சங்கீதம் 4 : 1 (RCTA)
இறைவா, என் சார்பாக நின்று நீதியை விளங்க வைப்பவரே, உம்மை நான் கூப்பிடும் போது எனக்குச் செவிசாய்த்தருளும்: நான் இடுக்கண் உற்றபோது எனக்கு ஆறுதல் அளித்தீர்; என் மீதிரங்கி என் மன்றாட்டைக் கேட்டருளும்.
சங்கீதம் 4 : 2 (RCTA)
மானிடரே, இன்னும் எவ்வளவு காலம் கல்நெஞ்சராயிருப்பீர்கள்? ஏன் வீணானதை நாடுவீர்கள்? பொய்யானதைத் தேடிச் செல்வீர்கள்?
சங்கீதம் 4 : 3 (RCTA)
ஆண்டவர் தம் அடியார்களுக்காக வியப்புக்குரியன செய்கிறார், இதை மனத்தில் வையுங்கள்: ஆண்டவரை நான் கூப்பிடும் போது எனக்கு அவர் செவிசாய்க்கிறார்.
சங்கீதம் 4 : 4 (RCTA)
அச்சமுறுங்கள், பாவத்தை விடுங்கள்: இரவிலும் உள்ளத்தில் இறைவனைத் தியானித்து அமைதியாயிருங்கள்.
சங்கீதம் 4 : 5 (RCTA)
நேரிய மனத்தேடு பலியிடுங்கள்: கடவுளை நம்புங்கள்.
சங்கீதம் 4 : 6 (RCTA)
நன்மையானதை நமக்குக் காட்டுபவன் யார்?" என்கின்றனர் பலர்: எங்கள் பக்கமாய் உமது முகத்தைத் திருப்பும், ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும்.
சங்கீதம் 4 : 7 (RCTA)
கோதுமையும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில், மக்கள் அடையும் மகிழ்ச்சியினும் மேலான மகிழ்ச்சி என் இதயத்தில் பொங்கச் செய்தீர்.
சங்கீதம் 4 : 8 (RCTA)
கலக்கமின்றி நான் இனிப் படுத்துறங்க முடியும்: ஏனெனில், ஆண்டவரே, நான் பாதுகாப்பில் வாழச் செய்கின்றீர்.
❮
❯