சங்கீதம் 73 : 1 (RCTA)
நேரிய மனத்தோர்க்குக் கடவுள் எவ்வளவு நல்லவர்! தூய உள்ளத்தினர்க்கு ஆண்டவர் எவ்வளவு நல்லவர்!
சங்கீதம் 73 : 2 (RCTA)
என் பாதங்களோ தடுமாறலாயின. சறுக்கி விழப் போனேன்.
சங்கீதம் 73 : 3 (RCTA)
ஏனெனில், தீயவர்களைக் கண்டு, பாவிகளுக்கு வந்த வாழ்வைப் பார்த்துப் பொறாமையுற்றேன்.
சங்கீதம் 73 : 4 (RCTA)
அவர்களுக்கு வேதனை எதுவுமில்லை, அவர்கள் உடலோ செழுமையும் கொழுமையும் கொண்டுள்ளது.
சங்கீதம் 73 : 5 (RCTA)
மனிதப் பிறவிகளுக்குள்ள இடுக்கண்கள் அவர்களுக்கு இல்லை: மற்ற மனிதர்களைப் போல் அவர்கள் துன்புறுவதில்லை.
சங்கீதம் 73 : 6 (RCTA)
எனவே மணிமாலை போல் செருக்கு அவர்களை அணி செய்கிறது. வன்செயலே அவர்களுக்கு ஆடை போல் இருக்கிறது.
சங்கீதம் 73 : 7 (RCTA)
அவர்கள் வன்னெஞ்சத்திலிருந்து எழுகிறது அக்கிரமம்: அவர்கள் மனதிலிருந்து மடமைகள் தோன்றுகின்றன
சங்கீதம் 73 : 8 (RCTA)
நகைக்கின்றனர், அவர்கள் தீமையே பேசுகின்றனர். துன்புறுத்துவோம் என இறுமாப்புடன் அச்சுறுத்துகின்றனர்.
சங்கீதம் 73 : 9 (RCTA)
வானத்தையே தாக்குகின்றது அவர்களது வாய்ச்சொல். வையகத்தில் பரவுகின்றது அவர்களுடைய பேச்சு.
சங்கீதம் 73 : 10 (RCTA)
என் மக்களும் அவர்கள் பால் திரும்புகின்றனர்: அவர்கள் செய்வதை எல்லாம் தண்ணீர் குடிப்பது போல் ஏற்றுக் கொள்ளுகின்றனர்.
சங்கீதம் 73 : 11 (RCTA)
எங்ஙனம் அறிவார் கடவுள்? நி15714அறிவென்பது உண்டா உன்னதருக்கு?" என்கின்றனர்.
சங்கீதம் 73 : 12 (RCTA)
இதோ பாவிகள், இத்தன்மையோர் மனக்குத்தலின்றி, தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.
சங்கீதம் 73 : 13 (RCTA)
ஆகவே நான் குற்றமின்றி என் உள்ளத்தைக் காத்தது வீண் தானோ? மாசின்றி என் கைகளைக் கழுவியது பயனற்றதோ?
சங்கீதம் 73 : 14 (RCTA)
ஏனெனில், எந்நாளும் நான் வேதனையுறுகிறேன் நாடோறும் துன்பத்திற்குள்ளாகிறேன்.
சங்கீதம் 73 : 15 (RCTA)
நானும் அவர்களைப் போல் பேசலாமே" என்று நான் நினைத்திருந்தால், உம் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் வாய்மை தவறியவனாவேன்.
சங்கீதம் 73 : 16 (RCTA)
ஆகவே இதன் உண்மை என்னவென்று கண்டறிய முயன்றேன், ஆனால் அது பெரிய புதிராயிருந்தது.
சங்கீதம் 73 : 17 (RCTA)
கடவுளுடைய புனித தலத்தில் நான் நுழைந்ததும், அவர்களுடைய கதி என்ன என்று உணர்ந்தேன்.
சங்கீதம் 73 : 18 (RCTA)
உண்மையிலேயே நீர் அவர்களைச் சறுக்கலான இடத்தில் நிறுத்துகிறீர். பாதாளத்தில் அவர்களை விழச் செய்கிறீர்.
சங்கீதம் 73 : 19 (RCTA)
எவ்வளவு விரைவாக அவர்கள் விழுந்தொழிந்தனர்! பேரச்சத்துக்குள்ளாகி அவர்கள் எடுபட்டு மறைந்தனர்!
சங்கீதம் 73 : 20 (RCTA)
விழித்தெழுபவனின் கனவு போல் அவர்களுக்கு ஆயிற்று. ஆண்டவரே, அப்படியே நீர் எழும் போது அவர்கள் வேடத்தைக் கலைத்து விடுவீர்.
சங்கீதம் 73 : 21 (RCTA)
என் மனம் கசப்புற்ற வேளையில், என் உள்ளம் குத்துண்ட போது,
சங்கீதம் 73 : 22 (RCTA)
நான் அறியாமலிருந்தேன்; உணராமல் போனேன் மிருகத்தைப் போல் உம் முன்னிலையில் கிடந்தேன்.
சங்கீதம் 73 : 23 (RCTA)
எனினும். எந்நேரமும் நான் உம்மோடிருக்கிறேன். நீர் என் வலக் கரத்தைப் பிடித்துத் தாங்குகிறீர்.
சங்கீதம் 73 : 24 (RCTA)
உமது அறிவுத் திறனைக்கொண்டு என்னை வழி நடத்துவீர் இறுதியில் நான் உமது மகிமையில் பங்கடையச் செய்வீர்.
சங்கீதம் 73 : 25 (RCTA)
உம்மைத் தவிர எனக்கு வானுலகில் உள்ளவர் யார்? உம்மோடு நான் வாழ்ந்தால் இவ்வுலகில் இன்பம் தருவது எதுவுமில்லையே!
சங்கீதம் 73 : 26 (RCTA)
என் உடலும் உள்ளமும் சோர்வடைகின்றன. ஆயினும் கடவுளே என் உள்ளத்துக்கு அரண், என்றென்றைக்கும் என் உரிமைச் சொத்து.
சங்கீதம் 73 : 27 (RCTA)
உம்மை விட்டு அகல்வோர் இதோ அழிந்தொழிவர். உமக்கு வஞ்சகம் செய்வோர் அனைவரையும் அழித்து விடுவீர்.
சங்கீதம் 73 : 28 (RCTA)
கடவுளுக்கருகில் வாழ்வது எனக்கு எவ்வளவோ நலம், ஆண்டவராகிய கடவுளிடம் அடைக்கலம் புகுவது எவ்வளவோ நலம். சீயோனின் வாயில்களில் உம் செயல்களனைத்தையும் நான் எடுத்துரைப்பேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28