சங்கீதம் 71 : 1 (RCTA)
ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுகிறேன்: எந்நாளும் நான் ஏமாற்றம் அடைய விடாதேயும்.
சங்கீதம் 71 : 2 (RCTA)
உமது நீதிக்கேற்ப எனக்கு விடுதலை அளித்துக் காத்தருளும். எனக்கு உம் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்.
சங்கீதம் 71 : 3 (RCTA)
என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்: ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கிறீர்.
சங்கீதம் 71 : 4 (RCTA)
தீயவனின் கையினின்று, என் இறைவா, என்னை விடுவித்தருளும்: துன்புறுத்தும் கொடியவனின் பிடியினின்று என்னை விடுவித்தருளும்.
சங்கீதம் 71 : 5 (RCTA)
ஏனெனில், என் இறைவா, நான் உம்மையே எதிர்நோக்கி வாழ்கிறேன்: ஆண்டவரே, என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை.
சங்கீதம் 71 : 6 (RCTA)
பிறப்பிலிருந்து நீரே எனக்கு ஆதாரம்; தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு: உம்மையே நான் என்றும் நம்பி வாழ்கிறேன்.
சங்கீதம் 71 : 7 (RCTA)
நீர் எனக்கு வலிமை மிக்க துணை, எனவே, பலருக்கு நான் புதுமைப் பிறவி போல் உள்ளேன்.
சங்கீதம் 71 : 8 (RCTA)
என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.
சங்கீதம் 71 : 9 (RCTA)
முதிர் வயதில் என்னைத் தள்ளி விடாதேயும்: என் பலம் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்.
சங்கீதம் 71 : 10 (RCTA)
ஏனெனில் என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே: என் உயிரை பறிக்கப் பார்ப்பவர்கள் ஒன்று கூடிச் சதி செய்கின்றனர்.
சங்கீதம் 71 : 11 (RCTA)
கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்; அவனைப் பின்தொடர்ந்து ஓடி அவனைப் பிடியுங்கள்: அவனை விடுவிக்க ஒருவருமில்லை" என்று பேசிக் கொள்கின்றனர்.
சங்கீதம் 71 : 12 (RCTA)
இறைவா, என்னை விட்டு வெகு தொலைவில் போகாதேயும்: என் இறைவா, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
சங்கீதம் 71 : 13 (RCTA)
என் உயிருக்கு உலைவைப்பவர்கள் ஏமாற்றமடைந்து ஒழிவார்களாக: எனக்குத் தீமை செய்யப் பார்ப்பவர்களை ஏமாற்றமும் வெட்கமும் ஆட்கொள்வதாக.
சங்கீதம் 71 : 14 (RCTA)
நானோ என்றும் நம்பிக்கையோடிருப்பேன்: ஒவ்வொரு நாளும் மேன் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன்.
சங்கீதம் 71 : 15 (RCTA)
உமது அருள் நன்மையை என் நா எடுத்துரைக்கும்; நாள் முழுவதும் உம் அருட்துணையை எடுத்துச் சொல்லும்: உமது அருட்செயல்களுக்கோ கணக்கே இல்லை.
சங்கீதம் 71 : 16 (RCTA)
இறைவனின் வல்லமையை எடுத்துரைப்பேன்: ஆண்டவரே, உமக்கு மட்டுமே உரிய நீதி நேர்மையைப் புகழ்ந்து உரைப்பேன்.
சங்கீதம் 71 : 17 (RCTA)
இறைவா, நீர் எனக்கு என் இளமையிலிருந்தே அறிவு புகட்டினீர்: இந்நாள் வரை நான் உமது வியத்தகு செயல்களை வெளிப்படுத்துகிறேன்.
சங்கீதம் 71 : 18 (RCTA)
முதிர் வயதிலும் நகரை திரை பருவத்திலும் இறைவா, நீர் என்னைக் கைவிடாதேயும்: உமது கைவன்மையை இத்தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வரையிலும், இனி வரும் தலைமுறைகளுக்கு உம் ஆற்றலை நான் கூறும் வரையிலும் என்னைக் கைவிடாதேயும்.
சங்கீதம் 71 : 19 (RCTA)
வானமட்டும் எட்டுகின்ற உமது நீதி நேர்மையை நான் எடுத்துரைக்கும் வரையிலும் இறைவா, நீரென்னைக் கைவிடாதேயும்: அந்த நீதியாலன்றோ அரியன பெரியன நீர் செய்துள்ளீர். இறைவனே, உமக்கு நிகர் யார்?
சங்கீதம் 71 : 20 (RCTA)
பல கொடும் துன்பங்களுக்கு நான் ஆளாகச் செய்தீர்: மீளவும் நான் உயிர் பெறச் செய்வீர்.
சங்கீதம் 71 : 21 (RCTA)
பாதாளத்தினின்று என்னை மீளவும் தூக்கிவிடுவீர்: எனக்குள்ள மேன்மையைப் பெருகச் செய்வீர்; மீளவும் என்னைத் தேற்றியருளும்.
சங்கீதம் 71 : 22 (RCTA)
இறைவா, நானும் வீணை கொண்டு உமது சொல்லுறுதியைக் கொண்டாடுவேன்: இஸ்ராயேலின் பரிசுத்தரே, யாழ் கொண்டு உமக்குப் புகழ் பாடுவேன்.
சங்கீதம் 71 : 23 (RCTA)
நான் உமக்குப் புகழ் பாடுகையில் என் நா அக்களிக்கும்: நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும்.
சங்கீதம் 71 : 24 (RCTA)
நாள் முழுவதும் உம் நீதி நேர்மையை என் நா எடுத்துரைக்கும், ஏனெனில், எனக்குக் கெடுதி செய்யப் பார்ப்பவர்கள் ஏமாற்றமும் வெட்கமும் அடைந்தார்கள்.
❮
❯