சங்கீதம் 64 : 1 (RCTA)
இறைவா, என் குரலைக் கேட்டருளும். என் முறைப்பாடுகளுக்குச் செவிசாய்த்தருளும்: என் எதிரியினால் விளையும் அச்சத்தினின்று என் உயிரைக் காத்தருளும்.
சங்கீதம் 64 : 2 (RCTA)
தீயவருடைய கூட்டத்தினின்று எனக்குப் பாதுகாப்பளித்தருளும்: தீமை செய்பவர் அமளியினின்று என்னைக் காத்தருளும்.
சங்கீதம் 64 : 3 (RCTA)
அவர்கள் தம் நாக்குகளைப் பட்டயத்தைப் போல் கூர்மைப் படுத்துகிறார்கள்: நஞ்சுள்ள சொற்களை அம்பு போல் எய்கிறார்கள்.
சங்கீதம் 64 : 4 (RCTA)
பதுங்கிடங்களிலிருந்து கொண்டு மாசற்றவர்களைக் காயப்படுத்தவும், எவ்வச்சமுமின்றி அவர்களை எதிர்பாராமல் வதைக்கவுமே இப்படிச் செய்கிறார்கள்.
சங்கீதம் 64 : 5 (RCTA)
தீமை செய்ய மன உறுதி கொள்ளுகிறார்கள்; மறைவாகக் கண்ணிகளை வைப்பததற்குச் சதித் திட்டம் செய்கிறார்கள்: "நம்மை யார் பார்க்க முடியும்" என்று சொல்லி கொள்ளுகிறார்கள்.
சங்கீதம் 64 : 6 (RCTA)
தீங்குகளையே நினைக்கிறார்கள்; அப்படி நினைத்த எண்ணங்களை மறைத்து வைத்துக் கொள்ளுகிறார்கள்: ஒவ்வொருவனுடைய நெஞ்சும் இதயமும் ஆழம் அறிய முடியாதவை.
சங்கீதம் 64 : 7 (RCTA)
ஆனால் இறைவன் தம் அம்புகளை அவர்கள் மீது ஏவுகிறார்: திடீரென அவர்கள் காயப்பட்டு விழுவர்.
சங்கீதம் 64 : 8 (RCTA)
அவர்களுடைய நாவே அவர்களுக்கு நாசம் விளைவிக்கிறது: அவர்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் தலையை அசைக்கிறார்கள்.
சங்கீதம் 64 : 9 (RCTA)
அனைவரும் அச்சத்தோடு ஆண்டவருடைய செயலைப் புகழ்வார்கள். அவருடைய செயலை உணர்ந்து கொள்ளுவார்கள்.
சங்கீதம் 64 : 10 (RCTA)
நீதிமான் ஆண்டவரிடத்தில் அகமகிழ்கிறான்; அவரிடத்தில் அடைக்கலம் புகுகிறான்: நேரிய மனத்தோர் அனைவரும் பெருமை பாராட்டுகிறார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10