சங்கீதம் 52 : 1 (RCTA)
தீமை செய்வதில் வல்லவனே, தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கிறாய்?
சங்கீதம் 52 : 2 (RCTA)
எந்நேரமும் தீமையானதையே நினைத்துக் கொண்டிருக்கிறாய்: சதி செய்பவனே, உன் நா கூரிய கத்தி போன்றது.
சங்கீதம் 52 : 3 (RCTA)
நன்மை செய்வதை விடத் தீமை செய்யவே நீ விரும்புகிறாய்: நீதியானதைப் பேசுவதை விடப் பொய் பேசுவதையே விரும்புகிறாய்.
சங்கீதம் 52 : 4 (RCTA)
கபடமுள்ள நாவே, நீ தீமை விளைவிக்கும் பேச்சை எப்போதும் விரும்புகிறாய்.
சங்கீதம் 52 : 5 (RCTA)
ஆகவே கடவுள் உன்னைத் தொலைத்து விடுவார்; என்றென்றும் உன்னை அகற்றிவிடுவார்: கூடாரத்தினின்று உன்னை வெளியேற்றுவார், வாழ்வோர் பூமியினின்று உன்னை வேரோடு களைந்து விடுவார்.
சங்கீதம் 52 : 6 (RCTA)
நீதிமான்கள் இதைப் பார்த்து அச்சமுறுவர்: அப்போது அவனைப் பார்த்து நகைத்திடுவர்.
சங்கீதம் 52 : 7 (RCTA)
இதோ கடவுளைத் தன் அடைக்கலமாகக் கொள்ளாத மனிதன்! தனக்கிருந்த மிகுந்த செல்வத்தை நம்பி வாழ்ந்தவன், செய்த அக்கிரமத்தைக் குறித்துப் பெருமை பாராட்டியவன்" என்று நகைப்பர்.
சங்கீதம் 52 : 8 (RCTA)
நானோ செழித்து வளரும் ஒலிவ மரத்தைப் போல் இறைவன் இல்லத்தில் விளங்குகிறேன்: கடவுளுடைய இரக்கத்தை என்றென்றும் நம்பியுள்ளேன்.
சங்கீதம் 52 : 9 (RCTA)
இப்படி எனக்குச் செய்ததால் உம்மை என்றென்றும் போற்றுவேன்: உமது திருப்பெயர் நன்மையானது; அதை உம் புனிதர் முன்னிலையில் சாற்றுவேன்.
❮
❯