவேண்டாம்' என்கிறேன்.
சங்கீதம் 75 : 5 (RCTA)
உன்னதருக்கு எதிராக உங்கள் வல்லமையைக் காட்ட வேண்டாம். கடவுளுக்கு எதிராகச் செருக்குற்றுப் பேச வேண்டாம்.
சங்கீதம் 75 : 6 (RCTA)
ஏனெனில், இவ்வல்லமை உங்களுக்கு கிழக்கினின்றும், வராது, மேற்கினின்றும் வராது. பாலை வெளியினின்றும் வராது; மலைப்பாங்கினின்றும் வராது.
சங்கீதம் 75 : 7 (RCTA)
நீதித் தீர்ப்பளிப்பவர் கடவுளே. ஒருவனைத் தாழ்த்துகின்றார்; இன்னொருவனை உயர்த்துகின்றார்.
சங்கீதம் 75 : 8 (RCTA)
ஆண்டவருடைய கையில் துன்பக் கலம் ஒன்றிருக்கிறது: நிறைய நுரை பொங்கும் மது ரசக் கலவை அதில் உள்ளது. அதிலிருந்து இறைவன் ஊற்றுகிறார். உலகிலுள்ள தீயோர் அனைவரும் அதை வண்டல் மட்டும் உறிஞ்சிக் குடிப்பர்.
சங்கீதம் 75 : 9 (RCTA)
நானோ என்றென்றும் பெரு மகிழ்ச்சி கொள்வேன். யாக்கோபின் கடவுளுக்குப் புகழ்பாடுவேன்.
சங்கீதம் 75 : 10 (RCTA)
தீயவர்களின் வலிமையை முற்றிலும் முறித்துப் போடுவேன். நீதிமானின் வலிமையோ ஓங்கி நிற்கும்.
❮
❯