சங்கீதம் 68 : 1 (RCTA)
எழுகின்றார் இறைவன், சிதறுண்டு போகிறார்கள் அவர் எதிரிகள்: அவரைப் பகைத்தவர்கள் அவர் திருமுன் நிற்காமல் ஓடிப்போகிறார்கள்.
சங்கீதம் 68 : 2 (RCTA)
புகையானது சிதறுவது போல், அவர்கள் சிதறிப் போகட்டும்: அணலில் மெழுகு உருகுவது போல், தீயோர் கடவுள் திருமுன் மடிந்தொழிவர்.
சங்கீதம் 68 : 3 (RCTA)
நீதிமான்களோ மகிழ்வுறுவர், கடவுள் திருமுன் அக்களிப்பர். மகிழ்ச்சியால் இன்பம் கொள்வர்.
சங்கீதம் 68 : 4 (RCTA)
இறைவனுக்கு இன்னிசை பாடுங்கள், அவரது பெயருக்குப் புகழ் பாடுங்கள்: பாலைவெளியின் வழியாய்ப் பவனி செல்லும் அவருக்குப் பாதையை ஆயத்தப் படுத்துங்கள். ஆண்டவர் என்பது அவரது திருப்பெயர்: அவர் முன்னிலையில் அக்களிப்புறுங்கள்.
சங்கீதம் 68 : 5 (RCTA)
தம் புனித இல்லத்தில் உறையும் இறைவன் அநாதைகளுக்குத் தந்தை: விதவைகளுக்குப் பாதுகாவல்.
சங்கீதம் 68 : 6 (RCTA)
கைவிடப்பட்டவர்க்குக் கடவுள் இல்லமொன்றை ஆயத்தப்படுத்துகிறார், சிறைப் பட்டவர்களை நல்வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறார்: எதிர்த்து எழுபவர்களோ வறண்ட நிலத்தில் வாழ்வார்கள்.
சங்கீதம் 68 : 7 (RCTA)
இறைவா, நீர் உம் மக்களுக்கு முன் நடந்து சென்ற போது, பாலை வெளியின் வழியாய் நடந்த போது.
சங்கீதம் 68 : 8 (RCTA)
பூமி நடுங்கிற்று, வானங்கள் கடவுளைக் கண்டு பனி மழை பெய்தன: இஸ்ராயேலின் கடவுளைக் கண்டு சீனாய் அதிர்ந்தது.
சங்கீதம் 68 : 9 (RCTA)
இறைவனே, உம் உரிமையான நாட்டின் மீது நிரம்ப மழை பொழியச் செய்தீர்: சாரமற்றுப் போன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர்.
சங்கீதம் 68 : 10 (RCTA)
உம்முடைய மந்தையான மக்கள் அதில் குடியிருந்தனர்: இறைவனே, உமது அருளால், நீர் ஏழைகளுக்கென்று அதைத் தயார் செய்தீர்.
சங்கீதம் 68 : 11 (RCTA)
ஆண்டவர் ஒரு செய்தி கூறுகிறார்: அந்த மகிழ்ச்சிச் செய்தியை உரைப்பவர் கூட்டம் பெரிதாயிற்று.
சங்கீதம் 68 : 12 (RCTA)
சேனைகளை நடத்தும் அரசர்கள் ஓடுகின்றனர், புறங்காட்டி ஓடுகின்றனர்!" வீட்டில் குடியிருப்பவர்கள் கொள்ளைப் பொருள்களைப் பிகிர்ந்துகொள்ளுகின்றனர்.
சங்கீதம் 68 : 13 (RCTA)
ஆட்டுக்கிடைகளுக்கிடையே நீங்கள் இளைப்பாறிய போது, புறாவின் சிறகுகள் வெள்ளிப் போல் மிளிர்ந்தன; அதன் இறக்கைகள் பொன் போல் மின்னின. எல்லாம் வல்லவர் அங்கு அரசர்களைச் சிதறடித்த போது,
சங்கீதம் 68 : 14 (RCTA)
சால்மோன் மலையில் உறைபனி பெய்தது.
சங்கீதம் 68 : 15 (RCTA)
பாசானின் மலைகள் மிக உயர்ந்தவை: பாசானின் மலைகள் செங்குத்தானவை.
சங்கீதம் 68 : 16 (RCTA)
செங்குத்தான மலைகளே, கடவுள் குடியிருக்கத் திருவுளம் கொண்ட மலையை நீங்கள் ஏன் பொறாமையோடு நோக்குகிறீர்கள்? அம்மலையில் அன்றோ என்றும் குடியிருக்க ஆண்டவர் திருவுளம் கொண்டார்.
சங்கீதம் 68 : 17 (RCTA)
கடவுளுடைய தேர்கள் ஆயிரமாயிரம், பல்லாயிரம், சீனாயிலிருந்து புறப்பட்டு ஆண்டவர் திருத்தலத்திற்கு எழுந்தருளி வந்தார்.
சங்கீதம் 68 : 18 (RCTA)
உயர்ந்த மலை மீது ஏறினீர், சிறைப்படுத்தியவர்களை அழைத்துச் சென்றீர்; மானிடரை நீர் கொடையாகப் பெற்றீர்: ஆண்டவராகிய கடவுளோடு குடியிருக்க விரும்பாதவர்களையும் நீர் பெற்றுக் கொண்டீர்.
சங்கீதம் 68 : 19 (RCTA)
