சங்கீதம் 61 : 1 (RCTA)
இறைவா, என் குரலைக் கேட்டருளும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
சங்கீதம் 61 : 2 (RCTA)
பூமியின் கடை எல்லைகளினின்றும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன் ஏனெனில், என் நெஞ்சம் தளர்வுற்றது: நீர் என்னைக் கற்பாறையின் மீது நிறுத்தி எனக்குச் சாந்தியளிப்பீர்.
சங்கீதம் 61 : 3 (RCTA)
ஏனெனில், நீர் என் அடைக்கலமாய் உள்ளீர் விரோதிகளுக்கு எதிராக எனக்கொரு வலிமையான கோபுரமாய் இருக்கிறீர்.
சங்கீதம் 61 : 4 (RCTA)
நான் உமது கூடாரத்தில் என்றும் குடியிருப்பேனாக: உம் சிறகுகளின் ஆதரவில் அடைக்கலம் புகுவேனாக.
சங்கீதம் 61 : 5 (RCTA)
என் இறைவா, நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்: உம்முடைய பெயரை வணங்குவோருக்குரிய உரிமைப்பேற்றை எனக்கு அளித்தீர்.
சங்கீதம் 61 : 6 (RCTA)
அரசனுக்கு நீடிய ஆயுளை அளித்தருளும்: அவரது ஆயுள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்.
சங்கீதம் 61 : 7 (RCTA)
கடவுள் திருமுன் அவர் என்றும் அரசாள்வாராக: அவரைப் பாதுகாக்க உமது அருளையும் தவறாச் சொல்லையும் அனுப்பியருளும்.
சங்கீதம் 61 : 8 (RCTA)
இங்ஙனம் உமது பெயரை என்றும் புகழ்ந்து பாடுவேன்: நான் செய்த பொருத்தனைகளை எந்நாளும் செலுத்துவேன்.

1 2 3 4 5 6 7 8