சங்கீதம் 66 : 1 (RCTA)
மாநிலத்தாரே, நீங்களனைவரும் ஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள்.
சங்கீதம் 66 : 2 (RCTA)
அவருடைய பெயரின் மாட்சிமையைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழ் எங்கும் விளங்கச் செய்யுங்கள்.
சங்கீதம் 66 : 3 (RCTA)
இறைவனை நோக்கி, "உம் செயல்கள் எத்துணை மலைப்புக்குரியவை உமது மேலான வல்லமையின் பொருட்டு உம் எதிரிகள் உம்மிடம் இச்சகம் பேசிப் பணிகிறார்கள்.
சங்கீதம் 66 : 4 (RCTA)
மாநிலமனைத்தும் உம்மை வணங்கி உமக்குப் புகழ் பாடுவதாக: உமது பெயரின் புகழைப் பாடுவதாக" என்று சொல்லுங்கள்.
சங்கீதம் 66 : 5 (RCTA)
வாருங்கள், கடவுளுடைய செயல்களைப் பாருங்கள்: மனிதர்களிடையே அவர் செய்தவை மலைப்புக்குரியவையே!
சங்கீதம் 66 : 6 (RCTA)
கடலை அவர் கட்டாந் தரையாக்கினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தனர்: ஆகவே, அவரை நினைத்து மகிழ்வோம்.
சங்கீதம் 66 : 7 (RCTA)
தம் வல்லமையால் அவர் என்றென்றும் ஆட்சி செலுத்துகின்றார்: அவர் கண்கள் மக்கள் இனத்தாரைக் கவனித்து வருகின்றன; கலக்காரர்கள் தலை தூக்காதிருக்கட்டும்.
சங்கீதம் 66 : 8 (RCTA)
மக்களினத்தாரே, நம் இறைவனுக்கு வாழ்த்துக் கூறுங்கள்: அவரது புகழின் பெருமையைப் பறைசாற்றுங்கள்.
சங்கீதம் 66 : 9 (RCTA)
நம்மை வாழ வைத்தவர் அவரே: நம்முடைய காலடி தடுமாற அவர் விடவில்லை.
சங்கீதம் 66 : 10 (RCTA)
இறைவா, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்: வெள்ளியைப் புடமிடுவது போல நீர் எங்களை நெருப்பால் பரிசோதித்தீர்.
சங்கீதம் 66 : 11 (RCTA)
வலையில் நாங்கள் அகப்படச் செய்தீர்: பெரும் சுமையை எங்கள் முதுகினில் சுமத்தினீர்.
சங்கீதம் 66 : 12 (RCTA)
அந்நியனுக்கு நாங்கள் பணியச்செய்தீர். நெருப்பிலும் நீரிலும் நாங்கள் நடந்து சென்றோம்: ஆனால், பரந்த நாட்டுக்கு எங்களைக் கொண்டு வந்தீர்.
சங்கீதம் 66 : 13 (RCTA)
தகனப் பலிகளைச் செலுத்த உம் இல்லத்தில் நுழைவேன்: என் பொருந்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
சங்கீதம் 66 : 14 (RCTA)
துன்ப வேளையில் வாய் திறந்து நான் சொன்னது போல், நான் செய்த பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
சங்கீதம் 66 : 15 (RCTA)
கொழுத்த ஆடுகளையும், ஆட்டுக் கிடாய்களையும் தகனப் பலியாய்த் தருவேன்: காளை மாடுகளோடு செம்மறிக் கிடாக்களையும் பலியிடுவேன்.
சங்கீதம் 66 : 16 (RCTA)
கடவுளுக்கு அஞ்சுவோரே வாருங்கள், வந்து கேளுங்கள்: எனக்கு எத்துணை நன்மை அவர் செய்துள்ளார் எனக் கூறுவேன்.
சங்கீதம் 66 : 17 (RCTA)
வாய் திறந்து அவரையே நான் கூவியழைத்தேன், என் நாவோல அவரது புகழைச் சொன்னேன்.
சங்கீதம் 66 : 18 (RCTA)
தீமை செய்ய என்னுள்ளத்தில் சிந்தித்திருந்தால், என் கூக்குரலை அவர் கேட்டிருக்க மாட்டார் அன்றோ!
சங்கீதம் 66 : 19 (RCTA)
ஆனால், இறைவன் என் மன்றாட்டைக் கேட்டருளினார்: என் வேண்டுதலின் குரலுக்குச் செவிசாய்த்தார்.
சங்கீதம் 66 : 20 (RCTA)
என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் இரக்கத்தை என்னிடமிருந்து எடுத்து விடாத இறைவன் போற்றி!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

BG:

Opacity:

Color:


Size:


Font: