சங்கீதம் 50 : 1 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் பேசலானார்; கீழ்த்திசை முதல் மேற்றிசை வரையுள்ள பூவுலகைத் தீர்ப்புக்கு அழைக்கலானார்.
சங்கீதம் 50 : 2 (RCTA)
எழில் மிக்க சீயோனிலிருந்து கடவுள் ஒளி வீசி எழுந்தார்.
சங்கீதம் 50 : 3 (RCTA)
இதோ நம் இறைவன் வருகின்றார், மவுனமாயிரார்: எரி நெருப்பு அவர் முன் செல்ல, புயற்காற்று அவரைப் புடை சூழ எழுகின்றார்.
சங்கீதம் 50 : 4 (RCTA)
மேலுள்ள வானங்களையும் இப்பூவுலகையும் அழைக்கின்றார்: தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்க அழைகின்றார்.
சங்கீதம் 50 : 5 (RCTA)
பலிகளினால் என்னுடன் உடன்படிக்கை செய்து கொண்ட என் புனிதர்களை ஒன்று கூட்டுங்கள்' என்கிறார்.
சங்கீதம் 50 : 6 (RCTA)
வானங்கள் அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுளே நீதிபதியாய் வருகின்றார்.
சங்கீதம் 50 : 7 (RCTA)
என் மக்களே, எனக்குச் செவி கொடுங்கள், இதோ நான் பேசுகிறேன்: இஸ்ராயேலே கேள், உனக்கெதிராய் நான் சான்று பகர்வேன்: 'நானே கடவுள், உன் கடவுள் நானே.'
சங்கீதம் 50 : 8 (RCTA)
நீ இடும் பலிகளைக் குறித்து உன்னைக் கண்டிக்கவில்லை: ஏனெனில், உன் தகனப் பலிகள் எந்நேரமும் என் கண் முன்னே இருக்கின்றன.
சங்கீதம் 50 : 9 (RCTA)
உன் வீட்டில் உள்ள காளைமாட்டையா நான் கேட்கிறேன்? உன் மந்தையிலுள்ள ஆடுகளையா நான் கேட்கிறேன்?
சங்கீதம் 50 : 10 (RCTA)
காட்டிலுள்ள விலங்குகளெல்லாம் எனக்கே சொந்தம்: என் மலைகளில் மேயும் பல்லாயிரம் மிருகங்களும் என்னுடையவை.
சங்கீதம் 50 : 11 (RCTA)
வானில் உலவும் பறவைகளையெல்லாம் நான் அறிவேன்; வயல்வெளியில் மேய்வனவும் எனக்குத் தெரியும்.
சங்கீதம் 50 : 12 (RCTA)
எனக்குப் பசியெடுத்தால் உன்னிடமா சொல்வேன்? பூவுலகும் அதில் உள்ளதனைத்தும் என்னுடையது தானே!
சங்கீதம் 50 : 13 (RCTA)
எருதுகளின் சதையையா நான் உண்பேன்? செம்மறிகளின் இரசத்தையா நான் குடிப்பேன்?
சங்கீதம் 50 : 14 (RCTA)
இறை புகழ்ச்சி எனும் பலியை ஆண்டவருக்குச் செலுத்து: உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்து.
சங்கீதம் 50 : 15 (RCTA)
துன்பநாளில் என்னைக் கூப்பிடு: உன்னை விடுவிப்பேன், நீ என்னை மேன்மைப்படுத்துவாய்.
சங்கீதம் 50 : 16 (RCTA)
பாவிகளுக்கோ கடவுள் கூறுகிறார்: 'என் கட்டளைகளை நீ ஏன் எடுத்துரைக்கிறாய்? என் உடன்படிக்கையைப் பற்றி நீ ஏன் பேசவேண்டும்?
சங்கீதம் 50 : 17 (RCTA)
ஒழுக்கத்தைப் பகைப்பவன் அன்றோ நீ? என் வார்த்தையைப் புறக்கணித்தவன் அன்றோ நீ?
சங்கீதம் 50 : 18 (RCTA)
திருடனைப் பார்த்தால் அவன் பின்னே ஓடுகிறாய்: விபசாரிகளோடு உறவு கொள்கிறாய்.
சங்கீதம் 50 : 19 (RCTA)
நீ வாய்திறந்தால் வெளிப்படுவது தீமையே: உன் நாவிலிருந்து புறப்படுவது வஞ்சகமே.
சங்கீதம் 50 : 20 (RCTA)
கூட்டத்தில் உட்கார்ந்து நீ பேசுவதெல்லாம் உன் சகோதரனுக்கெதிராக உன் சொந்த சகோதரனை நிந்தைக்குள்ளாக்குகிறாய்!
சங்கீதம் 50 : 21 (RCTA)
இப்படியெல்லாம் நீ செய்ய நான் வாளாவிருப்பதா? நானும் உன்னைப் போலென்று நினைத்தாயா? உன்னைக் கண்டித்து நீ செய்ததையெல்லாம் எடுத்துச் சொல்கிறேன், பார்!
சங்கீதம் 50 : 22 (RCTA)
கடவுளை நினையாதவர்களே, நீங்கள் இதைக் கண்டுணருங்கள்; இல்லையேல், நான் உங்கள் உயிரைப் பறிப்பேன்: என் கையில் வந்து விழும் போது உங்களைக் காப்பவர் யாரும் இரார்!
சங்கீதம் 50 : 23 (RCTA)
இறை புகழ்ச்சி என்னும் பலி இடுபவனே எனக்கு மதிப்புக் கொடுப்பவன்: நேர்மையோடு நடப்பவனுக்கு இறைவன் தரும் மீட்பைக் காட்டுவேன்'.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23