சங்கீதம் 53 : 1 (RCTA)
கடவுள் இல்லை" என்று அறிவிலி தனக்குள் சொல்லிக் கொள்கிறான்; மனிதர்கள் முற்றிலும் கெட்டுப்போயினர்: அக்கிரமத்தையே செய்கின்றனர், நன்மை செய்பவன் எவனுமில்லை.
சங்கீதம் 53 : 2 (RCTA)
வானினின்று கடவுள் மனுமக்களைப் பார்க்கின்றார்: அறிவுள்ளவன், கடவுளைத் தேடுபவன் எவனாவது உண்டா எனப் பார்க்கின்றார்.
சங்கீதம் 53 : 3 (RCTA)
எல்லாரும் நெறி தவறிப் போயினர்; ஒருங்கே கெட்டழிந்தனர்: நன்மை செய்பவனே இல்லை, இல்லவே இல்லை, ஒருவன் கூட இல்லை.
சங்கீதம் 53 : 4 (RCTA)
தீமை செய்கிறவர்கள் உணவை விழுங்குவது போல் என் மக்களை விழுங்கப் பார்க்கிறார்கள்: இவர்கள் கடவுளின் பெயரைக் கூவி அழைப்பதில்லை; இவர்கள் நல்லறிவு பெறமாட்டார்களா?
சங்கீதம் 53 : 5 (RCTA)
அச்சம் கொள்ளத் தேவையில்லாத இடத்தில் இவர்கள் அச்சத்தால் நடுநடுங்கினார்கள்; ஏனெனில், என்னைத் தாக்கினவர்களின் எலும்புகளை இறைவன் நொறுக்கிவிட்டார்: அவர்கள் சிதறுண்டு போயினர்; ஏனெனில் கடவுள் அவர்களை விரட்டிவிட்டார்.
சங்கீதம் 53 : 6 (RCTA)
சீயோனிலிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு மீட்பு வராதே! கடவுள் தம் மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் போது யாக்கோபின் இனத்தார் களிகூர்வர், இஸ்ராயேல் மக்கள் அகமகிழ்வர்.
❮
❯