சங்கீதம் 43 : 1 (RCTA)
இறைவா, புனிதமற்ற மனிதர்க்கு எதிராக என் நியாய வழக்கை விசாரித்து எனக்கு நீதி வழங்கும்: தீயவனும் வஞ்சகனுமான மனிதனிடமிருந்த என்னை விடுவிப்பீராக.
சங்கீதம் 43 : 2 (RCTA)
ஏனெனில், இறைவா, நீரே என் வலிமை; ஏன் என்னைத் தள்ளிவிட்டீர்? பகைவனால் துன்புற்றவனாய் நான் துயருடன் அலைவானேன்?
சங்கீதம் 43 : 3 (RCTA)
உமது ஒளியை வீசியருளும், உமது உண்மையைக் காட்டியருளும்: அவையே என்னை வழி நடத்தி உமது புனித மலைக்கும் உறைவிடத்துக்கும் கொண்டு சேர்க்கும்.
சங்கீதம் 43 : 4 (RCTA)
இறைவனின் பீடத்துக்குச் செல்வேன்; எனக்கு அகமகிழ்வும் அக்களிப்பும் தரும் இறைவனிடம் செல்வேன்: இறைவா, என் இறைவா, வீணை கொண்டு உமக்குப் புகழ்பாடுவேன்.
சங்கீதம் 43 : 5 (RCTA)
என் நெஞ்சே, ஏன் தளர்ச்சியுறுகிறாய்? ஏன் கலங்குகிறாய்? இறைவன் மீது நம்பிக்கை வை: என் முகம் மலரச் செய்து மீட்பளிப்பவரான என் இறைவனை மீண்டும் போற்றிப் புகழ்வேன்.
❮
❯