சங்கீதம் 65 : 1 (RCTA)
சீயோனில், இறைவா, உமக்குப் பாடல் இசைப்பது தகுதியே: உமக்¢கு அங்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் தகுதியே.
சங்கீதம் 65 : 2 (RCTA)
மன்றாட்டுகளுக்குச் செவிசாய்ப்பவரே, பாவங்களினிமித்தம் மனிதன் ஒவ்வொருவனும் உம்மிடம் வந்தாக வேண்டும்.
சங்கீதம் 65 : 3 (RCTA)
நாங்கள் செய்த பாவங்கள் எங்கள் மீது பெரும் சுமையாயுள்ளன: நீரோ அவற்றை மன்னிக்கின்றீர்.
சங்கீதம் 65 : 4 (RCTA)
நீர் தேர்ந்தெடுத்து ஏற்றுக் கொள்ளும் மனிதன் பேறு பெற்றவன்: உம் ஆலய முற்றங்களில் அவன் உறைந்திடுவான்.உமது இல்லத்தில் கிடைக்கும் நன்மைகளால் நாங்கள் நிறைவு பெறுவோமாக: உமது ஆலயத்தின் புனிதம் எமக்கு நிறைவளிப்பதாக.
சங்கீதம் 65 : 5 (RCTA)
எம் மீட்பாராகிய இறைவா, வியத்தகு அருங்குறிகளால் உமது நீதி நேர்மையைக் காட்டி எம் மன்றாட்டுக்குச் செவிசாய்க்கிறீர்; உலகின் கடையெல்லைகளில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் நீரே நம்பிக்கை: தொலைவிலுள்ள தீவுகளில் உள்ளவர்களுக்கும் நீரே நம்பிக்கை.
சங்கீதம் 65 : 6 (RCTA)
உமது வல்லமையால் மலைகளுக்கு உறுதியளிக்கின்றீர்; வல்லமையை உம் இடைக்கச்சையாகக் கொண்டுள்ளீர்.
சங்கீதம் 65 : 7 (RCTA)
கடலின் இரைச்சலை அடக்குகின்றீர்: அலைகளின் இரைச்சலையும் நாடுகளின் கொந்தளிப்பையும் அடக்குகின்றீர்.
சங்கீதம் 65 : 8 (RCTA)
உலகின் கடையெல்லைகளில் வாழும் மக்கள் அனைவரும் உம் அருங்குறிகளைக் கண்டு அஞ்சுவார்கள்: கீழ்த்திசை முதல் மேற்றிசை வரையில் அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டுகிறீர்.
சங்கீதம் 65 : 9 (RCTA)
மண்ணுலகைத் தேடி வந்தீர், அதற்கு நிறைய மழையைக் கொடுத்தீர்: அதற்கு நிறை வளம் தந்தீர். கடவுளின் ஆறு கரை புரண்டோடியது; தானியங்கள் நிரம்ப விளையச் செய்தீர்: விளையச் செய்ததோ இவ்வாறு.
சங்கீதம் 65 : 10 (RCTA)
படைசால்களில் தண்ணீர் ஓடச் செய்தீர்; மண் கட்டிகளைப் பரம்படித்து மழையால் அதை மிருதுவாக்கினீர்: முளைத்து வரும் விதையை ஆசீர்வதித்தீர்.
சங்கீதம் 65 : 11 (RCTA)
ஆண்டு முழுவதையும் உமது கருணையால் நிரப்பினீர்: நீர் செல்லும் இடத்தில் செழுமை சிந்துகிறது.
சங்கீதம் 65 : 12 (RCTA)
பாலைவெளியின் மேய்ச்சல் நிலம் கொழுமை கொண்டு விளங்குகிறது. குன்றுகளைச் சூழ்ந்து அக்களிப்பு காணப்படுகிறது.
சங்கீதம் 65 : 13 (RCTA)
மேய்ச்சல்களில் ஆடு மாடுகள் நிரம்பியிருக்கின்றன; கணவாய்களில் தானியங்கள் மிகுந்துள்ளன: இவையெல்லாம் அக்களிப்புடன் பாடல்கள் இசைக்கின்றன.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13