சங்கீதம் 41 : 1 (RCTA)
ஏழை எளியவனைக் குறித்து கவலை உள்ளவன் பேறு பெற்றவன்: துன்ப நாளில் ஆண்டவர் அவனுக்கு மீட்பளிப்பார்.
சங்கீதம் 41 : 2 (RCTA)
ஆண்டவர் அவனைக் காத்துக்கொள்வார். நீண்ட ஆயுளை அவனுக்கு அளிப்பார். உலகில் அவனுக்கு நற்பெயர் அளிப்பார், பகைவரின் விருப்பத்திற்கு அவனைக் கையளிக்க மாட்டார்.
சங்கீதம் 41 : 3 (RCTA)
அவன் நோயுற்றுப் படுக்கையில் இருக்கையில், ஆண்டவர் அவனுக்குத் துணை செய்வார்.
சங்கீதம் 41 : 4 (RCTA)
ஆண்டவரே, என் மீது இரக்கம் வையும், என்னைக் குணப்படுத்தும்,. உமக்கெதிராய்ப் பாவம் செய்தேன்' என்று நான் வேண்டுகிறேன்.
சங்கீதம் 41 : 5 (RCTA)
என் எதிரிகள் என்னைப் பற்றித் தீயது பேசுகின்றனர். என்று அவன் செத்தொழிவான்? அவன் பெயர் என்று ஒழிந்துபோகும்? என்கின்றனர்.
சங்கீதம் 41 : 6 (RCTA)
என்னைப் பார்க்க வருபவன் பேசுவதோ இனிய சொற்கள். ஆனால் அவன் நெஞ்சம் நினைப்பதோ வஞ்சகம், வெளியிற் போனதும் அதைக் காட்டி விடுகிறான்.
சங்கீதம் 41 : 7 (RCTA)
என்னைப் பகைப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி எனக்கெதிராய் முறுமுறுக்கின்றனர். எனக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்.
சங்கீதம் 41 : 8 (RCTA)
பேய்ப் பிணியொன்று அவனைப் பீடித்திருக்கிறது. படுத்த படுக்கையிலிருந்து ,இனி அவன் எழும்ப மாட்டான் என்கின்றனர்.
சங்கீதம் 41 : 9 (RCTA)
நான் நம்பியிருந்த நண்பன், என்னோடு உணவு கொண்ட அந்த நண்பனுங் கூட, என்னை மிதிக்கக் காலைத் தூக்குகிறான்.
சங்கீதம் 41 : 10 (RCTA)
நீரோ ஆண்டவரோ, என்மீது இரக்கம் வையும். நோயிலிருந்து நான் எழுந்திருக்கச் செய்யும்; அப்போது வஞ்சகம் தீர்த்துக் கொள்வேன்.
சங்கீதம் 41 : 11 (RCTA)
என் எதிரி என் மேல் வெற்றிக் கொண்டு மகிழ்ச்சி கொள்ளா விட்டால், உமது அருள் எனக்குண்டென்று அறிந்து கொள்வேன்.
சங்கீதம் 41 : 12 (RCTA)
தீமை எனக்கெதுவும் நேராதபடி காத்துக்கொள்வீர். என்றென்றும் உம் முன்னிலையில் என்னை நிறுத்தி வைப்பீர்.
சங்கீதம் 41 : 13 (RCTA)
இஸ்ராயேலின் இறைவனாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக. என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக! ஆமென், ஆமென்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13