ஒவ்வொரு நாளும் ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக: நம் மீட்பாராகிய கடவுள் நம் சுமைகளைத் தாங்கிக் கொள்கின்றார்.
சங்கீதம் 68 : 20 (RCTA)
நம் கடவுள் நமக்கு மீட்பருளும் கடவுள்: சாவினின்று தப்பச் செய்பவர் ஆண்டவராகிய கடவுள்.
சங்கீதம் 68 : 21 (RCTA)
தம் எதிரிகளின் தலைகளைக் கடவுள் நிச்சயமாய் நொறுக்குகிறார்: பாவ வழியில் நடப்பவர்களின் தலையை உடைத்து விடுகிறார்.
சங்கீதம் 68 : 22 (RCTA)
பாசானிலிருந்து மீட்டுக்கொள்வேன்: கடலின் ஆழத்திலிருந்து மீட்டுக் கொள்வேன்.
சங்கீதம் 68 : 23 (RCTA)
அப்போது எதிரிகளின் இரத்தத்தில் உன் காலடியைக் கழுவுவாய்: உன் நாய்களுக்கு அவர்கள் இரையாவர்" என்றார் ஆண்டவர்.
சங்கீதம் 68 : 24 (RCTA)
இறைவா, நீர் பவனியாய்ச் செல்லுவதை மக்கள் அனைவரும் காண்பர். என் கடவுளும் அரசருமானவர் திருத்தலத்திற்குப் பவனியாய்ச் செல்வதை அவர்கள் காண்பர்.
சங்கீதம் 68 : 25 (RCTA)
இதோ! பாடகர்கள் முன்நடக்கின்றனர்; யாழ் வாசிப்பவர் இறுதியில் வருகின்றனர்: நடுவில் பெண்கள் தம்புரா மீட்டுகின்றனர்.
சங்கீதம் 68 : 26 (RCTA)
விழாக் கூட்டங்களில் கடவுளை வாழ்த்துங்கள்: இஸ்ராயேல் மக்களே, நீங்கள் ஆண்டவருக்குப் பாடுங்கள்" என்கின்றனர்.
சங்கீதம் 68 : 27 (RCTA)
அதோ பெஞ்சமின் எல்லாருக்கும் இளையவன் முன் நடந்து செல்கிறான், யூதாவின் தலைவர்கள் கூட்டமாய்ச் செல்கின்றனர். சாபுலோன் தலைவர்களும், நெப்தாலின் தலைவர்களும் அங்குள்ளனர்.
சங்கீதம் 68 : 28 (RCTA)
இறைவனே, உம் வல்லமையைக் காட்டியருளும்: எம் சார்பாய்ச் செயலாற்றும் இறைவனே, உம் வல்லமையைக் காட்டியருளும்.
சங்கீதம் 68 : 29 (RCTA)
யெருசலேமிலுள்ள உமது ஆலயத்தை முன்னிட்டு, மன்னர்கள் உமக்குக் காணிக்கைகள் கொண்டு வருவார்களாக.
சங்கீதம் 68 : 30 (RCTA)
நாணல்களிடையே குடியிருக்கும் கொடிய விலங்கை அதட்டும்: காளைகள் கூட்டத்தையும், மக்கள் இனத்தாரின் கன்றுகளையும் அதட்டும்.
சங்கீதம் 68 : 31 (RCTA)
வெள்ளியைத் திறையாகக் கொண்டு வந்து கட்டித் தலைபணியச் செய்யும். போரிடுவதில் மகிழ்ச்சி கொள்ளும் இனத்தாரைச் சிதறடியும். எகிப்தினின்று பெருமக்கள் வருவார்களாக: எத்தியோப்பிய மக்கள் கடவுளை நோக்கித் தம் கைகளை உயர்த்துவார்களாக.
சங்கீதம் 68 : 32 (RCTA)
மாநிலத்து அரசுகளே, கடவுளை நினைத்துப் பாருங்கள்; ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்: வான்வெளியில், ஆதிகால வானங்களிடையே பவனி செல்லும் ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்.
சங்கீதம் 68 : 33 (RCTA)
வான்வெளியில் ஆதிகால வானங்களிடையே அவர் பவனி செல்கிறார்: இதோ, அவர் தம் குரலை விடுக்கிறார்; வல்லமையுடன் குரல் விடுக்கிறார்.
சங்கீதம் 68 : 34 (RCTA)
கடவுள் வல்லவரென்று ஏற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார். இஸ்ராயேல் மீது அவர் மாண்பு விளங்குகின்றது; அவருடைய வல்லமை மேகங்களில் விளங்குகிறது.
சங்கீதம் 68 : 35 (RCTA)
தம் திருத்தலத்தினின்று புறப்படும் இறைவன், இஸ்ராயேலின் கடவுள் அச்சத்துக்குரியவர்; வல்லமை அளிப்பவர் அவரே, தம் மக்களுக்கு வல்லமை கொடுப்பவர் அவரே: கடவுள் வாழ்த்தப் பெறுவாராக.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35

BG:

Opacity:

Color:


Size:


Font: