சங்கீதம் 39 : 1 (RCTA)
நாவினால் பாவம் செய்யாதவாறு என் போக்கைக் கவனித்துக் கொள்வேன்: தீயவன் என் எதிரில் இருக்கும் வரையில் என் வாய்க்குக் கடிவாளம் இடுவேன்" என்றேன்.
சங்கீதம் 39 : 2 (RCTA)
வாய் பேசாது வாளா இருந்தேன்; பயனொன்றும் இல்லை: என் துயரமோ மீண்டும் கிளர்ந்தெழுந்தது.
சங்கீதம் 39 : 3 (RCTA)
என் உள்ளம் என் அகத்தே எரிச்சல் கொண்டது: நினைக்க நினைக்கப் பற்றி எரிந்தது, அப்போது என் நா பேசியதாவது.
சங்கீதம் 39 : 4 (RCTA)
ஆண்டவரே, என் வாழ்வின் முடியையும் என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்.
சங்கீதம் 39 : 5 (RCTA)
எவ்வளவு நிலையற்றது என் வாழ்வு' இதை அறிவேனாக. (6) இதோ! என் வாழ்நாள் இரண்டொரு கைமுழம் போல இருக்கச் செய்தீர்: உம்முன்னே என் வாழ்க்கை ஒன்றுமேயில்லை; எம் மனிதனும் ஒரு சிறு மூச்சுப் போல் இருக்கின்றான்.
சங்கீதம் 39 : 6 (RCTA)
(7) வெறும் நிழலைப் போல கடந்து போகிறான் எம்மனிதனும்; அவன் கலக்கப்படுவதெல்லாம் வீணே: பொருளைச் சேர்க்கிறான், ஆனால் யார் அதை அடைவர் என அறியான்.
சங்கீதம் 39 : 7 (RCTA)
(8) ஆகவே ஆண்டவரே, நான் எதிர்பார்ப்பது என்ன? உம்மிடமே என் நம்பிக்கையெல்லாம்!
சங்கீதம் 39 : 8 (RCTA)
(9) என் தீவினைகள் அனைத்தினின்றும் என்னை விடுவித்தருளும்: மூடரின் நிந்தைக்கு என்னை ஆளாக்காதேயும்.
சங்கீதம் 39 : 9 (RCTA)
(10) பேசாமலிருந்தேன், வாய் திறக்கவில்லை: ஏனெனில், எனக்கு நிகழ்ந்ததெல்லாம் உம்மாலேயே!
சங்கீதம் 39 : 10 (RCTA)
(11) நீரெனக்கு அனுப்பிய வாதையை என்னிடமிருந்து அகற்றிவிடும்: உமது கரத்தின் தாகுதலால் நான் நிலை குலைந்து போகிறேன்.
சங்கீதம் 39 : 11 (RCTA)
(12) குற்றத்தின் பொருட்டே நீர் ஒருவனைத் தண்டிக்கிறீர்: அவன் விரும்பும் பொருளையெல்லாம் அரிப்பது போல அழித்து விடுகிறீர்; மனிதன் ஒரு சிறு மூச்சேயன்றோ!
சங்கீதம் 39 : 12 (RCTA)
(13) ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீருக்குப் பாராமுகமாயிராதேயும். உம் முன்னிலையில் நான் அந்நியனாயுள்ளேன்: என் முன்னோர் அனைவர் போல நானும் வழிப்போக்கனே.
சங்கீதம் 39 : 13 (RCTA)
(14) நான் போய் விடு முன்பே, உலகிலிருந்து மறையு முன்பே, உம் கோபப் பார்வையை என்னிடமிருந்து திருப்பி, நான் அமைதியிலேயே உயிர் வாழச் செய்யும்.'

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13